புதன், 6 மே, 2020

பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை உயர்தியதையும் திரும்ப பெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். - ஜி.கே.வாசன்



தமிழக அரசு – மதுக்கடைகளை திறக்காமல் இருப்பதற்கும், தற்போது உயர்த்தப்பட்ட பெட்ரோல். டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை உயர்தியதையும் திரும்ப பெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். 


மதுக்கடைகளை திறப்பதால் உடல்நலன் கெடும் என்பது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படும். மேலும் மது குடிக்காமல் இருந்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மது குடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு கவனத்தில் மொள்ள வேண்டும். 

அதே போல பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும். 

எனவே தமிழக அரசு மதுக்கடைகளை மே 7 ஆம் தேதி திறக்க அறிவித்ததையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியதையும் திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக