திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மனிதநேயத்தைச் சாகடித்து, பிறப்பால் மனிதரைப் பிளவுபடுத்துவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட பாஜக வை முதல்வர் பழனிசாமி பின்பற்றுவது ஏன்? - தி.வேல்முருகன்


மனிதநேயத்தைச் சாகடித்து, பிறப்பால் மனிதரைப் பிளவுபடுத்துவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட பாஜக வை முதல்வர் பழனிசாமி பின்பற்றுவது ஏன்? - தி.வேல்முருகன்
 
ஓட்டுக்காக அவர் மலையாள ஈழவா, திய்யா ஜாதிகளை தமிழ் ஜாதிகளாக்கி, வலிந்துபோய் BC சான்றிதழ் வழங்கியதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அதை அவர் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இந்தியா என்பதுநேற்று உருவானது. முந்தாநாள் ஆங்கிலேயர் அதை விட்டுச் சென்றதும், அவர்களுக்குமுன்பிருந்த தேசிய மொழி இனக் குழுப் பகுதிகள் (நாடுகள்) பழையபடியேதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வடமேற்குப் பகுதியினரான குஜராத்திகள், மார்வாரிகள், பார்சிகள் மற்றும் ஆரிய மேல்ஜாதியர்நயவஞ்சகமாக அனைத்து தேசிய மொழி இன நாடுகளையும் இந்தியா எனஒன்றாக்கி, அடக்கி ஆள்கின்றனர். 

இதனால் சிறுமைப்பட்ட, இன்னல்பட்ட 4500க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் (ஜாதிகள்) சமூக நீதி கோருகின்றன. அதன்படி, அதிகாரத்தில், கல்வியில், வேலைவாய்ப்பில் வகுப்புவாரி-ஜாதிவாரி பிரதிநிதித்துவம் கேட்கின்றன. ஆனால் அதைச்சரிவர நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் தொடர்கிறது. இப்போது பாஜக மோடி ஒன்றியஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த ஏமாற்று மோசடியாக பரிணமித்திருக்கிறது. போராடிப் பெற்ற இடஒதுக்கீடுகளைக் காலி செய்வதே மோடியின் முழு நேரப் பணியாகியிருக்கிறது. முதலில் “நீட்”டை நுழைத்து மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் சேர விடாதபடிச் செய்தார். பிறகு மருத்துவ மேற்படிப்பிலும் இருந்த இடஒதுக்கீட்டை ஒழித்தார். கிரீமிலேயர் என்ற அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லாத பொருளியல் அளவீட்டின் படியான 10 விழுக்காடுஇடஒதுக்கீட்டை முன்னேறிய மேல் ஜாதியருக்குக் கொடுத்தார். இடஒதுக்கீட்டை அறவே ஒழித்துக்கட்டும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்குத்தாரை வார்த்து வருகிறார். 

புதிய கல்விக் கொள்கை என புராண, இதிகாசகால குருகுலக் கல்வி மற்றும் ராஜாஜியின் குலக் கல்வியைக் கொண்டுவந்து, இடஒதுக்கீடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி, வேலைக்கே ஆகாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார். இத்தகைய துரோகச்செயலை மோடி 130 கோடி மக்களுக்கும் செய்கிறார் என்றால் பழனிசாமி 8 கோடி தமிழர்களுக்கும் செய்கிறார் என்பதே உண்மை. மோடியின் செயல்களை பழனிசாமி ஒப்புக்கு எதிர்த்துப் பேசுகிறாரே தவிர, அவை நடைமுறைக்கு வந்துவிடாமல் தடுப்பதில்லை. இதிலிருந்து, இந்தியாவை பின்னோக்கிச் செலுத்தும் மோடியின் பிற்போக்குச் செயல்களை பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார் என்பதே உண்மை. அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லாத பொருளியல் அளவீட்டின் படியான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை முன்னேறிய மேல்ஜாதியருக்கு மோடி கொடுத்ததைப் போல, சட்டவிரோதமாக ஈழவா மற்றும் திய்யா மலையாள இன மக்களைத் தமிழர்களாகக் குறிப்பிட்டு, BC பட்டியலில் சேர்த்திருப்பதாக வலிந்துபோய் அம்மக்களிடம் அதற்கான சான்றை வழங்கியிருக்கிறார் பழனிசாமி. 

மூச்சுக்கு மூச்சு இது அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லும் பழனிசாமி, அந்த அம்மா செய்யாத, அவருக்குத் தலைவரான எம்ஜிஆர் செய்யாத, அவருக்கும் தலைவரான, கட்சியின் பெயரிலும் கொடியிலும் பதித்துள்ள அறிஞர் அண்ணாவே செய்யாத செயல் அல்லவா இது. இதை பழனிசாமி செய்கிறார் என்றால், காலம் நேரத்துக்கேற்றபடியான தனது புதிய எஜமான் மோடியின் கட்டளைப்படியன்றி வேறென்ன? தமிழ்நாடு முழுவது முள்ள ஈழவா, திய்யா என்கிறார் பழனிசாமி. இவர்கள் மட்டுமா தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்? 

எல்லா மாநிலத்த வரும்தான் இருக்கிறார்கள். கொரோனா காரணமாக வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குநடையைக் கட்டினார்களே, மொத்தம் சுமார் ஒரு கோடிப் பேரான அவர்களெல்லாம் தமிழர்கள் என்று BC சான்றிதழ் கொடுப்பாரா பழனிசாமி? தமிழர்கள் பறையர் குறவர் பள்ளராக இருந்தாலும் கள்ளராகா இருந்தாலும் இன்னும் ஏனைய தமிழ் இன குடியில் பிறந்தவராக இருந்தாலும் மாற்று மாநிலத்தில் போய் தங்கி இருந்தால் அல்லது வேலை பார்த்தாள் அவர்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் இட ஒதுக்கீடு அடிப்படையில் OC என்று தான் கொடுக்கும்.. அங்கே SC,ST,MBC,BC, முறையில் கொடுக்காது, அந்தந்த மாநில மக்களுக்கு அந்தந்த முறையில் இட ஒதுக்கீட்டை கொடுக்கும். ஆனால் தமிழகத்தில் தலைகீழாக உள்ளது இது தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல் . கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவிலும் கேரளத்தைஒட்டிய கரையோரப் பகுதிகளில் தான் ஈழவா, திய்யா ஜாதியினர் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள்.  
அவர்கள்  தொழில் கரணமாக இங்கு வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் ரப்பர் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல் கூடலூர் நீலகிரி கோத்தகிரிகுன்னூர் மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் கேரளா போன்ற பகுதிகளிலிருந்து அழைத்துவரப்படுகின்றனர். அதுபோல் செங்கோட்டை தாலுகாவில் கேரள எல்லையோரத்திலும்நீண்ட காலமாகா வந்து தொழில் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாரும்தமிழ் பேசுவதில்லை; அவர்களின் தாய்மொழியான மலையாளத்தில் தான் பேசுகின்றனர். 

இவர்களைப் பற்றியஎந்த விவரமும் பழனிசாமிக்கும், ஏன், மோடிக்கே கூட தெரியாது என்றுஅடித்துச் சொல்ல முடியும். அப்படியிருக்க, வலிந்துபோய் இவர்கள் தமிழர்கள் என்றும் BCக்கள் என்றும் சான்றிதழ்வழங்குவது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே BCயாகவும் SCயாகவும் உள்ள தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கிலானோர், ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் மறுக்கப்பட்டோ அல்லது இழுத்தடிக்கப்பட்டோ வருவதைப் பார்க்கிறோம். இதனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் பறிபோகின்றன. அந்த வாய்ப்புகளை தமிழரல்லாத பிற மொழியினர் அபகரித்தால் பரவாயில்லை என்பது போலத்தான் இருக்கிறது, ஈழவா, திய்யாக்களுக்கு பழனிசாமி வலிந்துபோய் BCசான்றதழ் கொடுத்திருப்பதும். ஈழவா, தீயாக்களுக்கு கேரளத்தில் மட்டுமல்ல; இந்திய அளவிலும் ஜாதி அடிப்படையில் சலுகை பெறுவதற்கான வாய்ப்பு அதாவது ஜாதிச் சான்றிதழ் கண்டிப்பாகஉண்டு. 

அப்படியிருக்கையில், தமிழர் என்றுகுறிப்பிட்டு அவர்களுக்கு BC சான்றிதழ்வலிந்துபோய் வழங்குவது அரசியல் உள்நோக்கமன்றி வேறல்ல. தற்பொழுது மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட ஈழுவாசாதியினரும் தமிழக வேலைவாய்ப்பு மூலம் இனி அதிகார உச்சத்தில் தொடர்வார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னர் பனை, தென்னைதொழிலில் ஈடுபட்ட ஜாதிகளாக அறியப்படுபவை தமிழ்நாட்டில் நாடார், சாணார், கிராமணி மற்றும் கேரளத்திலும் நாடார், ஈழவா, திய்யா ஆகியவை.இவை அனைத்தும் ஒன்றிணைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மோடியின் உள்நோக்கமா? அந்த உள்நோக்கத்தை நிறைவேற்றும் எடுபிடியாகத்தான் செயல்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? 

இதில் சுயாதீனமாகத்தான் செயல்படுகிறார் பழனிசாமி என்றால், அவர் சட்டநாதன்,மண்டல் ஆணையங்களில் பட்டியலிடப்பட்ட தமிழ் ஜாதிகள் எவை என்பதைப்பார்க்க வேண்டும்; அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பைத்தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். அப்படித்தான் தமிழ் ஜாதிகளைப் பற்றி அவர்தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர, சூழ்ச்சிகளையும்சதிவேலைகளையுமே தனது அரசியல்பணியாகக் கொண்ட மோடியின் கட்டளைப்படி நடந்து தமிழினத்துக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடாது. மனிதநேயத்தைச் சாகடித்து, பிறப்பால் மனிதரைப் பிளவுபடுத்துவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டபாஜகவை முதல்வர் பழனிசாமி பின்பற்றுவதுஏன்? ஓட்டுக்காக அவர் மலையாள ஈழவா, திய்யா ஜாதிகளை தமிழ் ஜாதிகளாக்கி,வலிந்துபோய் BC சான்றிதழ் வழங்கியதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அதை அவர்திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! வன்னியர் கள்ளர் மறவர் தேவர் அகமுடையார் பறையர் பள்ளர் உழவர் உடையார் முதலியார்செட்டியார் இன்னும் தமிழ் இனக் குழுவில் இருக்கக்கூடிய நபர்களுடைய வேலைவாய்ப்பு இவர்களால் பறிபோய் கொண்டிருக்கிறது தமிழ் இனமே விழித்துக்கொள்.. தமிழகத்தில் வசிக்கக்கூடிய மலையாள மொழியை தாய்மொழியாககொண்ட 10 லட்சம் ஈழவா சாதியினர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்க முயற்சி செய்து அரசாணையைதமிழக அரசு வெளியிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.. எனவே தமிழக முதல்வர்இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக