புதன், 5 ஆகஸ்ட், 2020

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றுவோம். - உதயநிதி ஸ்டாலின்


முத்தமிழறிஞரின் நினைவைப் போற்றுவோம்.- உதயநிதி ஸ்டாலின்

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்திலும் ஓய்வின்றி பணியாற்றி இவரும் கழக இளைஞரணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட தனது சகோதரர்களுக்கு வணக்கம்

நம்முடைய கழகத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட பெருமைக்குரிய கழக இளைஞரணி அமைப்பு ஒன்றிய கிளைகள் பகுதி-நகர-பேரூர் வட்டங்கள்... என விரிவடைந்து வருவதும், அதற்கான பணிகளில் நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளதும் மன நிறைவைத் தருகிறது அதேநேரம், முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளாகவும், நம் கழகத் தலைவர் அவர்களின் அன்புக்குரியவர்களாகவும் திகழும் நீங்கள் உங்களுடைய உடல் நலத்திலும் குடும்பத்தினரின் பாதுகாப்பிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

நம்மையெல்லாம் வளர்த்தெடுத்து, சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவராக தி.மு.கழகத்தை வழிநடத்தி அதனை மாபெரும் மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரில் தவிக்கவிட்டுச் சென்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன

நம் கழகத் தலைவர் அடிக்கடி சொல்வதுபோல நம் உயிரினும் உணர்விலும் கலந்துவிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்றும் நம்முடன்தான் இருக்கிறார். அவர் முன்னெடுத்த பணிகள் நம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டு, நாமும் அவர் வழியில் செயல்படுகின்றோம்

இந்த சூழலில் நம் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் அறிவுறுத்தலின்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கத் தயாராகி வருகிறோம்

தமிழ்ச் சமூகம் ஏற்றம் பெற தன் வாழ்நாளையே காணிக்கையாக தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் அவர் நிகழ்த்திய மகத்தான மக்கள் பணிகளை, சாதனைகளை நாம் மக்களிடம் கொண்டுச்சேர்க்க வேண்டும். கலைஞர் பணிகளை மக்கள் நன்கு அறிவர் என்றாலும் அதனை நினைவுபடுத்த வேண்டியது நம்முபைய தலையாயக் கடமையாகும் எனவே, கலைஞர் நினைவு நாளான வரும் ஆகஸ்ட் 7 அன்று

கழக இளைஞரணி தம்பிமார்கள் நம் கலைஞரின் புகைப்படங்கள் பொது இடங்களில் வைத்து மாலை அணிவித்தும், மலர்களால் அலங்கரித்தும் மரியாதை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமன்றி, கலைஞரின் சாதனைகளை விளக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தி நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் அந்த பதாகைகளைக் கலைஞரின் புகைப்படத்துக்கு அருகே மக்கள் பார்வைக்கு வைப்பது இன்னும் சிறப்பு கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் தான் ஏற்றுக்கொண்ட சமூக நீதி வழியிலான பணிகள் மூலம் எண்ணிலடங்கா சாதனைகளை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். ஆகவே, ஒரு இடத்தில் சொல்லப்படும் அவருடைய சாதனையை அருகாமையிலுள்ள வேறொரு இடத்தில் சொல்வதைத் தவிர்த்து அவரின் பெருமைகளைப் பரவலாக அனைவரும் அறியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களான சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைஎளிய மக்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளில் உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கொரோனா நேரம் என்பதால் இந்த நிகழ்வுகளின் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மூலம் செயல்படுத்த வேண்டுமாய் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்வுகளின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைத் தத்தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரவும். மேலும் 9171091710 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பவும்

திமுக தலைவர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக