வியாழன், 31 டிசம்பர், 2020

இந்தியா பூட்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் 2020 நவம்பர் 19 அன்று இந்திய அரசாங்கத்திற்கும் பூட்டான் அரசாங்கத்திற்கும் இடையிலான பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. .

பூமியின் தொலை உணர்வு, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் ஆராய்ச்சி, விண்கல பயன்பாடு, விண்வெளி அமைப்புகள், தரைகட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றில் இந்தியாவும், பூட்டானும் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இது இரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்.

புள்ளி வாரியான விளக்கம்:

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்


 

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நேர்மையான இந்தப் போராட்டத்தில், மக்களும் உடனடியாக ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டம்,  உலகின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. 

ரஜினியை அரசியலில் நுழைத்து தமிழக பா.ஜ.க. வை தமிழ் மக்களிடம் விற்பனை செய்து விடலாம் என்கிற அணுகுமுறைக்கு கடுமையான மரண அடி கிடைத்திருக்கிறது.- கே.எஸ். அழகிரி


கடந்த 2017 டிசம்பர் 31 இல் தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசும் போது அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் நான் முதல்வராக மாட்டேன். நல்லவர் ஒருவரை முதல்வராக அமர்த்தி ஆட்சியை வழிநடத்துவேன் என்று கூறியது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே வெளிவந்ததால் தனது நிலையை, மனப்போக்கின்படி அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது.  பிறகு ஒரு கட்டத்தில் மக்களிடையே எழுச்சி உருவாக வேண்டும். அதை ரசிகர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

புதன், 30 டிசம்பர், 2020

கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்

 



கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி தலைவர் கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று தலைவர் கோவை செழியன் அவர்களின் 90-வது பிறந்தநாளை கொண்டாட கொங்கு மண்டலம் முழுவதும் ஆங்காங்கே அவருடைய உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் செய்யப்பட்டது. கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று இராசிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவை செழியன் அவர்களுக்கு மரியாதை செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் அராஜக போக்கில் தடுத்து அகற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம். 

தொல்லியல்துறை அலுவலர் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்து - தமிழ்வழி பயின்ற மாணவர்களை புறக்கணித்த தமிழ்நாடு அரசுப்பணியாளர்

 "தொல்லியல்துறை அலுவலர் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்து - தமிழ்வழி பயின்ற மாணவர்களை புறக்கணித்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு கடும் கண்டனம்" -   மு.க.ஸ்டாலின் அறிக்கை.

“தொல்லியல் அலுவலருக்கான தேர்வில் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயின்றவர்களுக்கு வேலையில்லை” என்று, அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

வன்னியர் தனி இட ஒதுக்கீடு: ஒன்றிய அளவிலான போராட்டம் வெல்லட்டும் - அதை இரு சக்கர வாகன பேரணி சொல்லட்டும்! - DR.S.ராமதாஸ்

வன்னியர் தனி இட ஒதுக்கீடு: ஒன்றிய 
அளவிலான போராட்டம் வெல்லட்டும் - அதை 
இரு சக்கர வாகன பேரணி சொல்லட்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மடல்   

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பாக அறவழிப் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் மக்கள்திரள் போராட்டம், பேரூராட்சி அலுவலகங்கள் முன் அறப்போராட்டம் ஆகிய 3 நிலைப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள நாம், அடுத்தக்கட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அரசுக்கு மனு கொடுக்கும் நிகழ்வுக்கு ஆயத்தமாகி வருகிறோம்.

காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுத்திடவும் - பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் முன்வர வேண்டும்.- மு.க.ஸ்டாலின்

"திமுக ஆட்சி அமைந்ததும் பெண் குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க மாவட்டரீதியாக தனி நீதிமன்றம் - பாதிக்கப்பட்டோர் துணிந்து புகார் கொடுக்க ரகசிய பிரிவு உருவாக்கப்படும்" - மு.க.ஸ்டாலின் அறிக்கை.

இன்று “தி இந்து” ஆங்கில நாளிதழின் நான்காவது பக்கத்தில், “And, they all fall down” என்ற முழுப்பக்கக் கட்டுரை - சென்னை மாநகரத்தில் 13 வயதே நிரம்பிய பெண் குழந்தையின் பிஞ்சுப் பருவம் கொடூரமாகச் சூறையாடப்பட்டதை விளக்கியுள்ளதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இதயம் படபடக்கும் - கண்கள் குளமாகி விடும். அப்படியொரு சமூகச் சீரழிவு தலைநகர் சென்னையில் நடைபெற்றுள்ளது. வடசென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் உறவினர்களின் துணையோடு சின்னஞ்சிறு குழந்தை சீரழிக்கப்பட்டுள்ளது பெண் குழந்தைகளின் பாதுகாப்பின் மீது மிகப்பெரிய அச்ச உணர்வினை அனைத்து தாய்மார்களின் உள்ளங்களிலும் - அனைவரது இல்லங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்திய முதல்நிலைப் போட்டித்தேர்வை எழுதிய சுமார் 2500 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


 மாவட்ட நீதிபதிகள் தேர்வில் 6 பேர் மட்டுமே 

தேர்ச்சி: தேர்வு முறையை மாற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 32 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்திய முதல்நிலைப் போட்டித்தேர்வை எழுதிய சுமார் 2500 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்வுமுறையில் உள்ள குழப்பங்கள் தான் இதற்கு காரணம் ஆகும்.

வியாழன், 24 டிசம்பர், 2020

இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும்; சென்னை மாநகராட்சியின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்! - வைகோ


சென்னை மாநகராட்சியின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்! 

- வைகோ அறிக்கை

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால் வருமானம் இன்றிப் பரிதவிக்கும் மக்கள் மீது, மேலும் ஒரு அடி விழுந்து இருக்கின்றது. 1000 பேருக்கு மேல் கூடுகின்ற நிகழ்ச்சிகளை நடத்துவோர், 20000 ரூபாய் கட்ட வேண்டும் என, கூட்டத்திற்கு ஏற்றவாறு பல வகையான கட்டணங்களையும் அறிவித்து இருக்கின்றார்கள். இதனால், அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, திருமணம், கோவில் திருவிழா என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

திமுகவின் அரசியல் புரோக்கர் எஸ்ரா.சற்குணம் அவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும். - டாக்டர் திரு.எல்.முருகன்


 திமுகவின் அரசியல் புரோக்கர் எஸ்ரா.சற்குணம் அவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும். - டாக்டர் திரு.எல்.முருகன்

தேர்தல் சமயம் வந்தாலே, ஏதோ கிடைக்கும் காசுக்காக, பல பேருக்கு காசு வாங்கிக் கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செயல்படும் எஸ்ரா.சற்குணம் அவர்கள், மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.  உலகமே போற்றுகின்ற உத்தமத் தலைவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, உங்களைப் போன்ற குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையான ஒன்று.

புதன், 23 டிசம்பர், 2020

திருத்தப்பட்ட டி.டி.எச் வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


 பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியாவில் வீட்டுக்கு நேரடி (டி.டி.எச்) சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை திருத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1.) தற்போதைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது டி.டி.எச் க்கான உரிமம் இப்போது 20 வருட காலத்திற்கு வழங்கப்படும்.

2.) உரிம கட்டணம் ஜி.ஆரின் 10 சதவீதத்திலிருந்து ஏ.ஜி.ஆரின் 8 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி.ஆரிடமிருந்து ஜி.எஸ்.டி கழிப்பதன் மூலம் ஏ.ஜி.ஆர் கணக்கிடப்படும்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

இந்த போராட்டமே இறுதியாகட்டும்!.... 20% இடஒதுக்கீடு உடனே அறிவிக்கப்பட பேரூராட்சிகள் முன் திரள்வாய்!! - DR.S.ராமதாஸ்

இந்த போராட்டமே இறுதியாகட்டும்!.... 
20% இடஒதுக்கீடு உடனே அறிவிக்கப்பட 
பேரூராட்சிகள் முன் திரள்வாய்!!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! - DR.S.ராமதாஸ்

நம் சாதனைகளை நம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை இப்போது வாரத்துக்கு வாரம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் தொடங்கியதிலிருந்து இன்று வரை நமது வலிமை அறவழியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

SC பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமே எமது உயிர் மூச்சு ! தேவேந்திரர்களின் இலட்சியத்தை அடைய ஜனவரி– 6 மதுரையில் பிரம்மாண்ட பேரணி - டாக்டர் K. கிருஷ்ணசாமி


SC பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமே எமது உயிர் மூச்சு !
தேவேந்திரர்களின் இலட்சியத்தை அடைய ஜனவரி– 6 மதுரையில் பிரம்மாண்ட பேரணி.!!

ஒவ்வொரு தேவேந்திரரும் சிவப்பு - பச்சை கொடியேந்தி,
அணிதிரண்டு வாருங்கள்.!!
  
பட்டியலினப் பிரிவிலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியும் தேவேந்திரகுல வேளாளர் மக்களும், கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற அரசாணையை மாநில அரசு பிறப்பிக்கும் எனவும், மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

சனி, 19 டிசம்பர், 2020

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வைகோ ஆற்றிய உரை


மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18.12.2020 அன்று சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

“எங்களைத் தூக்கிலே தொங்க விடாதீர்கள். தூக்குக் கயிற்றை எங்கள் கழுத்திலே மாட்டாதீர்கள். எங்கள் கண்களில் கட்டப்பட்டு இருக்கின்ற கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள். நாங்கள் மடிகின்ற நேரத்தில் புன்னகை பூத்தவாறு இந்த மண்ணைப் பார்த்தவாறு மடிய விரும்புகின்றோம்.

காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! - DR.S.ராமதாஸ்


 காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி  பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

“தமிழகத்தை திமுக ஆட்சி உருவாக்கியது - ஆனால், அதிமுக ஆட்சி தமிழகத்தை உருக்குலைத்து விட்டது” - மு.க.ஸ்டாலின் உரை.


 

“தமிழகத்தை திமுக ஆட்சி உருவாக்கியது -  ஆனால், அதிமுக ஆட்சி தமிழகத்தை உருக்குலைத்து விட்டது” -  மு.க.ஸ்டாலின் உரை.

பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! அனைத்துக்கும் மேலாக பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில் தான்! பழவேற்காடுக்கு வந்தவர்கள், மேடான ஒரு இடம் தேடி வந்தார்கள். அந்த இடத்தில் கோட்டை அமைத்தார்கள். அதுதான் இன்று சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆகும். எனவே, கோட்டைக்கு பாதை அமைத்த மாவட்டம் இந்த திருவள்ளூர்.

தற்சார்பு இந்தியா என்ற கனவு நிறைவேற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது.- பிரதமர் திரு. நரேந்திர மோடி


 அசோசெம் நிறுவன வாரம் 2020 நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். `நூற்றாண்டின் அசோசெம் தொழில்முனைவோர் விருதை' திரு. ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் அளித்தார். டாடா குழுமம் சார்பாக இந்த விருதை திரு. ரத்தன் டாட்டா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசத்தைக் கட்டமைப்பு செய்வதில் தொழில்துறையினரின் பங்களிப்புக்காகப் பாராட்டு தெரிவித்தார். இப்போது விண்ணைத் தொடும் அளவுக்கு தொழில்துறையினருக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று கூறிய அவர், இந்த வாய்ப்பை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வரக்கூடிய ஆண்டுகளில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க உங்களின் முழு சக்தியையும் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிக்கை


தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய 'நிவர்' புயலாலும், 'புரெவி' புயலாலும் 41 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அரசாங்கமும் குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாகப் பிரிந்து சென்று பார்வையிட்டு தமிழக அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 3 ஆயிரத்து 758 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

தமிழக மக்கள் எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கருணை காட்டமாட்டார்கள் - மு.க.ஸ்டாலின் உரை.



 "வெல்லமண்டி தரகர் 'விவசாயி வேடம்' போடுவதால் - டெல்லியில் போராடும் விவசாயிகளை தரகர்கள் என கொச்சைப்படுத்துகிறார்;

தமிழக மக்கள் எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கருணை காட்டமாட்டார்கள்"  -  மு.க.ஸ்டாலின்  உரை.

கடல் சூழ்ந்த கடலூரில் மனிதக் கடலைப் பார்க்கிறேன் என்று சொல்லத்தக்க வகையில் கூடியிருக்கிறீர்கள்! கடல் வற்றி உருவான ஊர் என்பதால் கடலூரா? கடல் சூழ்ந்த ஊர் என்பதால் கடலூரா? எப்போதும் தண்ணீரில் மிதக்கும் ஊர் என்பதால் கடலூரா? - என்று முடிவுக்கு வர முடியாத அளவுக்கு இயற்கையால் சூழப்பட்டது கடலூர்!

மாணவர்களே, பெற்றோர்களே, IIT-களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி - புரிந்துகொள்ளுங்கள்! - கி.வீரமணி



மாணவர்களே, பெற்றோர்களே, அய்.அய்.டி.,களில் போராடிப் பெற்ற  இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி - புரிந்துகொள்ளுங்கள்!

ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற முடிவெடுக்கப்பட்டு பரிந்துரையாம்!

ஒடுக்கப்பட்டோரே, களம் காண வாரீர் - தேர்தலில் பாடம் புகட்டுவீர்! - கி.வீரமணி


பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய ஆட்சியின் வேலைத் திட்டங்களில் முதன்மையானது சமூகநீதி - இட ஒதுக்கீட்டை - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் படித்து வேலைக்குப் போய் தங்களது வாழ்வை உயர்த்திக் கொள்வதைத் தடுத்து, பழைய வர்ணாசிரம, மனுதர்ம யுகத்திற்கே நாட்டைக் கொண்டு செலுத்துவதேயாகும்!

அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு, பல்வேறு அரசமைப்புச் சட்டத் திருத்தங்களால் அமுலில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தருவதை ஒழிப்பதிலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மத்திய காவிகள் ஆட்சியின் செயல்கள் பகிரங்கமாக கூச்சநாச்சமின்றி நடைபெற்று வருகின்றது!

வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடிக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு எழுந்திருக்கிறது.- கே.எஸ்.அழகிரி


மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சதிகாரமான முறையில் விவசாயிகள் மீது திணித்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி தலைநகர் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். கடந்த 18 நாட்களாக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் இரவுபகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் மத்திய விவசாய அமைச்சர் விவசாய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார். சந்திக்க மறுத்து வருகிறார்.

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க தமிழக முதலமைச்சர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். - கே.எஸ்.அழகிரி


நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தனி சமுதாயமாகப் படுகர் இன மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட படுகர் இன மக்கள், 1951 ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள் (Schedule  Tribe). 

புதன், 16 டிசம்பர், 2020

SC/ ST, OBC பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்க வேண்டும்.- தொல்.திருமாவளவன்

 ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்யப் பரிந்துரை! 

சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டத்தைக் கைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின்  ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறை படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  சமூகநீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது. மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாஜக அரசை வலியுறுத்துகிறோம்! 

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! - தி.வேல்முருகன்



 மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே எரிவாயு,  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! - தி.வேல்முருகன்

தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு. 

“நான் OBC” என்று கூறிய பிரதமர் - நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பைக் குழப்பவாதிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.- துரைமுருகன் MLA


 "IIT ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்கும் பரிந்துரையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு - IIT & மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5% இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்"

-  திரு. துரைமுருகன் MLA அறிக்கை.

“ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும்” என்றும், “ஐ.ஐ.டி. நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்” என்றும் மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயியாக - ஏழைத்தாயின் மகனாக நடித்து, நாட்டு மக்களை ஏய்க்கும் ‘நடிப்பு_சுதேசிகள்’ கூட்டத்துக்கு, 2021 - சட்டமன்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.- மு.க.ஸ்டாலின்


 "விவசாயியாக - ஏழைத்தாயின் மகனாக நடித்து, நாட்டு மக்களை ஏய்க்கும் ‘நடிப்பு_சுதேசிகள்’ கூட்டத்துக்கு, 2021 - சட்டமன்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்” - மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகளால் போற்றப்பட்ட திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களையும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி அவர்களையும், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் அவர்களையும் - பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!

15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் விலையேற்றம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற்று - முந்தைய விலையிலேயே விநியோகிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்


"15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் விலையேற்றம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற்று - முந்தைய விலையிலேயே விநியோகிக்க வேண்டும்" -  மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால் ஏறத்தாழ 9 மாதங்களுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். 2020-ஆம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பினால் பொருளாதார முடக்கம் - அன்றாட வாழ்க்கைக்கே சிக்கல் என ஏழை – எளிய - நடுத்தர வகுப்பினர் கடும் பாதிப்படைந்த நிலையில், பிறக்கின்ற புத்தாண்டிலாவது இயல்பு வாழ்க்கை வேகமாகத் திரும்பும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய - மாநில அரசுகளுக்கு நிரம்ப உண்டு.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்றால் இந்நிலைதான் என்பதைப் புரிந்துகொள்வீர்! தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவீர்! - கி.வீரமணி

'சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்’ என்ற பொருளிருக்கும்போது - சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு, ஏன் கோபம் என்று கேட்கிறார்  காவி சாமியாரிணி பிரயாக்சிங் தாக்கூர்

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்றால் இந்நிலைதான் என்பதைப் புரிந்துகொள்வீர்!

தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவீர்! - கி.வீரமணி

மும்பை மாலேகான் குண்டுவெடிப்பு - பயங்கரவாத வழக்கில் குற்றவாளியாக உள்ள பிரயாக் சிங் தாக்கூர் தன்னை ஒரு சாமியாரிணி என்று கூறிக்கொண்டு, காவி உடையுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர கொள்கையாளராக, இந்துத்துவாவின் அதிதீவிர பரப்புரையாளராக அறிமுகம் செய்துகொண்டு ஜாமீனில் உள்ள ஒருவர், இடையில் பா.ஜ.க. அவருக்குத் தேர்தல் டிக்கெட் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினராகி, மக்களவையில் வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்து பேசி, எதிர்க்கட்சியினர் (தி.மு.க. உள்பட) பலரின் கண்டனத்திற்கு ஆளான ஒருவர்.

தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக செயல்பட்டு தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் முன்வர வேண்டும்.- வைகோ

 இலங்கைக் கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் கைது! 

- வைகோ கண்டனம்

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும்  அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப் படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை  நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன.

நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாய வழக்கறிஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தகுதியும், திறமையும் இருந்தும் கூட தொடர்ச்சியாக வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.- DR.S.ராமதாஸ்


 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: வன்னியர்களை புறக்கணிக்க கூடாது!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாய வழக்கறிஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தகுதியும், திறமையும் இருந்தும் கூட தொடர்ச்சியாக  வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

சனி, 12 டிசம்பர், 2020

'மிஷன் சக்தியின்' வெற்றி இந்தியாவை விண்வெளியில் தனது சொத்துக்களைப் பாதுகாக்கும் திறன் கொண்ட உலகின் நான்காவது நாடாக மாற்றியது.- ராஜ்நாத் சிங்


 பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங், இன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை (டி.டி.ஆர் & டி) செயலாளர் டாக்டர் ஜி.டி. டி.ஆர்.டி.ஓ கட்டிடத்தின் வளாகத்தில் சதீஷ் ரெட்டி முன்னிலையில் நிறுவப்பட்ட ஆன்டி சேட்டிலைட் (ஏ-சட்) ஏவுகணையின் மாதிரியை வெளியிட்டது.

 'மிஷன் சக்தி' என்பது நாட்டின் முதல் செயற்கைக்கோள் எதிர்ப்பு (ஏ-சட்) ஏவுகணை சோதனை ஆகும், இது ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து 27 மார்ச் 2019 அன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இங்கே லோ எர்த் சுற்றுப்பாதையில் (லியோ) வேகமாக நகரும் இந்திய சுற்றுப்பாதை இலக்கு செயற்கைக்கோள் குறைபாடு இல்லாமல் துல்லியத்துடன் செயலிழக்கப்பட்டது. இது மிகவும் சிக்கலான பணியாக இருந்தது, இது குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் மிக அதிக வேகத்தில் இயக்கப்பட்டது.

தொழில் முனைவோர் முதலீடுகள் ஊரக பகுதிகள் மற்றும் வேளாண் துறையில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு புதிய வாயில்களை திறக்கும்.- நரேந்திர மோடி

 


பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு துவக்க உரை வழங்கினார். உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், உலக அளவில் இந்தியாவின் வலுவான தூதர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் வகையில் திறன் படைத்துள்ள இந்திய தனியார் துறையை பிரதமர் பாராட்டினார். தற்சார்பு இந்தியாவை அடைய ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண்டிருப்பது, தனியார் துறையின் மேல் நாடு கொண்டுள்ள நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

அதிமுக அரசு - தமிழக அரசியல் வரலாற்று களங்கம்" தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அவமானம் துடைப்போம்! தமிழகம் தலைநிமிர தி.மு.க. ஆட்சியை அமைப்போம்! - மு.க.ஸ்டாலின் உரை.




 "அதிமுக அரசு - தமிழக அரசியல் வரலாற்று களங்கம்" தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அவமானம் துடைப்போம்! தமிழகம் தலைநிமிர தி.மு.க. ஆட்சியை அமைப்போம்! - மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

“பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்” என்று கலித்தொகை நூல் சொல்வதற்கு இலக்கணமாக, எந்தப் பகையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த மக்கள் வாழும் மண் இந்த இராமநாதபுரம் மண்!

பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் பெரும் பேரரசாக நிலை கொள்வதற்கும், பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஏற்றம் பெறுவதற்கும் அரசப்படையில் நின்றவர்கள் இந்த இராமநாதபுரம் மண்ணைச் சேர்ந்தவர்கள். புனித சேது காவலன் என்று புகழப்பட்ட சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது; மறக்க முடியாதது.

தமிழகத்தில் 100 சதவீதப் பயணிகள் பேருந்துப் போக்குவரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழகத்தில் 100 சதவீதப் பயணிகள் பேருந்துப் போக்குவரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன் 

"கரோனா தொற்றின் காரணமாக போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கரோனா தொற்று குறைந்து வரும் இவ்வேளையில் தற்போது பல்வேறு தளர்வுகளுக்கு இடையில் சாலைப் போக்குவரத்து முழு அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு அனுமதிக்கப்படவில்லை.

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல், விசுவரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு முதலமைச்சர் பதில்கூற வேண்டும்.- வைகோ



 நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல்:

விசுவரூபம் எடுக்கும் வினாக்களுக்கு விடை என்ன? - வைகோ 

தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது.

தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் (Performance Based Maintance Contract -PBMC) விடப்பட்டபோது, மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள் பராமரிப்புக்காக இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டதையும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு இந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்குச் சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் புகார் செய்தது. எனவே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டது.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு போராட்டத்தில் கட்சிகளைக் கடந்து அனைத்து வன்னியர்களையும், சகோதர சமுதாயங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 


பாட்டாளி மக்கள் கட்சி என்பது சமூகநீதிக்கான கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி என்பது மக்களின் உரிமைகளுக்காக போராட, ஒரு போராளியால் போராட்ட குணம் கொண்டவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன்படி தான் அனைத்து சமுதாய மக்களின் நலன்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது சமூகத்தில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமூகத்தினருக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கோரும் அறப்போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதியாக உயரும் தகுதியுள்ள பெண் நீதிபதிகளைப் பரிந்துரைக்காதது ஏன்? - கி.வீரமணி


 மக்களின் கடைசி நம்பிக்கையான உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சமூகநீதி அடிப்படையில் நியமிக்கப்படாதது ஏன்?

பாலியல் நீதியுடன் கூடிய சமூகநீதி மிகவும் அவசியமாகும்; உச்சநீதிமன்றம், தலைமை  நீதிபதியாக உயரும் தகுதியுள்ள பெண் நீதிபதிகளைப் பரிந்துரைக்காதது ஏன்?

வியாழன், 10 டிசம்பர், 2020

ஊழலே நடக்கவில்லை என்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கரின் புளுகு 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை.- திரு.கே.என்.நேரு MLA


 "போக்குவரத்துத்துறையில் GPS கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது உயர் நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம்" -  திரு. கே.என்.நேரு MLA

ஊழல் என்ற கரன்சி முகட்டில் உட்கார்ந்து கொண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏதோ தன் துறையில் ஊழலே நடக்கவில்லை என்று அப்பாவி போல் நேற்று முன்தினம் போட்ட வேடத்தை நேற்றுக் கலைத்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு. “118 நிறுவனங்கள் இருக்கும் போது 8 நிறுவனங்களிடம் ஜி.பி.எஸ். கருவி வாங்க போக்குவரத்துத்துறை அளித்த உத்தரவுக்கு” தடை வழங்கியுள்ள உயர்நீதிமன்றம் போக்குவரத்துச் செயலாளர் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனங்களுக்குப் போட்ட உத்தரவைப் போக்குவரத்து ஆணையர் நிறுத்தி வைத்துள்ளதாக இன்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

புதன், 9 டிசம்பர், 2020

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்ததன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விலை நிர்ணயம் அதிகாரம் சென்றால் என்ன விளைவை மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதற்கான உதாரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை வரலாறு காண அளவில் குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்பதை நாம் அறிவோம். கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் இலாபமடைய வேண்டுமென்று மத்திய அரசு திட்டமிட்டு அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடுக! - DR. அன்புமணி ராமதாஸ்

 உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 

8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடுக! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு செல்லாது என்றும், அத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தடையில்லை என்றும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உழவர்களின் நலன்களை பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது; இது ஏமாற்றமளிக்கிறது.

புறநகர் ரயில் சேவையை தொடங்கிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! - கே.பாலகிருஷ்ணன்

புறநகர் ரயில் சேவையை தொடங்கிடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! -கே.பாலகிருஷ்ணன்

கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் கடந்த 8 மாத காலமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகள் 60 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் என்று இருந்ததை மாற்றி 100 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் எனவும், தேவையையொட்டி கூடுதல் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு நேற்று(07.12.2020) உத்தரவிட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவையும் முழுமையாக இயங்கி வருகிறது.

பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாடு முழுவதும் பொது தரவு அலுவலகம் (பி.டி.ஓ) மூலம் பொதுவில் வைஃபை சேவைகளின் வலையமைப்பை உருவாக்குவதற்கான தொலைத் தொடர்புத் துறையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு வைஃபை மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கு எந்த உரிமக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (ABRY) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

தற்சார்பு இந்தியா 3வது தொகுப்புத் திட்டத்தின் கீழ், கொவிட் மீட்பு கால கட்டத்தில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (ஏபிஆர்ஒய்) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.1,584 கோடி செலவிடவும், 2020-2023 வரை இத்திட்டத்துக்கு ரூ.22,810 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவர்கள் நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்

 "கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிகளை நினைவில் கொண்டு - அவர்களது நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்" - மு.க. ஸ்டாலின்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் - தங்களின் உயிரையும் பணயம் வைத்து, இரவு பகல் பாராமல், தன்னலம் சிறிதுமின்றிப் பணியாற்றிய  அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வுக் கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் அலட்சியம் செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. 

இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தைப் போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


பாரத் பந்த் போராட்டம்; அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஆதரவு 

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்திய அரசு விவசாயப் பிரதிநிதிகளோடு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

கொரோனா நெருக்கடி நிலையில் புதிய சாலை அவசியமில்லை! சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.- கே.பாலகிருஷ்ணன்



கொரோனா நெருக்கடி நிலையில் புதிய சாலை அவசியமில்லை!
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.- கே.பாலகிருஷ்ணன்

சென்னையையும் - சேலத்தையும் இணைக்கும் 276 கி.மீ. நீளமுள்ள 8வழிச் சாலையை அமைத்திட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. இச்சாலையை அமைத்திட ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்து; பாஜக - அதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தக்க பாடம் புகட்டும்.- மு.க.ஸ்டாலின்

”எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்து;
பாஜக - அதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தக்க பாடம் புகட்டும்”

- மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என  உச்சநீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு,  விவசாயிகள் மற்றும் இயற்கை - சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கிய காரணமாகும். மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாகக் காரணம் ஆகிவிட்டது. 

சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்புகளை கூட வாங்காமல் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா? - திரு. தங்கம் தென்னரசு MLA



"சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்புகளை கூட வாங்காமல் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா?" -   திரு. தங்கம் தென்னரசு MLA 

தமிழ் நாட்டு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் முக்கிய பிரிவுகளில் பொது நூலகத் துறை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். பொது நூலகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில்,  தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1972-ஆம் ஆண்டில் பொது நூலகத்துறை இயக்குநரகம் உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கன்னிமாரா நூலகம் இன்று 125ம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மேலும், தலைவர் கலைஞர் அவர்களின் மகத்தான சாதனைத் திட்டமாகவும், ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகவும் உலகப்புகழ் பெற்று மிளிரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 4,500க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. 

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன்




சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்! 
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 
- தொல்.திருமாவளவன்

விவசாயிகளின் ஒப்புதல் இன்றி  சென்னை- சேலம் எட்டுவழி சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் ஒன்றில் கூட வன்னியர்கள் துணைவேந்தராக இல்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாக வன்னியர்கள் இருந்தாலும் இது தான் நிலை.- DR.S.ராமதாஸ்

இளைஞர்களின் சிந்தனைக்காக...
வன்னியர் துணைவேந்தர் ஆன வரலாறு! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், அந்த நிறுவனங்களில் துணைவேந்தராகும் வாய்ப்பு வன்னிய கல்வியாளர்களுக்கு பெரும் போராட்டத்திற்குப் பிறகு 21-ஆம் நூற்றாண்டு பிறக்கவிருந்த தருணத்தில் தான் வழங்கப்பட்டது.

திங்கள், 7 டிசம்பர், 2020

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஐ.சி.எப் - யை தனியார் மயமாக்குவது, அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது! - தி.வேல்முருகன்


ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வை பணிமனைகளை தனியார் மயமாக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வேதனை முழக்கம் தமிழகத்தில் எழுந்த போது, மண்ணின் மக்களுக்காக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது தான் ஐ.சி.எப் தொழிற்சாலை . 

SC/ ST/OBC மாணவர்களுக்கான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' திட்டத்தைக் கைவிடுவது மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் முயற்சியே! - தொல்.திருமாவளவன்


 

எஸ்சி/ எஸ்டி/ஒபிசி மாணவர்களுக்கான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்'  திட்டத்தைக் கைவிடுவது மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் முயற்சியே!

மைய- மாநில அரசுகளைக் கண்டித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு, தமிழ் திரு. அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை!

திருஞானசம்பந்தரை  இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு,

தமிழ் திரு.  அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை!

உலகெங்கும்  தமிழர்கள் கிளர்ந்தெழுந்து திருமாவளவனை விரட்டி அடிப்பார்கள்!

கி.மு. 322 ஆம் ஆண்டுகளில் பல தேசங்களை வெற்றி கொண்ட சந்திரகுப்த மௌரியர் வாழ்நாள் இறுதியில் சமண மதத்தை தழுவினார். அதனால் அவர் தன்னுடைய மகன் பிந்துசாரருக்கு முடிசூட்டிவிட்டு எண்ணாயிரம் சமணர்களுடன் தென்னகம் கர்நாடாவுக்கு சென்றடைந்தார்.

அதனால் அவர்கள் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர்.

வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்கு அன்னை சோனியாகாந்தியின் பிறந்தநாளில் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சூளுரை ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். - கே.எஸ்.அழகிரி


 கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிற அன்னை சோனியா காந்தி அவர்களின் 74 ஆவது பிறந்தநாளான டிசம்பர் 9 அன்று தமிழகம் முழுவதும் ஆக்கப்பூர்வமான வழிகளில் கொண்டாடப்பட வேண்டுமென  முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் பதவி தம்மீது திணிக்கப்பட்ட போது, அதை மறுதலித்து காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர். 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு டாக்டர் மன்மோகன்சிங் மூலமாக அடித்தளம் அமைத்தவர் அன்னை சோனியா காந்தி. இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். இந்த சாதனைகளை படைப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி.

நம்மை காக்கும் விவசாயிகளுக்கு அரணாக இருந்து - நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளித்து வெற்றிபெற செய்வோம். - மு.க.ஸ்டாலின்

 “நம்மை காக்கும் விவசாயிகளுக்கு அரணாக இருந்து - நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளித்து வெற்றிபெற செய்வோம்” -  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.

கலப்பையைக் கையிலே பிடித்து உழைப்பை மண்ணிலே விதைத்து, உலகத்தார் அனைவருக்கும் பேதம் பார்க்காமல் உணவளிக்கும் விவசாயப் பெருமக்கள், இந்தியத் தலைநகரில் கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீரத்துடன் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிசம்பர் 5-ஆம் நாள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே மக்களின் பேராதரவுடன் கூடிய வரவேற்பை ஏற்று, பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய விபரீதங்களை விளக்கி உரையாற்றினேன்.