சனி, 31 அக்டோபர், 2020

தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம்! - வைகோ அறிக்கை

 தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம்!

 - வைகோ அறிக்கை

நவம்பர் 1 ஆம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’. 1956 நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.

நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்’ ஆணையம், அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவசியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.

முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால் - ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது சென்னை.- மு.க.ஸ்டாலின்


 "முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால் - ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது சென்னை; மீண்டும் ஒரு 'டிசம்பர் -15' வெள்ள அபாயத்தைச் சந்திப்போமே என மக்கள் அச்சம்" - மு.க.ஸ்டாலின்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதலமைச்சர் திரு. பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு “டிசம்பர் 2015” வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

வியாழன், 29 அக்டோபர், 2020

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது! - DR.அன்புமணி ராமதாஸ்

 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 11 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசின் இந்த முடிவு எந்த வகையிலும் நியாயமானதல்ல.

எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். - கே.எஸ்.அழகிரி


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துக்களை கூறுவதன்மூலம் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வாகன தயாரிப்புத்தொழில் முடங்கியிருப்பதை போல செயலற்று இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் பல கட்சிகள்  அந்த கூட்டணியில் இருந்து  விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் அடிப்படையே இல்லாமல் ஆதாரமற்ற அவதூறு கருத்தை கூறியிருக்கிறார். இந்த கூற்றுக்கு மாறாக இக்கூட்டணி உறுதியாக செயல்பட்டுவருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.- DR.S.ராமதாஸ்

 தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை 

மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் பிரதிநிதித்துவம்: ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்க வேண்டும்!- DR.S.ராமதாஸ்

 கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் பிரதிநிதித்துவம்: ஆராய்ந்து அறிக்கை  அளிக்க ஆணையம் அமைக்க வேண்டும்!- DR.S.ராமதாஸ்

மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டுமானால், அந்த சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அது தான் சமூக நீதியின் அடிப்படை ஆகும். ஆனால், வன்னியர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தமிழக ஆட்சியாளர்கள் கடந்த  40 ஆண்டுகளாக காதில் வாங்காமல் கடந்து செல்வது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

அனுபவ ரீதியான கல்வியை வழங்குவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம்: டாக்டர் ரமேஷ் பொக்ரியால்


 சுவாமி விவேகானந்தர் நம் மரணம் வரை நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம், அனுபவம் வாய்ந்த உலகமே சிறந்த ஆசிரியர் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். 'சுவாமி விவேகானந்தரின் கல்வி பார்வை மற்றும் தேசிய கல்வி கொள்கை 2020' குறித்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்.கே.எம்.வேரி) ஏற்பாடு செய்துள்ள வெபினாரில் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' இதை இன்று தெரிவித்தார். விஞ்ஞானம் மற்றும் கலை பற்றிய அறிவைப் பெறுவதற்காக நாலந்தா மற்றும் டாக்ஸிலா (டாக்ஸிலா) போன்ற பல்கலைக்கழகங்களுக்கு நாட்டு மற்றும் உலக மாணவர்கள் வந்த ஒரு காலம் இருந்தது என்று அவர் கூறினார். 

(CPSEs) சிபிஎஸ்இக்களின் மேம்பட்ட செயல்திறன் கோவிட் -19 இன் தாக்கத்தை சமாளிக்க பொருளாதாரத்திற்கு உதவும்.- திருமதி நிர்மலா சீதாராமன்


 மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் இந்த அமைச்சகங்களின் கீழ் உள்ள 14 பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) சிஎம்டிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினார். இந்த நிதியாண்டிற்கான மூலதன செலவினங்களை மதிப்பீடு செய்தது. கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் பொருளாதார முன்னேற்றத்தின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக பல்வேறு கூட்டாளர்களுடன் தொடர்ச்சியான நிதியமைச்சர் சந்திப்புகளில் இது நான்காவது சந்திப்பாகும்.

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

இந்திய ராணுவ செய்திகள்


அம்பாலா ராணுவ முகாமில் ராணுவ தளபதி ஆய்வு

அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள  ராணுவ முகாமுக்கு இன்று  சென்ற ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, அங்குள்ள கார்கா படைப்பிரிவின் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

அவருக்கு படைப்பிரிவின் தயார் நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எஸ் மகல் விளக்கினார். அதன்பின் ராணுவ கமாண்டர்களுடன், தரைப்படை தளபதி ஜெனரல் நரவானே உரையாடினார். படைப்பிரிவின் தயார் நிலை நடவடிக்கைகள் மற்றும் கொவிட்-19-க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி பாராட்டினார். எதிர்காலத்தில் எந்த சவால்களையும் சந்திக்க,  ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தையும், பார்வையிட்ட ராணுவ தளபதி, படைகள் இடையேயான ஒருங்கிணைப்பையும் பாராட்டினார்.

இந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுபயிற்சி

இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியாக மலபார் பயிற்சி கடந்த 1992ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு இதில் ஜப்பான் இணைந்தது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு பயிற்சி, கடந்த 2018ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்தது. இந்தாண்டு இறுதியில் மலபார் கூட்டு பயிற்சி வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதயில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்சார் பாதுகாப்பில், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கவும்,  ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும்  இந்தியா விரும்புவதால், இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணையும்.

கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு கூட்டு பயிற்சியை, கடலில் தொடர்பில்லா முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயற்சி, பங்கு பெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.

இந்தாண்டு மலபார் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாடுகள், கடற்சார் பாதுகாப்பையும் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பகுதியில், சர்வதேச விதிமுறைகள்படி, திறந்தவெளி போக்குவரத்துக்கும் கூட்டாக ஆதரவு தெரிவிக்கும்.

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று  நுழைந்த சீன ராணுவ வீரர்  வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது.  

மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட  அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய ராணுவத்தினர் மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர்.

இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் சீன ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே உள்ள ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், அந்த சீன ராணுவ வீரர், சுசூல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் இந்திய ராணுவத்தினரால் ஒப்படைக்கப்படவுள்ளார்.

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.


மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது என்றும் 'ராஜர்ஷி' நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மற்றும் எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலட்சியம் மற்றும் உறுதிகளை இந்தப் பல்கலைக்கழகம் நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார்.

நமது குடிமக்களுக்கு எதிர்ப்பு சக்தியை உறுதி செய்ய தடுப்பூசி விநியோக முறையை இந்தியா ஏற்கனவே தயார்நிலையில் வைத்துள்ளது.- பிரதமர் திரு. நரேந்திர மோடி

 பெரும் சவால்கள் ஆண்டு கூட்டம் 2020-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி முக்கிய உரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களே எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறினார். குறுகிய நோக்கத்துடனான அணுகுமுறைக்குப் பதிலாக, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முன்கூட்டியே முதலீடு செய்தால் மட்டுமே, சரியான நேரத்தில் அவற்றின் பயன்களை அடைய முடியும் என்று அவர் கூறினார். இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான பயணம் பொதுமக்கள் பங்களிப்புடனும், ஒத்துழைப்புடனும் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒத்திசைவற்ற நிலையில் அறிவியல் முன்னேற்றம் காணமுடியாது என்று கூறிய பிரதமர், பெரும் சவால்கள் திட்டம் அதன் நெறிமுறைகளை நன்கு உணர்ந்துள்ளது என்றார்.  பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட இந்தத் திட்டத்தின் பரிமாணம் குறித்து புகழ்ந்துரைத்த அவர், ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு, தாய், சேய் நலம், வேளாண்மை, சத்துணவு, தண்ணீர், சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த தீர்வை  அது வழங்குகிறது என்றார்.

ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள் - DR.S.ராமதாஸ்

 தொடரும் பலிகள்: ஆன்லைன் சூதாட்ட 

கொடுமைகளுக்கு முடிவு எப்போது? - DR.S.ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக் கூட வாழத் தொடங்காத அவனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.

மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்


 மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் (20.10.2020) எழுதிய கடிதம் வருமாறு:-

மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

திங்கள், 19 அக்டோபர், 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

 

மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில்  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித ஒதுக்கீடு - அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவது ஏன்? - கி.வீரமணி

அலட்சியம் காட்டினால் அரசியல் ரீதியாகக் கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித ஒதுக்கீடு - அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவது ஏன்?

கண்கலங்கி உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி கண்களைத் திறக்குமா?

தமிழ்நாடு அரசின் உறுதிப்பாடும் வரவேற்கத்தக்கதே!

‘நீட்' தேர்வு என்பது ஒரு ‘நவீன மனுதர்மம்' என்பது நாளும் மக்களுக்கு நன்கு புரிந்துவருகிறது.

-  கி.வீரமணி (திராவிடர் கழகம்)

ஒடுக்கப்பட்டோருக்குக் கதவடைப்பு

வறட்டுப் பிடிவாதம் - அதுவும் தமிழ்நாடு போன்ற மருத்துவக் கல்வியில் வளர்ந்தோங்கி வரும் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட, கிராம, ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்புக் கதவை அறவே மூடுவதற்கே இப்படி ஒரு திட்டமிட்டு தடுப்பு ஏற்பாடு!

மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்


மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம்  அடைந்துள்ளன. இதனால் உழவர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. - DR.S.ராமதாஸ்

உயர்சிறப்பு படிப்பு: அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்!- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50%  உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது  மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்வி கனவுக்கும், சமூகநீதிக்கும் எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருப்பதை நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் குற்றச்சாட்டு அம்பலப்படுத்துகிறது.- மு.க.ஸ்டாலின்

 "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருப்பதை நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் குற்றச்சாட்டு அம்பலப்படுத்துகிறது" -  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் நீதிபதி திரு. ஆறுமுகசாமி அவர்கள்,  “உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை - தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்” என்ற ஒரு கடுமையானதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டை வெளிப்படையாகவே  கூறியிருக்கிறார்.

FC-க்கான இடஒதுக்கீடு்; SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! சமூகநீதி கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்க! - தொல்.திருமாவளவன்


 மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும்  சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே இந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறோம். 

வியாழன், 15 அக்டோபர், 2020

பசு மாட்டுச் சாணி, நோய் உருவாக்கும் வெப்ப கதிர்வீச்சைத் தடுக்கும் சக்தி கொண்டதாம்! மூடநம்பிக்கைக் கருத்தை மத்திய அரசின் துறைகளே பரப்பலாமா? - கி.வீரமணி

பசு மாட்டுச் சாணி, நோய் உருவாக்கும் வெப்ப கதிர்வீச்சைத் தடுக்கும் சக்தி கொண்டதாம்! மூடநம்பிக்கைக் கருத்தை மத்திய அரசின் துறைகளே பரப்பலாமா? அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு! - கி.வீரமணி

மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசும், அதனால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு காவிச் சாயம் ஏறிய பசுமாடு சம்பந்தப்பட்ட அமைப்புகளும், மனிதர்களின் உடல்நலம் - ஆரோக்கியம் - உயிர் பாதுகாப்பு - நோய்த் தடுப்புபற்றி பல்வேறு கருத்துகளையும், யோசனைகளையும், திட்டங்களையும் கூறி வருவது, அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதாக இல்லை என்பதை விளக்கி அறிவியல் அமைப்புகளும், விஞ்ஞானிகளும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய சமூக விரோத நடவடிக்கை!

சென்னையில் மரங்கள் நிறைந்த தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கக்கூடாது! - அன்புமணி ராமதாஸ்

 சென்னையில் மரங்கள் நிறைந்த தோட்டத்தை 

தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கக்கூடாது! - அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழகங்கநல்லூரில் (சோழிங்கநல்லூர்) 7 ஏக்கரில் அமைந்துள்ள பழத்தோட்டம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குப்பை அகற்றும் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும்,  அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படவிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வருத்தம் அளிக்கின்றன. சென்னையின் சோலைவனத்தை அழிக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.- E.R ஈஸ்வரன்


 திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.

திமுக தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதை புரிந்து இருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு எப்ஏஓ (Food and Agriculture Organization (FAO)) -வின் 75-வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார்



 உணவு மற்றும் வேளாண் அமைப்பு எப்ஏஓ Food and Agriculture Organization (FAO) -வின் 75-வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார்

அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

உணவு மற்றும் வேளாண் அமைப்பான Food and Agriculture Organization (FAO) எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், வரும் 16-ம் தேதி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் எல்லாம் அரசு கஜானாவை தங்கள் வீட்டுக்குக் கொண்டு போகும் திட்டங்கள் - மு.க.ஸ்டாலின்


 

“திமுக தலைவர் கலைஞர் அவர்களின் திட்டங்கள் ‘தமிழ் வளர - தமிழர்கள் வாழும்’ என்ற அடிப்படையில் இருக்கும்;

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் எல்லாம் அரசு கஜானாவை தங்கள் வீட்டுக்குக் கொண்டு போகும் திட்டங்கள்” -  மு.க.ஸ்டாலின் உரை.

தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே வணக்கம்!

'வீடுகள் வேண்டுமானால் தனித்தனியாக இருக்கட்டும்; இதயங்கள் ஒன்றாகவே இருக்கட்டும்' - என்பது புகழ்பெற்ற கவிதை வரிகளில் ஒன்று. அதேபோல் மாவட்டங்கள் தனித்தனியாக இருந்தாலும் இதயங்களால் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை கொங்கு மண்டலம் இன்றைய தினம் நிரூபித்துக்காட்டி இருக்கிறது. இன்று நாம் முப்பெரும் விழாவைக் கொண்டாடுவதற்காகக் கூடி இருக்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தை எந்த வகையிலும் மத்திய அரசு கல்வி பட்டியலில் சேர்க்கக் கூடாது. தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும்.-கே.எஸ்.அழகிரி

 

அண்ணா பல்கலைக்கழகம் 1978 இல் தொடங்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் பா.ஜ.க.மத்திய அரசு துணைவேந்தர் சூரப்பா மூலம் பல்கலைக்கழகத்தை நேரடியாக மத்திய அரசின் கீழ், கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றால், பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் சேர்ப்பது, கட்டண முறை போன்ற அனைத்தும் மத்திய அரசிற்கு சென்றுவிடும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது ரூ 2 லட்சமாக உள்ளது. இது கதி தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் ஏற்படும். 

அரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது! - DR.S.ராமதாஸ்

 அரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு  வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது! - DR.S.ராமதாஸ்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது! - தி.வேல்முருகன்


விஜய்சேதுபதி          அவர்களுக்கு ஒரு               வேண்டுகோள் ! - தி.வேல்முருகன்

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

கோவிட் -19 தொடர்பான உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் 21 வது கூட்டத்திற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வீடியோ மாநாடு மூலம் தலைமை தாங்கினார்.


 கோவிட் -19 தொடர்பான உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் 21 வது கூட்டத்திற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்  வீடியோ மாநாடு மூலம் தலைமை தாங்கினார். அவருடனான இந்த சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ். பூரியும் சேர்க்கப்பட்டார்.

புதன், 14 அக்டோபர், 2020

அமித் ஷா இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை.- வைகோ

 உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு! 

- வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்.- மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான  எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும்" 

ஆயுஷ் திட்டத்திற்கான மண்டல மூல மருந்துக் களஞ்சியம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது


ஆயுஷ் திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூல மருந்துக் களஞ்சியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்.

கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு தன்னம்பிக்கை பெருகச் செய்தால், தற்சார்பு என்ற நமது இலக்கை நோக்கிய முயற்சிகள் பலப்படுத்தப்படும்.- நரேந்திர மோடி

 

`தே வெச்வா கரனி' என்ற தலைப்பில் டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் சுயசரிதை புத்தகத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். பிரவர ஊரக கல்வி சங்கத்தின் பெயரை `லோக்நேட்டே டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பிரவர ஊரக கல்விச் சங்கம்' என பிரதமர் மாற்றினார்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் திரு.விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் வெளியேறுவது சுயமரியாதைக்குரியதென மே17 இயக்கம் கருதுகிறது.


 இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பண்பாட்டு துறை முதல் அரசியல் துறை வரை இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழீழப் போரின் போது மேற்குலகின் அரசியலை நியாயப்படுத்தியவரும், தமிழீழ இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் பொறுப்பு என முழங்கியவருமான நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் எரிக் சோல்ஹேம் களம் இறக்கப்படுகிறார், மறுபுறத்தில் பண்பாட்டு தளத்தில் இலங்கையின் ஆளுமைகளான முத்தையா முரளிதரன் போன்ற சிங்களக் கைக்கூலிகள் பற்றிய திரைப்படங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் களம் தமிழீழ அரசியலை விட்டு விலகி இருப்பதாக இந்த அரசுகள், ஆற்றல்கள் தவறாக எடை போட்டிருக்கின்றன.

பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.- E.R.ஈஸ்வரன்


 பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களும், டீஸரும் ஆபாசம் நிறைந்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதுப்போன்ற படங்கள் வெளிவந்தால் இளைய சமுதாயம் முற்றிலும் சீர்கெடும். தமிழகம் கலாச்சாரமும், பண்பாடும் நிறைந்த மண். இம்மண்ணில் கலாச்சார சீரழிவை உருவாக்குவதற்காக ஒரு சிலர் ஆபாசமான படங்கள் எடுத்து அண்மைக்காலமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

திரைப்பட தணிக்கை குழுவும் இதுப்போன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதால் தொடர்ந்து எந்தவொரு தடையுமின்றி திரைக்கு வருகிறது. இது மாதிரியான படங்கள் வெளிவருவதை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரட்டை வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்த இரண்டாம் குத்து படம் திரைக்கு வந்தால் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க கூடியதாக அமையும். பள்ளி பருவ மாணவர்கள் மனதில் தவறான தாக்கத்தை உருவாக்கும். 

தமிழக முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களால் பெற்றோர்கள் அனைவரும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக திரையுலகம் படைப்பு என்ற பெயரில் மிக மோசமான போக்கை கடைப்பிடிப்பது ஏற்புடையதல்ல. தமிழ் சமூகத்திற்கு ஏற்றவாறு நல்ல படங்களை எடுக்க வேண்டும். பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தமிழகம் முழுவதும் எந்தவொரு தியேட்டரிலும் திரையிட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து தவறான காட்சிகளை நீக்க வேண்டும்.

உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! - தி.வேல்முருகன்


 உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! 

அந்த வலையில் அதிமுக அரசு விழ வேண்டாம்; அது அண்ணா பல்கலைக்கழகமாகவே இருக்கட்டும்; சூரப்பா சும்மாவே இருந்துவிட்டுப் போகட்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

வலிவுடனும் பொலிவுடனும் திகழும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் இறுதியில் கலகலத்துப் போவார்கள் - திமுக கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. - மு.க.ஸ்டாலின்.

 “வலிவுடனும் பொலிவுடனும் திகழும் திமுக  கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் இறுதியில் கலகலத்துப் போவார்கள் - திமுக கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது”

 -  மு.க.ஸ்டாலின்.

இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, அனைத்து முனைகளையும்  ஒற்றைமயப்படுத்துவதையும், உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டை ‘இந்தியா கார்ப்பரேட் லிமிடெட்’ என உரு - உள்ளடக்க மாற்றம் ஏற்படுத்துவதையும் மட்டுமே தனது முழுநேர வேலைத்திட்டமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மத்திய  பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்; தன்மானம் தவறியும், மாநில உரிமைகளைக் காவு கொடுத்தும், தனது சுயநலன் - பாதுகாப்பு மட்டுமே கருதியும், பா.ஜ.க.வுக்கு அனுதினமும் அடிமைச் சேவகம் செய்துவரும் அ.தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்; என்ற உறுதியுடன், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வடிவமைக்கப்பட்டது தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி.

மாநில அரசின்கீழ் செயல்படும் அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசோடு இணைக்கும் உரிமையைத் துணைவேந்தர்க்கு அளித்தது யார்? - கி.வீரமணி

மாநில அரசின்கீழ் செயல்படும் அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசோடு இணைக்கும் உரிமையைத் துணைவேந்தர்க்கு அளித்தது யார்?

சமூகநீதியைச் சிதைக்கத் திட்டமா?

தமிழ்நாடு அரசு துணைப் போகக் கூடாது! - கி.வீரமணி

உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில்  மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்து 2019 டிசம்பர் 19 ஆம் தேதியன்றே ‘விடுதலை'யில் அறிக்கை வாயிலாக எச்சரித்து இருந்தோம்.

2019 டிசம்பரிலேயே எச்சரித்தோம்!

ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு அநீதி : உடனடியாக நீக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 

அநீதி : உடனடியாக நீக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி   40 வயதை கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி & கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 காவிரி - கோதாவரி இணைப்பு: முதல்வர்கள் 

மாநாட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்!- DR.S.ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மிக முக்கிய பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

வேளாண்மைச் சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மை என்ன என்று சென்னைக்கு வந்து வகுப்பு எடுக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.- மு.க.ஸ்டாலின்


“எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் - தற்போது ஒன்றுகூடி இருப்பது மக்களுக்காக அல்ல - கூட்டுச்சேர்ந்து கொள்ளையடிக்க;

இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையில் இருந்து விரட்டுவோம்”
- மு.க.ஸ்டாலின் உரை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ‘முப்பெரும் விழா’வை நடத்தினோம். பின்னர் கரூரிலும் கன்னியாகுமரியிலும் நடந்தது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகங்கள் நடத்துகின்றன. கரூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றார்கள் என்றால், இந்தக் கள்ளக்குறிச்சியில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் கழக உணர்வோடு பங்கேற்றுள்ளார்கள். அந்தளவிற்கு இங்கு ‘முப்பெரும் விழா’ சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அடுத்து திருவள்ளூர், தேனி, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழா தொடர்ந்து நடக்க இருக்கிறது.

எனது திருமணம் பொதுவெளியில் அதிகப்படியான நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. - அ.பிரபு MLA.


கடந்த அக்.05 அன்று எங்கள் தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வான எனது திருமணம் பொதுவெளியில் அதிகப்படியான நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

நானும் என் மனைவி குடும்பத்தாரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக இருந்து வந்துள்ளோம், கடந்த சில மாதங்களாக எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்ப்பட்ட நிலையில் மனைவியின் வீட்டாரிடம் பெண் கேட்டு சென்றோம்.

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! - DR.S.ராமதாஸ்



தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்!- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கடிதம்

வறட்சி மாவட்டமான தரும்புரி மாவட்டத்தை செழுமையான மாவட்டமாக மாற்றுவதற்காக தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக  செயல்படுத்த வேண்டும்;  அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்திரபிரதேசம் மாநிலத்தில் செயல்படுகின்றன.


போலி பல்கலைக்கழகங்களின் சொர்க்கமாக மாறும் உத்திரபிரதேசம்!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இன்று (07-10-2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்திரபிரதேசம் மாநிலத்தில் செயல்படுகின்றன. அதற்கு அடுத்தப்படியாக டில்லியில் அதிகளவு போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

புதன், 7 அக்டோபர், 2020

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 முடங்கிய வளர்ச்சிப் பணிகள்: உள்ளாட்சி  அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில்,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஊரகப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளையும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.

எல்இடி (LEDs )விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெள்ளை நிறத்தின் தன்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை நேனோ அறிவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

வெள்ளை ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) ஒரு பொதுவான ஒளி மூலமாக தயாரிப்பதில் எதிர்கொள்ளும் முக்கிய சவால் வண்ண தரம். உயர்தர வெள்ளை ஒளியை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தேடும் விஞ்ஞானிகள் வெள்ளை எல்.ஈ.டிகளை வடிவமைக்க உதவும் முக்கியமான எதிர்வினை நுண்ணறிவுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன்

 விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன் 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

கோவிட் -19 ஐ நிர்வகிப்பதற்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வழங்கினார்


கோவிட் -19 ஐ நிர்வகிப்பதற்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ஆயுஷிற்கான மத்திய மாநில (ஐசி) ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இன்று. என்ஐடிஐ ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மெய்நிகர் நிகழ்வை வழங்கினார்.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! - வைகோ கண்டனம்


 மத்திய அரசின் தொல்லியல் துறையில்

உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! - வைகோ கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று ஏடுகளில் விளம்பரம் செய்து உள்ளது. 

தமிழக ஆளுனர் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்



மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு 
இட ஒதுக்கீடு: புதிய சட்டத்திற்கு ஒப்புதல் 
வழங்க ஆளுனர் தாமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.- மு.க.ஸ்டாலின்

 "திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்”

-  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அங்குள்ள நான்கு கயவர்கள் பல்வேறு கொடுமைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் அக்கிரமத்தைக் கண்டிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தை இன்று நடத்த நாம் முன் வந்திருக்கிறோம்.

அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - DR K. கிருஷ்ணசாமி


 அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - K. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கக்கூடிய 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் அறிவித்தபோது, அதை சாதாரணமாக எண்ணினார்கள். ஆனால், 10,000 என்பதை தாண்டி 20,000 கிராமங்களில் தேவேந்திரகுல மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி விட்ட உடன் பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி அரசு காவல்துறையினரை கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.