வெள்ளி, 29 நவம்பர், 2019

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்


இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் அவர்கள் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல், தடையில்லாமல் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டும்.

திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர்
- மு.க.ஸ்டாலின் பேட்டி.
(தலைவர், திமுக )

உள்ளாட்சி மன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், 'ஏதாவது சில காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா? - தடை பெற்று அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும்', என்கிற ஒரே நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க! - DR.S. ராமதாஸ்

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்:
கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்படாததற்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50% சுங்கக்கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது? என வினா எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது; இதன் மூலம் அச்சாலையை பயன்படுத்துவோரின் உள்ளக் குமுறல்களை நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர்.

வியாழன், 28 நவம்பர், 2019

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து
மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, தமிழகத்தின் நதிகள் இணைப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் விரிவான பதிலை மக்களவையில் இன்று 28 நவம்பர் 2019 அளித்துள்ளார்.

பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து மகாராஸ்டிராவில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள் - ஜி.கே.வாசன்

பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது. - ஜி.கே.வாசன்


மகாராஸ்டிர மாநில மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளை தாரை வார்த்து கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஸ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டி. ஆர். பாலு

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மக்களவையில் டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, மக்களவையில் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மீனவர்களையும் பொதுமக்களையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்.

தமிழில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள்: பாமக முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - DR.S. ராமதாஸ்

தமிழில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள்:
பாமக முயற்சிக்கு கிடைத்த வெற்றி!
-DR.S. ராமதாஸ் அறிக்கை 
(நிறுவனர்,பாமக)

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி) உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 2021-ஆம் ஜனவரி தேர்தல் முதல் தமிழ்வழித் தேர்வு நடைமுறைக்கு வருகிறது.

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? - வைகோ விளக்கம்

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? - வைகோ விளக்கம்


இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார். அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பாறை மீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!
-DR.S.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

காவிரி பாசன மாவட்டங்களின் 9 பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பூமிக்கு அடியில் பாறைகளை பிளந்து மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இது தமிழக உழவர்கள் கொண்டாடப்பட வேண்டிய திருப்பம் ஆகும்.

பழனிசாமி அரசு மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது! - டி.டி.வி. தினகரன்

பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விநியோகத்தில் தமிழகம் முன்னணி:
பழனிசாமி அரசு மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது!
- டிடிவி. தினகரன் 
(

தமிழ்நாட்டில் பால் போன்று மற்ற உணவுப் பொருட்களும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

புதன், 27 நவம்பர், 2019

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை ; இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்!

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை:
இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக)

சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அவற்றையும் தாண்டி வெங்காய விலை உச்சத்தை நெருங்குவது மிகவும் கவலையளி

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! - வைகோ கோரிக்கை

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை


உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாஜகவுக்கு 'காவடி' தூக்கும் அமைச்சர் திரு.ஜெயக்குமார் 'சூப்பர் சீஃப் மினிஸ்டர் ' ஆக முயற்சிக்க வேண்டாம்!

பாஜகவுக்கு 'காவடி' தூக்கும் அமைச்சர் திரு.ஜெயக்குமார் அனைத்துத்துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து 'சூப்பர் சீஃப் மினிஸ்டர் ' ஆக முயற்சிக்க வேண்டாம்! 
- திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி
(செய்தித்தொடர்பு,திமுக)

'மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை' பற்றியே இன்னும் முழுமையாகத் தெரிந்திராத மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தன்னை ஏதோ 'ஆக்டிங் சீஃப் மினிஸ்டர்' போல் நினைத்துக் கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது, அதிகப்பிரசங்கித்தனம் என்பதை விட, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! - DR.S. ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை
மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்!
-DR.S. ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் செய்திகள் பரப்பப்படும் நிலையில், உண்மையில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மிகவும் அதிகமாகும். இது ஏழை, நடுத்தர மாணவர்களை சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.

கொடியவன் கோத்தபயாவே, இந்தியாவுக்குள் நுழையாதே!!! - வைகோ

கொடியவன் கோத்தபயாவே,
இந்தியாவுக்குள் நுழையாதே!!! 
நவம்பர் 28 தலைநகர் தில்லியில் 
வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! -DR.S.ராமதாஸ்

ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு
பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்!
-DR.S.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

வியாழன், 21 நவம்பர், 2019

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.


பாபர் மசூதி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் இன்று (நவ.21) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தை முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல! - ஜி.கே.வாசன்

நாடாளுமன்றத்தை முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல! - ஜி.கே.வாசன்


நாடாளுமன்றத்தை கூச்சல் குழப்பத்தால் முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சிகளில் மறைமுகத் தேர்தல்- வைகோ கண்டனம்

உள்ளாட்சிகளில் மறைமுகத் தேர்தல்- வைகோ கண்டனம்


மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ள அ.இ.அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் - DR.S. ராமதாஸ்

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள
கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை வரும் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி நீரில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்தின் மேட்டூர்அணைக்கு வரும் காவிரி
நீரில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க தமிழகஅரசு உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.கே.வாசன்
( தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் )


தமிழகத்தின் மேட்டூர் அணையின் தண்ணீரில் கர்நாடகாவின் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் உரிய இழப்பீட்டை பெறவும் தமிழக அரச உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதன், 20 நவம்பர், 2019

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே! - தொல்.திருமாவளவன்

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே!
மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் - தொல்.திருமாவளவன்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்! - DR.S. ராமதாஸ்

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல்
பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்திய கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் செய்யப்படும் கால தாமதம் மிகவும் வருத்தமளிக்கிறது.

சொத்துவரி உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின்

"திமுக தலைமையில் பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராடியபோதும் திரும்பப்பெறாத சொத்துவரி உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது”

- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
(தலைவர், திமுக.)

மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதும், முதல்நிலை எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போதும், “முடியவே முடியாது” என்று அடம்பிடித்த அதிமுக அரசு, “சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகாராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் 50 முதல் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்துவரி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும்” என்று “உள்ளாட்சித் தேர்தல்” அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது.

மாநிலங்களவையில் ஜலியன்வாலாபாக் அறக்கட்டளை மசோதா வைகோ உரை


ஜலியன்வாலாபாக் அறக்கட்டளை மசோதா
வைகோ ஆற்றிய உரை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 19.11.2019 (நேற்று) மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை :

நவம்பர் 19. ஜலியன் வாலாபாக் என்ற பெயரை உச்சரித்தாலே, புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்கள், போராளிகளின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்கின்றது. நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கும் ஜலியன்வாலாபாக் படுகொலை, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது. அந்த நாள், சீக்கிய மக்கள் கொண்டாடுகின்ற பைசாகி திருநாள் ஆகும்.

செவ்வாய், 19 நவம்பர், 2019

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் DR.S.ராமதாஸ் கருத்து

சென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த DR.S.ராமதாஸ் கருத்து

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தமானவை. அவை அவர்களுக்கு மீட்டெடுத்து வழங்கப்பட வேண்டும்!

ரஜினியின் கருத்து அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு. - E.R.ஈஸ்வரன்


எடப்பாடி பழனிசாமி அதிசயம் நடந்து முதல்வரானதை போல தானும் முதல்வர் ஆவேன் என்ற ரஜினியின் கருத்து அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கனவிலும் முதல்வராக நினைக்கவில்லை

கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்த்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும்

இந்திய அரசியல் சட்டம் 70-ஆம் ஆண்டு நிறைவடையும் தினத்தை வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி பிரதமர் அவர்கள் தலைமையில் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே. 

மாநிலங்கள் அவை 250 ஆவது கூட்டத் தொடர் வைகோ ஆற்றிய உரை

250 ஆவது கூட்டத் தொடர், வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாளில் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி - வைகோ


மாநிலங்கள் அவையின் 250 ஆவது கூட்டத் தொடர், நேற்று (18.11.2019) தொடங்கியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை,

திங்கள், 18 நவம்பர், 2019

இலங்கை தேர்தலில் கோத்தபாய வெற்றி: தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு! - DR.ராமதாஸ்

இலங்கை தேர்தலில் கோத்தபாய வெற்றி:
தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)


இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா சாவில் மர்மம் இருப்பதற்கான பலத்த ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் 1959 ஆம் ஆண்டில் ஜெர்மனி அரசின் ஒத்துழைப்போடு சென்னை கிண்டியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் அமைக்கப்பட்டது. இத்தகைய கல்வி நிறுவனங்களின் மூலமாக மாணவர்களிடையே அறிவியல் ஈடுபாடு வளரவும், ஆராய்ச்சியில் தீவிரமாக பங்கு கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் படித்த பலர் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய பெருமைகளை பெற்ற இந்திய தொழில்நுட்ப கழகம் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. 

கிண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த 19 வயது மாணவி பாத்திமா கடந்த வாரம் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. வகுப்பிலேயே படிப்பில் முதன்மை நிலையில் இருந்த தம் மகளின் சாவில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்கொலை செய்யப்பட்ட மாணவி பாத்திமாவின் உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை உறுதி செய்கிறது. மாணவி பாத்திமா எழுதியிருக்கிற குறிப்பு மற்றும் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கிற கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளன. இதில் தமது சாவுக்கு ஒரு பேராசிரியை கொடுத்த மனஉளைச்சல் தான் காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பேராசிரியரை விசாரிக்காமல் இருந்தது ஏன் ? இதுகுறித்து புலன் விசாரணை ஏன் செய்யப்படவில்லை ?

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு இத்தகைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமுதாய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மாணவர்கள் உண்ணும் உணவில் கூட சைவம், அசைவம் என்று வேறுபாடு காட்டப்படுகிறது. அசைவ உணவு உண்ணுவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்கனவே பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவை பற்றியெல்லாம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கண்டு கொள்வதில்லை. 

எனவே, தற்கொலை செய்து கொண்ட ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா சாவில் மர்மம் இருப்பதற்கான பலத்த ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை பெற்றோரும் உறுதி செய்துள்ளனர். இந்த தற்கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணையை, தமிழக காவல்துறை நடத்தி, உண்மையை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைஉச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது! - வைகோ

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை
உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது! - வைகோ
தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

வைகோ அறிக்கை

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்குத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கர்நாடக மாநிலம், சிக்கப்பல்லூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கம் - நந்தி மலையில் உற்பத்தியாகும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர், தட்சிணப் பினாசினி ஓடை வழியாக கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாக தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைகின்றது.

தமிழகத்தில் 320 கி.மீ. தொலைவு பாயும் இந்த ஆறு, கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து சேருகிறது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாகப் பாய்ந்து கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தமிழக எல்லை ஓரத்தில், 50 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநிலம் முனைந்துள்ளது.

1892 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும் - மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசனத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு, தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. இதனைத் தடை செய்யக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணை முடிந்து, நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “1956 ஆம் ஆண்டு நதிநீர் தவா சட்டப்படி தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறது.

தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது, தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதற்கு ஏற்ப, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை!-Dr.S.ராமதாஸ்

பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை 
பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை!
                  -Dr.ராமதாஸ் அறிக்கை
   
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு  அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை தான் மாணவர்களை சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும்  கூல் லிப் புகையிலை கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த போதைப்  புகையிலைப் பொருள், இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் மாணவர்களையே விற்பனை முகவர்களாக மாற்றியிருக்கின்றனர் இப்பொருளை புழக்கத்தில் விட்டவர்கள்.

வழக்கமான போதைப் பொருட்களுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வாறு அடிமையாக்கப்படுவார்களோ, அதேபோல் தான் பள்ளி மாணவர்களும் கூல் லிப் போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதலில் சில நாட்களுக்கு கூல் லிப் போதைப் புகையிலை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் புகையிலைக்கு அடிமையான பின்னர் அவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பிடித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பணத்தைக் கொடுத்து கூல் லிப் போதைப் புகையிலையை வாங்கி பயன்படுத்தும் நிலையில், பணம் கிடைக்காத மாணவர்கள் தங்களின் நண்பர்களை மூளைச்சலவை செய்து இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி, அதற்கு ஈடாக தங்கள் பயன்பாட்டுக்கு கூல் லிப் புகையிலையை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாக இந்த போதைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அடிமையாகின்றனர்.

கூல் லிப் என்பது சற்று மாறுபட்ட வடிவத்தில் கிடைக்கும் மெல்லும் புகையிலை ஆகும். வடிகட்டி பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல் லிப் புகையிலையை வாயில் போட்டு, ஒரு ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டால், அப்புகையிலை பட்டதும் சுரக்கும் உமிழ்நீர் ஒருவகையான போதையை ஏற்படுத்துகிறது. அதற்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். சென்னையில் பல பள்ளிகளில் பாடவேளைகளிலேயே மாணவர்கள் இந்த புகையிலையை பயன்படுத்தி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த புகையிலை வாய் நாற்றத்தைப் போக்கும் வாசனைப் பொருள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதால், இதற்கு மாணவர்கள் மிகவும் எளிதாக அடிமையாகின்றனர். இது மிக மிக ஆபத்தான போக்கு ஆகும்.

புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றை விட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50&க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். வழக்கமான புகையிலைப் பொருட்கள் இளைஞர்களை குறி வைக்கும் நிலையில், கூல் லிப் மாணவர்களை குறி வைப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று  விதிகள்  உள்ள நிலையில், கூல் லிப் போதைப் புகையிலை வகுப்பறை வரை வந்து பரபரப்பாக விற்பனையாகிறது.

மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பதின் வயது பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும்.  சரியாக பதின் வயது தொடங்கும் பருவத்தில் மாணவர்கள் கூல் லிப் புகையிலைக்கு அடிமையானால் அடுத்தடுத்தக் கட்டங்களில் இன்னும் மோசமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை இழந்து விடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வியாழன், 14 நவம்பர், 2019

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் -டிடிவி. தினகரன்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத்
தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு
உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்
 - டிடிவி.தினகரன்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை
கட்டுவதற்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த
அதிர்ச்சி அளிக்கிறது. பழனிசாமி அரசு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உரிய ஆதாரங்களையும், சரியான
முறையில் வாதங்களையும்
எடுத்து வைப்பதற்கான
பணிகளையும் உடனடியாக செய்திட வேண்டும்.

கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும்
தென்பெண்ணையாறு, அந்த மாநிலத்தில் 112 கிலோமீட்டர் தூரம்
மட்டுமே பாய்கிறது
தமிழகத்தில் கிருஷ்ணகிரி,
தர்மபுரி,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில்
320 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நதி ஓடி வருகிறது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றினால் மேற்கண்ட மாவட்டங்களில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் துணை புரிகிறது.

இந்நிலையில் காவிரியின் துணை ஆறுகளில் எல்லாம்
அணைகளைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமல் செய்து வரும்
கர்நாடக, தென்பெண்ணை
ஆற்றின் முக்கிய துணை
ஆறு மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் புதிய அணையை கட்டி வருகிறது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக
மாநிலம் யார்கோட் என்ற இடத்தில் எழுப்பப்படும், இந்த அணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்திருக்கிறது.

நதியின் கீழ்படுகை மாநிலங்களுக்கு அந்த நதி நீர் உரிமை இருக்கிறது. என உலகம் முழுவதும் பின்பற்றப்படும் விதி இதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சி
அளிக்கிறது இது தொடர்பான வாதங்களைப் பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான முறையில் எடுத்து வைக்கவில்லையோ என்கிற கேள்வியும் ஆதங்கமும் எழுகிறது.

எனவே, இயற்கைக்கு எதிரான கர்நாடகாவின் சட்டவிரோத
அணை எழுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்த கட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள
வேண்டும். ஒரு நதி, தனது பயணத்தில் நான்கில் மூன்று பகுதி தூரம் ஓடுகிற மாநிலத்திற்கு எப்படி அந்த நதியில் உரிமை இல்லாமல் போகும் என்பதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

இது மட்டுமின்றி மத்திய அரசின் வழியாக அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு தரப்பில் மேற்கொள்ள
வேண்டும். மேலும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிற தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சிகளும், தமிழகத்தின் நலனைக் காவு
கேட்கிற புதிய அணை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று எப்படியாவது கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து
நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்:உரிய விசாரணை நடத்திடுக!-வைகோ அறிக்கை

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்:
உரிய விசாரணை நடத்திடுக!
-வைகோ அறிக்கை
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் மாணவி பாத்திமா லத்தீப். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சராயு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்த இவர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக கடந்த கடந்த 8 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது.

தன் பேராசிரியர்கள் சிலர்தான் இதற்குக் காரணம் என்று  பாத்திமாவின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றது. பாத்திமாவின் மரணம் குறித்து உதவி வேண்டி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதல்வரின் உதவியை நாடியுள்ளார்.

மேலும், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில், “தன் மகள் கடினமான பாடங்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், கடைசியாக நடந்த தேர்வில் என் மகள்தான் வகுப்பில் முதலிடம். பாத்திமாவின் செல்போனை ‘ஆன்’ செய்தபோது ஸ்கீரின் சேவரில் தன் டேப்லெட்டை பார்க்குமாறு கூறப்பட்டிருந்தது. அதில், என் மகளுக்கு நெருக்கடி கொடுத்த பேராசிரியர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்து. என் மகள் தற்கொலைக்கு அவர்கள்தாம் காரணம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்

“பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை” என்று மானுடவியல் துறை தலைவர்  உமாகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி.யில் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தத்தில் 52 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்று ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி மனதைப் பதற வைக்கிறது. 2016- ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 மாணவ - மாணவிகள் சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி பாத்திமா.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரியும், உத்தரப்பிரதேசத்தை எம்.டெக் மாணவர் கோபால் பாபுவும் தற்கொலை செய்து கொண்டனர். ஐ.ஐ.டி தற்கொலைகளைக் காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. பாத்திமா இறப்பிலும் தமிழ்நாடு காவல்துறை, எதையோ மூடி மறைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடத்தில் கொடுத்த புகார் மனுவில் பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மட்டுமல்ல; பேராசிரியர்களும் ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துணைப் பேராசிரியர் அதிதி ஷர்மா, குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.

பேராசிரியர்களின் அணுகுமுறை மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்களுக்குக் கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. மனநல மருத்துவர்களும் அறிவுரைகள் வழங்குகின்றனர். எனினும், பலன் அளிக்காமல் ஐ.ஐ.டி வளாகத்தில் தொடர்ச்சியாகத் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொல்லத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாத்திமாவின் தாயார், ''என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. வட மாநிலங்களில் இன ரீதியாக நடைபெறும் சம்பவங்கள் என்னை பயமுறுத்தின. அதனால், என் மகளை அங்கே படிக்க அனுப்பவில்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றுதான் அனுப்பி வைத்தேன். ஆனாலும் இப்படி நடந்துவிட்டது'' என்று கதறியுள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலக் கல்வி நிலையங்களில் மர்ம மரணங்களுக்கு உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், மாணவி பாத்திமாவின் சோகமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூகநீதிக்கு எதிரான சாதி - மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படுவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்குக் காரணமாகி விடுகின்றது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.

மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக்காட்டுகிறது. - மு.க.ஸ்டாலின்

மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தாயாரின் கூற்று, தமிழ்
மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக்
காட்டுகிறது.
கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும்

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜே மாணவி, பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது
மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான்
பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐஐடியில் சேர்த்ததாகவும், அப்படி இருந்தும் தன் மகளைச்
சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்ப்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக சிறுபான்மைச்
சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது நமது தமிழ் மண்ணின் மீது வைத்த
நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான
நிகழ்வாகும்.

தமிழ்நாட்டு மாணவர்கள். பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கு மர்ம
மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பாதிப்பும் துடிப்பு. இந்த மாணவியின் சோகமயமான
உயிரிழப்பிலும் ஏற்படுகிறது.

மாணவியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேரள முதல்வர்
கோரியிருக்கிறார்.
மாநிலத்தை ஆள்பவர்கள், இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான,
வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என
வலியுறுத்துகிறேன்.
விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து
இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
தமிழ்நாட்டின் தலைநகர் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே
அமைந்துள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும்
சமூக நீதிக்கு எதிரான சாதி மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில்
ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்
எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களை நடத்துவதும் இத்தகைய விபரீத
விளைவுகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.

கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, நம் இந்திய தேசியக்
கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும்
நடத்தும் போக்கு ஐ.ஐ.டி, உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன
செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம்; அரசாணை பாராட்டுக்குரியதாகும் - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
-ஜி.கே.வாசன்
(தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்.)

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். அதாவது உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்

காவல்துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக!

காவல்துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்;
குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக!

- வைகோ அறிக்கை
(பொதுச்செயலாளர், மதிமுக.)

தமிழகக் காவல்துறைக்கு ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்தும், இதில் 11 வழிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், உள்துறைச் செயலாளர் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சேப்பாக்கம் கிரிக்கெட் திடல் குத்தகை சர்ச்சை குறித்து விசாரணை வேண்டும்! - Dr. S. ராமதாஸ்

சேப்பாக்கம் கிரிக்கெட் திடல் குத்தகை
சர்ச்சை குறித்து விசாரணை வேண்டும்!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மட்டைப்பந்து திடலுக்காக தமிழ்நாடு மட்டைப்பந்து சங்கம் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.2081 கோடியை ரூ.250 கோடியாக குறைப்பதற்கு தமிழக அரசு பேரம் நடத்துவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது புகாரின் உண்மைத் தன்மை ஒருபுறமிருக்க, இவ்விவகாரத்தில் 2000-ஆவது ஆண்டு முதல் ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

புதன், 13 நவம்பர், 2019

சென்னை ஐ.ஐ.டி மாணவி விடுதியில் தற்கொலை

சென்னை ஐ.ஐ.டி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்
 கே. பாலகிருஷ்ணன்
(மாநிலச் செயலாளர், CPIM)

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் திரு.சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! - Dr. S. ராமதாஸ்

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள்
சீரழிவதை அனுமதிக்கக் கூடாது!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல்,

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. - கே. எஸ். அழகிரி

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. 
-கே. எஸ். அழகிரி 
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.


இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும். உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர் 2014 ஆம் ஆண்டு முதல் மிகமிக குறைவாக மைனஸ் 1.2 சதவீதமாக இருக்கிறது. முக்கிய துறைகளின் வளர்ச்சி நான்கு ஆண்டுகளிலேயே மிகவும் குறைவாக இருப்பது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து விட்டது. மூலதனப் பொருட்களின் வளர்ச்சி மைனஸ் 21 சதவீதமாகக் குறைந்து விட்டது. பயணிகள் வாகன விற்பனை 23.7 சதவீதம் குறைந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! - Dr. S. ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள்
மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஆழ்துளை கிணறு அமைக்க விதிக்கும் கட்டுப்பாடுகளால் 50,000 பேர் வேலை இழக்கும் அபாயம். - E.R.ஈஸ்வரன்

ஆழ்துளை கிணறு அமைக்க விதிக்கும் கட்டுப்பாடுகளால்
50,000 பேர் வேலை இழக்கும் அபாயம். தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- E.R.ஈஸ்வரன் 
(கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)

ஒரு விபத்து நடந்தால் அந்த விபத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது தேவை தான். ஆனால் நடைமுறை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் இருக்கின்ற 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.15,000 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில்தான் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலை நம்பி இருப்பவர்கள் 1000 கணக்கில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்ய வேண்டுமென்றால் 5 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வேண்டும். இது நடைமுறை சாத்தியமற்றது. 

ஒரு மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். கட்டணமாக இவ்வளவு அதிகமான தொகையை வசூலிக்க முயற்சிக்க கூடாது. பொருளாதார தேக்க நிலையாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பினாலும் முடங்கிப்போய் இருக்கின்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவு அமைந்திருக்கிறது. 50,000 குடும்பங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இந்த உத்தரவுகளில் இருக்கின்ற கட்டண வசூலை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். 

திங்கள், 11 நவம்பர், 2019

கள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க! - Dr. S. ராமதாஸ்

கள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி
கொன்ற காவலர்களை கைது செய்க!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இரு சக்கர ஊர்தி ஓட்டுனர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், அந்த ஊர்தியில் பயணித்த மூதாட்டி காயமடைந்து சாலையில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் அப்பாவி பெண் மீது காவலர்கள் நடத்திய அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

கல்வியை சீரழித்து, வன்முறை வளர்க்கும் பப்ஜி இணைய ஆட்டத்தை தடை செய்க! - Dr.S.ராமதாஸ்

கல்வியை சீரழித்து, வன்முறை வளர்க்கும்
பப்ஜி இணைய ஆட்டத்தை தடை செய்க!
-  Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)


தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பப்ஜி (PUBG - PlayerUnknown's Battlegrounds) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குவது கவலையளிக்கிறது.

சனி, 9 நவம்பர், 2019

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
- கே. பாலகிருஷ்ணன்
(மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))

நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தியா பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே வழக்கின் தீர்ப்பும்! - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உலகம் இதுவரை காணாத ஓர் அடாவடி வழக்கே அயோத்தி பாபர் மசூதி வழக்கு! அதே சமயம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே வழக்கின் தீர்ப்பும்!
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி

பாபர் மசூதி அமைந்த அந்த அயோத்தி நிலம் சர்ச்சைக்குரிய இடம் என்று சொல்லும் உச்ச நீதிமன்றம், அப்படிச் சொல்ல எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. ஆக, முதலிலேயே வழக்கில் சறுக்கல், திசைமாற்றல்.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது - வைகோ

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
- வைகோ அறிக்கை
(பொதுச்செயலாளர், மதிமுக.)

இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் மனதில் கவலை ஊட்டிய பாபர் மசூதி பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்; அனைவரும் மதிப்போம்! - DR.S. ராமதாஸ்

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை
வளர்க்கட்டும்; அனைவரும் மதிப்போம்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த 3 அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2010&ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு செல்லாது என்றும், அந்த நிலம் முழுமையாக இந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வெள்ளி, 8 நவம்பர், 2019

எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை லதா ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (08.11.2019) சென்னை, தலைமைச் செயலகத்தில் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.