திங்கள், 28 பிப்ரவரி, 2022

தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.


 "தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன்!"

- திமுகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

படிப்பு, விளையாட்டு, இணைப் பாடத்திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு கல்வி நிறுவனங்கள் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு  வலியுறுத்தியுள்ளார். பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கொள்கைகளைத்  தனியார் பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆதரவற்றோர் மற்றும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


 திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம் - 1:

 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பாஜக தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது. - கே‌.எஸ்.அழகிரி


 கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக அமைப்புகளான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தமிழக வாக்காளர்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவதூறு கருத்துகளைக் கூறிவருகிறார்கள். தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா? - ஐ.பெரியசாமி

 "அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா?"

- திமுகத் துணைப் பொதுச்செயலாளரும்  கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு ஐ.பெரியசாமி அவர்கள் அறிக்கை.

“ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி- சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது.

தமிழக நகரங்கள் காலநிலை அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட வேண்டும். - DR.S.ராமதாஸ்

 தமிழக நகரங்கள் காலநிலை அவசரநிலைப் 

பிரகடனத்தை வெளியிட வேண்டும். - DR.S.ராமதாஸ்

உலகின் அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய கேடு புவிவெப்பமடைதலும் (Global Warming) அதனால் நேரும் காலநிலை மாற்றமும் (Climate Change) ஆகும். பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் காரணமாகும். இதனை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட உலகின் 18 நாடுகளும் 2100 நகராட்சிகளும் காலநிலை அவசநிலை பிரகடனங்களை செய்துள்ளன.

புதன், 16 பிப்ரவரி, 2022

இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும்.



பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தல் அறிக்கை 2022 முக்கிய அம்சங்கள் 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 'நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது' என்பதை வலியுறுத்தி வருகிறார்.  நாட்டு மக்களுக்கான எந்த ஒரு திட்டமிடலும் உள்ளாட்சியிலிருந்து தொடங்க வேண்டும். இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில்  ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

அதிகாரப்பரவலாக்கம் என்பது ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இயங்கும் ‘துணையமைப்புக் கொள்கை (Principle of Subsidiarity)’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தின் பெரும்பாலான சேவைகள் மக்களுக்கு அருகிலேயே உள்ளூர் அளவில் நிருவகிக்கப்பட வேண்டும். 

மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார் (பிப்ரவரி 11, 2022). 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மகாராஷ்டிரா ஆன்மீக பூமி என்பது போலவே, அநீதிக்கு எதிராக போராடும் வீரம் செறிந்த பூமியும் ஆகும்.  மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.  இந்த மாநிலம் திறமை மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளது.  இத்தகைய சிறப்புகள் காரணமாக நான் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும்,  வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் மகாராஷ்டிராவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனர்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- திருமதி ஸ்மிருதி இரானி


குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையை ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.- திரு. அஷ்வினி குமார் சவுபே


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக  பதில் அளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு. அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தொழில்நுட்பம் சார்ந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையை ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

புதன், 9 பிப்ரவரி, 2022

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது என மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

அணு மின்சார அலகுகளின் உற்பத்தியை சார்ந்ததாக இந்த பங்களிப்பு இருக்கும் என்றும், அணு மின்சார உற்பத்தியை அதிகபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பள்ளிப் பாடப்புத்தகங்களில் விடுதலைப் போராட்டத்திலிருந்து வீரத்தின் கதைகளையும், சமூக நல்லிணக்கத்தையும் விவரிக்க வேண்டும்.- குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு


 தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை அறியவும் பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் நாகரீகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், விடுதலைப் போராட்டத்திலிருந்து சமூக நல்லிணக்கத்தை விவரிக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

கற்பித்தலின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி உரையாற்றிய திரு நாயுடு, “இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். நமது புகழ்மிக்க வரலாறு நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்;   வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது” என்று கூறினார்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

இந்திய இளைஞர்கள் தங்களின் புதிய தொழில்களைத் தொடங்கி உலகின் மூன்று முதல் நிலை புதிய தொழில் தொடங்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளனர்.- திரு நரேந்திர மோடி


 நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, பதில் அளித்து உரை நிகழ்த்தினார். “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது அதனை எங்கே, கொண்டு செல்லவிருக்கிறோம், எப்படிக் கொண்டு செல்லவிருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கு இது மிகவும் முக்கியமான நேரம்” என்று பிரதமர் கூறினார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டான பங்களிப்பும், கூட்டான உரிமை ஏற்பும், அவசியம் என்பதிலும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகம் இன்னமும் கொவிட்-19-வுடன் போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற சவால் எதையும் மனிதகுலம் கண்டதில்லை.  இந்திய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்குத்தான். உலகளவில் ஏராளமான தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களுக்கு இடையே இந்த செயல் போற்றுதலுக்குரியது.

ஆளுநருக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும், முழுக்க முழுக்க, சந்தர்ப்பவாத, சுயநல நடவடிக்கை என்பது தெளிவாகிறது. - வானதி சீனிவாசன்



 தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் அங்கம்தான் ஆளுநர்

அரசியல் சட்டப்படிதான் ஆளுநர் செயல்பட முடியும்.- வானதி சீனிவாசன்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆளுநர் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் ஆளுநரின் வேலை" என்று திமுகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.- கி.வீரமணி


ஆறே நாள்களில் புயல் வேக நடவடிக்கையின் மூலம் சட்டப்பேரவையில் 'நீட்' விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்குப் புதிய வெளிச்சம்!

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதற்குப் பாராட்டுகள்- வாழ்த்துகள்!

எல்லையற்ற மகிழ்ச்சி!

மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்!.- DR.S.ராமதாஸ்


மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு சட்டம்:
ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க, சரியான முடிவு. ஆனாலும், நீட் விலக்கு என்ற இலக்கை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால் அதற்கு அரசு ஆயத்தமாக வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது கண்டிக்கத்தக்கது.- DR.S.ராமதாஸ்

 இலங்கையில் தொடங்கிய படகுகள் ஏலம்:

உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!  - DR.S.ராமதாஸ்

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது கண்டிக்கத்தக்கது.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.- திரு. ராமேஸ்வர் தெலி


 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

நித்தி ஆயோகின் ஃபின்டெக் ஓபன் (Fintech Open) உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.


 ஃபின்டெக் (நிதி சார்ந்த தொழில்நுட்பம்) முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக ஃபோன்பே, ஏடபிள்யூஎஸ், இஒய் ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 7 முதல் 28 வரை 3 வார கால இணையவழியிலான  ‘ஃபின்டெக் ஓபன்’ உச்சி மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த மாநாட்டை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் முன்னிலையில்  இன்று  தொடங்கிவைத்தார்.

அதிமுக அதற்கு ஒத்துழைக்குமா? சட்டமன்ற கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கத்தான் போகிறது.- கே.பாலகிருஷ்ணன்


நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் செயல், தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக ஒருங்கிணைத்த சட்டமன்ற கட்சி தலைவர்களுடைய கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளது.

ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆளுநரின் செயலை ஆதரித்துக் கொண்டே, 'நீட் தேர்வு ரத்து செய்வதில் அதிமுக உறுதியாக உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது எதற்காக இந்த இரட்டை வேடம் என்ற கேள்விதான் எழுகிறது.

‘மயிலே, மயிலே' என்றால் இறகு போடாது! பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வரவேண்டிய அவசரமும், காலமும் வந்துவிட்டது! - கி.வீரமணி


 ‘நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை காரணமாக, தமிழ்நாட்டில் முதல் தலைமுறைப் படிப்பாளர்கள்,  கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள், ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களின் வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கும், தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கும் வாய்ப்பு குறைகிறது என திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கூறிக்கொண்டு வந்திருக்கின்றன.

இதன் தீர்வாக, முந்தைய அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் ஏற்கப்படாதது குறித்துக்கூட அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. தெரிந்த பிறகும் அ.தி.மு.க. அரசால் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மின்வாரிய இழப்பு ரூ.17,000 கோடியாக உயர்வு: நிர்வாக சீரமைப்பு உடனடி தேவை!. - DR.S.ராமதாஸ்



 மின்வாரிய இழப்பு ரூ.17,000 கோடியாக 

உயர்வு: நிர்வாக சீரமைப்பு உடனடி தேவை!. - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு ஆகும். மின்வாரிய இழப்பு ரூ. 12,800 கோடி என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும் என்று உத்தேசிக்கப் பட்டிருந்த நிலையில், அதை விட நான்காயிரம் கோடி கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு புதிய ரயில் திட்டங்கள்: மொத்த மதிப்பில் 0.7% மட்டுமே ஒதுக்கியது அநீதி! - DR.S.ராமதாஸ்



தமிழ்நாடு புதிய ரயில் திட்டங்கள்: மொத்த
மதிப்பில் 0.7% மட்டுமே ஒதுக்கியது அநீதி! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிய தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவையான மொத்த மதிபீட்டில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிதி மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது அநீதியாகும்.

மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணை ஆகியவற்றைக் கொண்ட செயல்திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்



வரவேற்கத்தக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு:
அனைத்து பார்களையும் மூட வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3,719 குடிப்பகங்களை உடனடியாக மூட வேண்டும்; மீதமுள்ள குடிப்பகங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து, தமிழகமே ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பும் - கே.எஸ். அழகிரி



தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்ற காரணத்தை கூறி, நீர் மட்ட அளவைக் குறைக்க தீவிர முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. 1964 ஆம் ஆண்டு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 155 அடியிலிருந்து 152 அடியாக அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த முயற்சிகளுக்கு தடையாக கேரள அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதனால், இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டில் இருந்து 100-வது ஆண்டு வரை- பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு அடித்தளம் அமைத்து ஒரு வரைபடத்தை கொடுக்க பட்ஜெட் முயல்கிறது.- நிர்மலா சீதாராமன்

 "அமிர்த காலமான அடுத்த 25 ஆண்டுகளில் - இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டில் இருந்து 100-வது ஆண்டு வரை- பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு அடித்தளம் அமைத்து ஒரு வரைபடத்தை கொடுக்க பட்ஜெட் முயல்கிறது", என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் போது இந்தத் தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்தார். அமிர்த கால திட்டத்தின் கீழ் வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்கான அடுத்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

மத்திய வங்கியின் மூலம் ‘டிஜிட்டல் ரூபாய்’ என்ற டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்வது பற்றிய அறிவிப்பு


 மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  தனது பட்ஜெட் உரையில் 2022-23 நிதியாண்டிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும்; இந்த டிஜிட்டல் பணம், ப்ளாக்செயின் மற்றும் இதர வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் வங்கி சேவை:

3.8 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


 2022 – 23 ஆம் நிதியாண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

குடிமக்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சூரிய மின்உற்பத்தி கலன்களை தயாரிப்பதற்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைக்காக ரூ.19,500 கோடி கூடுதலான ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


 அமிர்த காலத்தில் எரிபொருள் இடைமாற்றம் மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த அரசு குறிக்கோளுடன் உள்ளது.  பட்ஜெட் 2022-23ஆனது இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எரிசக்தி இடைமாற்றம் மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்

இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கு மிகப் பெரும் பாதகமான அம்சமாக பருவநிலை மாறுதலின் காரணிகள் அமைந்துள்ளன என்று தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் வர்த்தகம் புரிவதை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.- நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்


 நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் வர்த்தகம் புரிவதை எளிமையாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மனித வளம், முதலீடுகள் ஆகியவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் திறம்பட பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்மாதிரி மாற்றத்திற்காக நகர்ப்புற வளர்ச்சியை செம்மைப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய நிதிநிலை அறிக்கை பரிந்துரை


 முன்மாதிரி மாற்றத்திற்காக நகர்ப்புற வளர்ச்சியை செம்மைப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய நிதிநிலை அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. புகழ்பெற்ற நகர்ப்புற திட்டமிடுபவர்கள், நகர்ப்புற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை கொண்ட இந்த குழு  நகர்ப்புறத் துறை கொள்கைகள், திறன் மேம்பாடு, திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் பரிந்துரைகளை வழங்கும். இதனை மத்திய பட்ஜெட் 2022-23-ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.


 லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம் 01 பிப்ரவரி 2022 அன்று  இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப்  பொறுப்பேற்றார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான , லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் பொறியாளர் பிரிவில் - கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (தி பாம்பே சாப்பர்ஸ்) ல் பணியில் நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப்  பகுதியில்  பல்லன்வாலா செக்டார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பராக்ரம் நடவடிக்கையின் போது ஜெனரல் ஆஃபீசர் பொது அதிகாரியாக பொறியாளர் படைப்பிரிவொன்றுக்கு தலைமை தாங்கினார். அவர் கேம்பர்லி (இங்கிலாந்து ) ஊழியர் பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்றவர், ஹையர் கமாண்ட் உயர் தலைமை  மற்றும் தேசிய பாதுகாப்புக்  கல்லூரி (NDC) படிப்புகளையும் பயின்றவர்.

அடித்தட்டு மக்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். சாமானிய மக்களுடைய தேவைகளை, கூக்குரலை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.- E.R ஈஸ்வரன்


 அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை.

மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒரு திரைப்படம் பார்க்கும் போது இடைவேளைக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் நிறைவு என்று போட்டு முடித்தது போல இந்தியா முழுவதும் எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியோடு ஏமார்ந்து போய் இருக்கிறார்கள். 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஏற்றுமதி மிக குறைவாக இருக்கின்ற சூழ்நிலையில் அதை அதிகப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உடைய இரத்தத்தை உறிஞ்சி தான் தனியார் பெரு தொழில் நிறுவனங்கள் லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்தின் உரை


 கொரோனா வைரசால் ஏற்பட்ட பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த ஆண்டுகளில் இந்திய மக்கள் ஜனநாயக மாண்புகள், கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவற்றில் அளப்பரிய மதிப்பை வெளிப்படுத்தினார்கள். சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், ஒவ்வொரு இந்தியரின் மனஉறுதியும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்த நம்பிக்கையுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து இந்தியர்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற இரு அவைகளில் உரையாற்ற இன்று கூடியிருக்கும் தருணத்தில் தங்களின் கடமைகளுக்கு மிக உயரிய முன்னுரிமை அளித்து, இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாத்த லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுக் கால நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பு செய்த மகத்தான அனைத்து ஆளுமைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.