வியாழன், 20 மே, 2021

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியவர்கள் விவரம்'


கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்கேற்ப, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று (20.5.2021) திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு,

  • ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் திரு. நாகராஜன் அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை,
  • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் திரு. ராஜா எம். சண்முகம் அவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • திருப்பூர் சாய ஆலைகள் சங்கத்தின் சார்பில் திரு.எஸ். முருகசாமி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் திரு. வி. ரகுபதி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • கே.ஆர்.சி. ஹவுசிங் மற்றும் இன்பராஸ்ட்ரக்சர் கம்பெனி சார்பில் திரு. சிகாமணி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை,
  • டையிங் சங்கத்தின் சார்பில் திரு. சேகர் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • மங்கலம் - மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் திரு. மூர்த்தி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • ஜெகத்குரு டெக்ஸ்டைல்ஸ் சார்பில் திரு. முருகேசன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • ஜே.வி. டேப்ஸ் சார்பில் திரு.வி.பழனிசாமி அவர்கள் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • டாக்டர் தங்கவேல் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • அகில் நிட் எக்ஸ்போட்ஸ் தலைவர் (நிட்மா) திரு. ரத்தினசாமி அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் (நிட்மா) திரு. ஆர். ராஜாமணி அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திரு. வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் அவர்கள் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
  • விக்னேஷ் ஏஜென்சீஸ் சார்பில் திரு.கே. ஆறுமுகம் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 
என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக