வெள்ளி, 21 மே, 2021

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



கொரோனா நோய் தடுப்புப் பணியில் திருக்கோயில்கள் சார்பாக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தினசரி ஒரு இலட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கிவரும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் (18.05.2021) அன்று கொரோனா தடுப்புப் பணியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி வழங்கிவரும் திட்டத்தைக் கொரோனா ஊரடங்குக் காலம் வரை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது

* கொரோனா இரண்டாவது அலை நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைத் திருக்கோயில்களில், 754 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில்கள் மூலமே கொரோனாக்கால ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்யும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் வழக்கமாக செயல்படுத்தும் அன்னதான திட்டத்தை காலத்திற்கேற்ற சீரிய திட்டமாக விரிவுபடுத்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு உணவு பொட்டலங்களைக் கொண்டு சேர்க்க கோரியதின் அடிப்படையில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 12-ம் தேதி முதல் உணவு வருகின்றன. பொட்டலங்கள் வழங்கப்பட்டு

கொரோனா நோய் பாதிப்பு குறையும் வரை சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்குத் தேவைக்கேற்ப உணவு பொட்டலங்கள் உயர்த்தி வழங்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து அதன்படி தினசரி ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், திருக்கோயில் அன்னதானத்திட்டத்தைக் கொரோனா ஊரடங்குக் காலம் வரை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைக் கேட்டறிந்ததோடு நோய்த் தொற்று உள்ளவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமின்றி பிற நோயாளிகளுக்கும் பசிப்பிணி போக்கி 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' எனும் சங்க இலக்கியமான புறனானூற்று வரிகளுக்கேற்ப இதன் தொன்மையையும் காலத்தின் தேவையையும் உணர்ந்து, தொடர்ந்து உணவு வழங்கி உயிர்காக்க கேட்டுக் கொண்டார். மேலும் திருக்கோயில் அலுவலர்களே ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் நேரடியாக உணவுப் பொட்டலங்களைக் கொண்டு சேர்க்கும் பணியைப் பாராட்டியதோடு, திருக்கோயில் பிரசாதம் போல் மதித்து நோய்தீர்க்கும் மருந்தாகக் கருதி இப்பணிகளைத் துறை அலுவலர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சமய திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திருமதி பெ.இரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமதி ந.திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக