சனி, 20 ஜூன், 2020

பெட்ரோ இரசாயன, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயல்பாடுகளை இன்று காணொளி மாநாடு மூலமாக மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா பரிசீலித்தார்.


நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப மத்திய நிறுவன (CIPET) செயல்பாடுகளை காணொளி மாநாடு மூலமாக திரு. கவுடா பரிசீலித்தார்.

பெட்ரோ இரசாயன, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயல்பாடுகளை இன்று காணொளி மாநாடு மூலமாக மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா பரிசீலித்தார். கோவிட்-19 காலத்தில் திறன், தொழில்நுட்பம், உதவி சேவைகள், ஆராய்ச்சி ஆகியவை தொடர்பாக CIPET ஆற்றிய பணிகள் குறித்து மத்திய அமைச்சரிடம் நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப மத்திய நிறுவனம் (Central Institute of Plastics Engineering & Technology – CIPET) தலைமை இயக்குநர் எடுத்துக் கூறினார் 

சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெட்ரோ இரசாயனத் துறையில் சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியுறுவதற்கு ஆதரவளிக்கும் வகையில், CIPET தனது மிகப் பெரிய வாடிக்கையாளர் கட்டமைப்பை உபயோகித்து, விரிவான திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் திரு கவுடா CIPETக்கு அறிவுரை கூறினார். மருத்துவர்களுக்கு வசதியாக உள்ள வகையிலான தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்களை வடிவமைக்கும் படி, தலைமை இயக்குநரை அவர் கேட்டுக்கொண்டார். கோவிட்-19  சூழலிலும், பொதுமுடக்க நடவடிக்கைகளின் போதும் CIPET தனது முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்து அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19  நோய்க்கு எதிராக நாடு தயார் நிலையில் உள்ளதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். 

CIPET மேற்கொண்டுவரும் உயர் அளவிலான ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்து இரசாயனம் மற்றும் பெட்ரோ இரசாயனத்துறைச் செயலர் திரு.ஆர். கே.சதுர்வேதி கூறினார். குறிப்பாக, கோவிட்-19 காலத்தில், பாக்டீரியாக்களுக்கு எதிரான, நுண்ணுயிரிகளுக்கு எதிரான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களைத் தயாரித்தல், செயற்கை சுவாசக்குழாய் ஸ்ப்ளிட்டர்கள், தனிநபர் பாதுகாப்புக் கவசங்களில் CIPET ஏற்படுத்திய, இதர மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக