புதன், 3 ஜூன், 2020

விவசாய ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரச்சாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான மோசடி வலைத்தளங்களுக்கு எதிராக ஆலோசனை


புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பிரதமரின் - விவசாய ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரச்சாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான மோசடி வலைத்தளங்களுக்கு எதிராக ஆலோசனை வெளியிடுகிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) சமீபத்தில் பிரதமரின் - விவசாய ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரச்சாரத் (PM-KUSUM) திட்டத்திற்கான பதிவு இணையதளமாக சில புதிய வலைதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் கவனித்தன. இத்தகைய வலைதளங்கள் பொது மக்களை ஏமாற்றுவதோடு போலிப் பதிவு செய்யும் இணைய தளம் மூலம் கைப்பற்றப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவது தெரிய வந்தது. பொது மக்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாமல் இருக்க, MNRE 18.03.2019 அன்று ஒரு ஆலோசனையை வெளியிட்டது, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எந்தவொரு பதிவுக் கட்டணத்தையும் டெபாசிட் செய்வதைத் தவிர்ப்பதுடன் அத்தகைய வலைதளங்களில் தங்கள் தகவல்களைத் தர வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது. மோசடி வலைத்தளங்களின் இந்த புதிய வழக்குகள் மீண்டும் கவனிக்கப்பட்டுள்ளன.

எனவே அனைத்து பயனாளிகளும் பொது மக்களும் இந்த வலைத்தளங்களில் பணம் செலுத்துவதையும் தகவல்கள் தருவதையும் தவிர்க்குமாறு புதிய மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மோசடி வலைதளம் பற்றிய தகவல் தெரிய வந்தாலோ, கவனித்தாலோ, அதைப் பற்றி புகாரளிக்கலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த ஏஜென்சிகளின் பட்டியல், அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் PM-KUSUM திட்டம் பற்றிய பிற விவரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிடைக்கின்றன: www.mnre.gov.in.  பொது மக்களிடையே ஆர்வமுள்ளவர்கள் MNRE வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1800-180-3333 என்ற உதவித் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக