வெள்ளி, 31 ஜூலை, 2020

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் அலுவலகம் சார்பில் புதுடெல்லியில் முஸ்லிம் பெண்கள் உரிமை தினம்.


அரசின் நோக்கம் ``அரசியல் அதிகாரம் அளிப்பது தானே தவிர, அரசியல் ரீதியாக சுரண்டுவது அல்ல'' என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி இன்று புதுடெல்லியில்கூறினார். இந்த அரசு மேற்கொண்ட பல ``துணிச்சலான, பெரிய சீர்திருத்தங்கள்'' நல்ல பலன்களைத் தருவதாக அமைந்துள்ளன. இது, எங்களின் நேர்மையான மற்றும் செம்மையான முயற்சிகளை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

``முஸ்லிம் பெண்கள் உரிமை தினத்தை'' ஒட்டி நடந்த இணையதளம் வழியிலான நிகழ்ச்சியில்,, மத்திய சட்டத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி ஆகியோருடன் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் கலந்து கொண்டார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. மஞ்சித் சிங் ராய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஜம்மு காஷ்மீரில் PMGSY-II திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு டாக்டர்.ஜித்தேந்திர சிங் ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார்


ஜம்மு காஷ்மீரில் பி.எம்.ஜி.எஸ்.ஒய்- II திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு டாக்டர். ஜித்தேந்திர சிங் ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊழியர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று ஜம்மு  காஷ்மீரில் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் - II ( Pradhan Mantri Gram Sadak Yojana - PMGSY-II) இன் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் அடிக்கல் நாட்டினார். ஜம்மு & காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் - II திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட உள்ள ரூ.175 கோடி செலவிலான 28 சாலைகள் உட்பட பல இந்தச் செயல்திட்டங்களில் அடங்கும்.  சனுங்கா காஸ் முதல் புக்டூரியல் காஸ் வரை, ஃபலட்டா முதல் பிக்கான் கால வரை, அர்னாஸ் முதல் தாக்கரகோட்டே வரை, ராம்நகர் முதல் துடு வரை, பௌனி முதல் குன்ட் வரை அமைக்கப்படும் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைத்திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன.

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, திரு.நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.


பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர திரு.நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.   நிகழ்ச்சிக்கு, பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.  மத்திய அமைச்சர்கள் திரு.ராம்விலாஸ் பாஸ்வான், திரு.ரவிசங்கர் பிரசாத், மத்திய இணையமைச்சர்கள்  திரு.வி.கே.சிங், திரு.அஸ்வனிகுமார் சவுபே மற்றும் திரு.நித்தியானந்த் ராய், துணை முதலமைச்சர் திரு. சுசில்குமார் மோடி, மாநில சாலைக் கட்டுமானத் துறை அமைச்சர் திரு.நந்த் கிஷோர் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி, திரு.ராம் கிரிபால் யாதவ், திரு.பசுபதி குமார் பரஸ் மற்றும் திருமதி.வீனா தேவி, மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.  

வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தேவையான இ-பாஸ் முறையை கைவிட வேண்டும். - E.R.ஈஸ்வரன்


வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தேவையான இ-பாஸ் முறையை கைவிட வேண்டும். - E.R.ஈஸ்வரன்

தமிழக அரசு ஊரடங்கில் எவ்வளவு தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக உண்மைநிலை சொல்லி அரசு கேட்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு செல்பவர்கள் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை பெற முடிவதில்லை.

மனப்பாட கல்வி முறைக்கு (Rote Learning) முடிவு கட்டும் புதிய கல்விக் கொள்கை ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஆய்ந்து, அறிந்து அளித்த தேசிய புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தற்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் முற்போக்கானதாகவும், அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு (Equity and Equality) அளிக்கக் கூடியதாகவும், மனனம் செய்து ஒப்புவிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண்கள் பெறுவது எனும் பழைய பஞ்சாங்க வழிமுறைகளை தவிர்த்து குழந்தைகளின் பன்முக அறிவுத் திறமையை வளர்ப்பதற்கு உரிய வாய்ப்புகளை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் என நம்பலாம். 

இதுவரை ஆசிரியரை மையப்படுத்தி இருந்த கல்வி முறைக்கு மாறாக, குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ள (Child Centric) புதிய கல்வி முறை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பார்வையில் இது மிகவும் வரவேற்க தகுந்த அம்சமாகும். 

உடற்தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் 
பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும். ஏற்கனவே காவலர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெறாதவர்களை புதிய காலியிடங்களில் நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு  மார்ச் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10 மாதங்கள் நடைபெற்ற உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம்  8773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர மேலும் பத்தாயிரத்துக்கும்  மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தன. ஆனாலும், அந்த நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 8773 என்ற அளவில் மட்டுமே இருந்ததால், அந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். தரவரிசையில் இடம்பெற்றிருந்த மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி! - தி.வேல்முருகன்


பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி!

கார்ப்பொரேட் தொண்டூழியத்திற்கான மோடியின் கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறக் கோருகிறது                                   தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இந்தியா என்ற நாடு உருவானதே 1947க்குப் பிறகுதான். அதற்கு முன் இங்கு 4500க்கும் மேற்பட்ட இனக்குழு பகுதிகள் சிதறிக் கிடந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தி, ரயில்வே, தபால் தந்தித் துறை மற்றும் இன்ன பிற நவீன வசதிகளால் இணைத்து பிரிட்டிஷ் இந்தியா என ஆக்கினர் ஆங்கில ஆட்சியாளர். அதற்கு முன், மேல்சாதியருக்கு மட்டுமேயான குருகுலக் கல்விமுறைதான் இருந்தது. பிற சாதியரான சூத்திரர், பஞ்சமர் கல்வி கற்கவே உரிமையில்லை. இது புராண கட்டுக்கதையில் வரும் ஏகலைவன், சம்புகன் ஆகியோரின் தொடர்ச்சியே! 

மருத்துவர் உயிரிழப்பு தொடர்பில் வென்டிலேட்டர் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!


ராஜபாளையம் மக்கள் மருத்துவர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! மருத்துவர் உயிரிழப்பு தொடர்பில் வென்டிலேட்டர் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மக்கள் மருத்துவர் சாந்திலால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர்  சாந்திலால் அவர்களின் இழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. ராஜபாளையம் மக்களுக்கு நல்ல பரிட்சயமான நல்ல சமூக சிந்தனையுடன் சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்திலால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

EIA2020 ( Environmental Impact Assessment Act 2020) எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது! - S.A.N.வசீகரன்


EIA2020 ( Environmental Impact Assessment Act 2020) எனப்படும் சுற்றுச்சூழல்  தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது! 

மக்கள் உயிர் வாழ கார்ப்பரேட் கொள்ளை, கொலைகளை தடுத்திட  EIA2020 சட்டத்தை எதிர்த்து மக்கள் அனைத்து தளங்களிலும் வலுவாக குரலெழுப்ப வேண்டும்! ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் மக்களுக்கு வேண்டுகோள்!

காங்கிரஸ் கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும். - செ.ஜோதிமணி


காங்கிரஸ் கட்சிக்குள் அதீத ஜனநாயகமும்,கருத்து சுதந்திரமும் உண்டு. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றுக் கருத்துக்களை கவனமாக கேட்டு,மதிக்கக்கூடியது. அதனால் தான் காந்தி குடும்பத்தின் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பி ஏற்கிறார்கள்.

 ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்கள்? என்கிற கேள்வியை அடிக்கடி நான் எதிர்கொள்ள நேர்கிறது. இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி மட்டுமே அதன் இயல்பான பன்முகத்தன்மை ,அனைத்து மக்களின் மொழி,வரலாறு, கலாச்சராம்,பண்பாட்டை மதித்து , புரிந்துகொண்டு , வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்த முடியும். இரண்டாவதாக அதன் உள்கட்சி ஜனநாயகம். 

சென்னையிலிருந்து சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் உழவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். - DR.S.ராமதாஸ்


சேலம் 8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் துறையின் 
புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது! - DR.S.ராமதாஸ்

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத்  திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி 8 வழிச்சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கையையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.  அதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

வியாழன், 30 ஜூலை, 2020

நடிகர் கார்த்தியின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான கருத்தை வரவேற்கின்றோம். - E.R.ஈஸ்வரன்


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020) அறிவிக்கை மக்களின் ஜனநாயக உரிமை பறிப்பதாகவும், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும் அனைத்து தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி அவர்களும் புதிய அறிவிக்கை பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டிருப்பதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது.

கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அதிமுக அரசு அனுமதிக்கக்கூடாது" - மு.க.ஸ்டாலின்.


"சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அமைதி காத்து; மாநில அரசின் உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து; கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அதிமுக அரசு அனுமதிக்கக்கூடாது" - மு.க.ஸ்டாலின்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம் செய்வதில் “வெளிப்படைத்தன்மைக்கு” மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு - துணை வேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

"பெரியார் பல்கலைக்கழகத்தை சீர்படுத்தி - உறுப்புக்கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிடுக!" - க.பொன்முடி MLA


"பெரியார் பல்கலைக்கழகத்தை சீர்படுத்தி - உறுப்புக்கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிடுக!" -  க.பொன்முடி MLA 

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியில் உருவாக்கப்பட்டது, சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம். உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த எனக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் தரத்தை மேம்படுத்தும் பணியையும் அளித்தார், தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். 

திமுக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1 “கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம்!”

மருத்துவ கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதமான இட ஒதுக்கீடு பெற அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்புவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் - கே.பாலகிருஷ்ணன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் இணைய வழியில் இன்று (29.7.2020) மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

மருத்துவ கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில்
69 சதமான இட ஒதுக்கீடு பெற
அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

புதிய தமிழகம் கட்சி தொண்டர்களின் அழுத்தமான போராட்டத்தின் காரணமாக இன்று மறைக்கப்பட்ட அநீதி வெளிக்கொணரப்பட்டுள்ளது. - டாக்டர் K. கிருஷ்ணசாமி


தென்காசி விவாசாயி அணைக்கரைமுத்து கொலை 
மறுஉடற்கூறு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 
புதிய தமிழகம் கட்சியின் எட்டு நாள் போராட்டத்திற்கு கிடைத்த 
மகத்தான வெற்றி!  - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து கடையம் சரகம் வனக்காவலர்களால், கடந்த 22-ஆம் தேதி, நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்த நான்கு மணி நேரத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கொண்டு வரப்பட்டார். குடும்பத்தாருடைய எதிர்ப்புகளையும் மீறி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விதிமுறைகளை மாறாக, இரவு 6 மணிக்கு மேல்  உடற்கூறு பரிசோதனை செய்தும், பிற தடயங்களையும் அழித்தும், சில கைக்கூலிகளைப் பயன்படுத்தி, முத்துவின் குடும்பத்தாரை அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும் எப்படியாவது அவரை அடக்கம் செய்து, கொலைக்குக் காரணமானவர்களைப் பாதுகாக்க, கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 

மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டுகின்றேன்.- கே.எஸ்.அழகிரி


ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

277.3 கி.மீ தொலைவிலான 8 வழிச்சாலையை இரண்டே கால் மணி நேரத்தில் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்துக்காக ஏராளமான மரங்களை அழிப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் நிலம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் இருந்தது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

“ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட வேண்டும்! - கே. பாலகிருஷ்ணன்


“ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட வேண்டும்! - கே. பாலகிருஷ்ணன்

மத்திய பாஜக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை கடைபிடித்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. பீமா கோரேகான் செயல்பாட்டாளர்கள் கைது, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் போன்றவற்றை அண்மைக்கால உதாரணங்களாக கூறலாம். 

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - தி.வேல்முருகன்


மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த உத்தரவை குறித்த காலத்திற்குள் விரைந்து நிறைவேற்றுமாறு கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு சான்றிதழ்க்கான காலத்தை நீட்டித்து, படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


“ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு சான்றிதழ்க்கான காலத்தை நீட்டித்து, படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்” 
த.மா.கா. கோரிக்கை.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80,000 பேர்கள், கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வேலை கிடைக்கும். என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் ஆகும்.- தங்கம் தென்னரசு MLA


"உயர்கல்வி படிக்க முன் அனுமதிக்காக விண்ணப்பித்த சுமார் 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை;
கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது" -  திரு. தங்கம் தென்னரசு MLA 

முன் அனுமதியின்றி  உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் OBCக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ் கடிதம்


மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு DR.S.ராமதாஸ் கடிதம்

மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர், பல் மருத்துவக் குழுவின் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து இட ஒதுக்கீடு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு,

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகள் பகடைக் காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும். - கமல்ஹாசன்


உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சார சட்ட திருத்த மசோதா -2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு ?

விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள் தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.

திங்கள், 27 ஜூலை, 2020

"பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாரதிய ஜனதா கட்சி" ஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் - DR. L.முருகன்


பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது 
பாரதிய ஜனதா கட்சி
ஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள்
உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தோடு 1953ல், காக்கா கலேஷ்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆணையம் 2399 சாதியினரை பிற்படுத்தப்பட்டோர் எனவும், 837 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும், 1995ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஜவஹர்லால் நேரு அரசு, 6 ஆண்டுகள் இந்த அறிகையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, 1961ல் தள்ளுபடி செய்தது அதன் பின்னர் 17 ஆண்டு சேலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஜன சங்கத்தின் ஆதரவோடு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அப்போது மண்டல் தலைமையில், 1979ல், பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையத்தை நியமித்தார் அந்த ஆணையம், 31-12-1980 ல், 3543 பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்தது முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், இந்த மண்டல் அறிக்கையைத் தொட்டுகூடப் பார்க்கவில்லை பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் 88 எம்பிக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்த வி பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார் அன்று பாஜக ஆதரவு அளித்திருக்காவிட்டால், இத்தகைய சலுகை பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை - 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன்


மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை - 2020ஐ
உடனடியாக திரும்ப பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசு கோவிட் 19ஐ கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை - 2020”  ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் – திரு.எம்.வெங்கையா நாயுடு


தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் 
– குடியரசுத் துணைத்தலைவர்

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு ஊடகங்களில் அதிலும் இன்றைய நாட்களில் புதிய ஊடகச் சூழலில் பரவி வரும் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.

”டைம்ஸ் ஸ்காலர்ஸ் ஈவண்ட்” என்ற நிகழ்ச்சியில் இன்று காணொளிக் காட்சி மூலம் 200 இளம் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய போது குடியரசுத் துணைத்தலைவர் உண்மையைப் பகுப்பாய்வு செய்து அதனை தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளவும் பொய்களைப் புறந்தள்ளவும் தேவையான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

ஓபிசி-இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்! - தொல்.திருமாவளவன்


ஓபிசி-இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (AIQ ) பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டு முதன்முதலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுப்பினோம். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாக அமைந்துள்ளது. சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம்.

BC - MBC சமுதாய மக்களின் குரல் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். - மு.க.ஸ்டாலின்


"சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ளது - இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு" -  மு.க.ஸ்டாலின் 

சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்…. பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குரல், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்….

ஆம்! இன்றைய தினம், “மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” என்று, சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். - கே.எஸ்.அழகிரி


ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம், தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியதோடு, இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறுதியிட்டுக் கூறியுள்ளது.

 மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லாத போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது ஏன் ? என்ற கேள்வி எழுப்பி, இதுகுறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு சமீபத்தில் இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட இருந்த பேராபத்தை  தடுத்து சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது.

OBC இட ஒதுக்கீடு: 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்: மேல்முறையீடு செய்யக் கூடாது! - DR.S.ராமதாஸ்


ஓபிசி இட ஒதுக்கீடு: 3 மாதங்களில் மத்திய அரசு 
செயல்படுத்த வேண்டும்: மேல்முறையீடு செய்யக் கூடாது! - DR.S.ராமதாஸ்

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை; இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூகநீதிக்கான பா.ம.க.வின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழை, எளிய, கிராம மக்களுக்கு விலையில்லா முக கவசங்களை வழங்கிய தமிழக அரசிற்கு பாராட்டுக்கள். - ஜி.கே.வாசன்


"கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழை, எளிய, கிராம மக்களுக்கு விலையில்லா முக கவசங்களை வழங்கிய தமிழக அரசிற்கு பாராட்டுக்கள்" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சர் அவர்கள், மக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 2 விலையில்லா முக கவசங்களை “அரசு நியாய விலை கடையின்” மூலம் வழங்கும் திட்டத்தை துவங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஏழை, எளிய மற்றும் கிராமபுற மக்களுக்கு அவசியமான, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிப்பு - மு.க.ஸ்டாலின்.


"தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?
விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிப்பு - காவல்துறை மறைக்க முயற்சி;
நீதிக்கான சட்டப்போராட்டத்துக்கு திமுக துணைநிற்கும்"
-  மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா என்ற சந்தேகமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் தந்தை - மகன் இருவரது உயிரும் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனத்துறையினரால் மற்றொரு உயிர், கொடூரமாகப் பறிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் செய்தி அனைவரையும் தாக்கியுள்ளது.

கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு மறுக்கப்படுவது, கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துவது குறித்து குடியரசு துணைத்தலைவர் வேதனை.


கோவிட்-19 நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் அளிக்கப்படும் பிரியாவிடையை மறுப்பது ஆகிய சம்பவங்கள் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் முற்றிலும் தேவையற்றவை என்று கூறியுள்ள அவர்,  இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று பழனிசாமி அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.- டிடிவி.தினகரன்


இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA Drafl 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! 
இந்த வரைவுக்கு எதிராக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ! - டிடிவி.தினகரன்

இயற்கை வளங்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (Environmental Impact Assessment - EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தொடங்குவதற்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை வழங்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முன் மொழிந்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பேராபத்துக்களை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! - தி.வேல்முருகன்


குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது! 
இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! 
- தி.வேல்முருகன்

மக்களின் உற்பத்தி மற்றும் வரி வருவாயில்தான் அரசு என்கிறபோது, அந்த வருவாயை ஒருசில கார்ப்பொரேட்களுக்குக் கைமாற்றுவதா அரசின் வேலை? 
இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

அரசு என்பது என்ன? பெரும்பான்மை மக்களின் அமைப்பு. பெரும்பான்மை மக்கள் யார்? உழைக்கும், ஏழை எளிய, சாதாரண, அடித்தட்டு மக்கள். இந்தப் பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையோர் எங்கு வாழ்கிறார்கள்? கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ஊர்களில். அந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. இதன் உள்ளர்த்தம் அந்த ஸ்டேஷன்களையெல்லாம் மூடிவிடுவதே. 

பாமக அளித்துள்ள விளக்கங்கள் நீதிமன்றத்தில் பாஜக அரசின் வாக்குமூலத்திற்கு வக்காலத்து வாங்குவதைப் போல உள்ளது வேதனையளிக்கிறது. - கே.பாலகிருஷ்ணன்


பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக்கச்சேரியால்
தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது!
கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்!!

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன்?, இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் விரிவான அறிக்கையை அளித்திருக்கிறார். “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கிற்கு விலை சொல்வது போலத் தான்” அவருடைய பதில் அறிக்கை அமைந்துள்ளது. பாமக அளித்துள்ள விளக்கங்கள் நீதிமன்றத்தில் பாஜக அரசின் வாக்குமூலத்திற்கு வக்காலத்து வாங்குவதைப் போல உள்ளது வேதனையளிக்கிறது. 

கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நன்கொடை


வெற்றி தினத்தை ஒட்டி ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை

கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதற்கான காசோலையை இன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.   கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் திறம்பட பணியாற்றத் தேவையான சாதனங்களை வாங்க இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்ததன்  21-வது ஆண்டு தினம் இன்று வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

“கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் பாஜக அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020'-ஐ திரும்பப்பெற வேண்டும்” - மு.க.ஸ்டாலின்


“கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் பாஜக அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020'-ஐ  திரும்பப்பெற வேண்டும்”
 - மு.க.ஸ்டாலின் 

நாடாளுமன்றம் கூடாத “சுகாதார பேரிடர்” கால நெருக்கடியைப் பயன்படுத்தி - பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு,  கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020”-யை வெளியிட்டிருப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே இருக்கும் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.

சர்வாதிகார எண்ணத்தோடு நடத்தப்படும் இந்நிகழ்வை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். - டாக்டர் K. கிருஷ்ணசாமி


வனக்காவலர்களை பாதுகாக்க, 
தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்?

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி கடையம் வனச்சரக காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் பிணமாக கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடலில் 18 காயங்கள் இருந்ததாக அவருடைய மூத்த மகன் நடராஜன் தெரிவித்துள்ளார். 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என குடும்பத்தினரால் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட பின்பும் அதையும் மீறி பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக எப்படியாவது அணைக்கரைமுத்துவின் குடும்பத்தாரை நிர்பந்தம் செய்து அவரது சடலத்தை ஒப்படைத்து, எரித்துவிட்டு அனைத்து தடயங்களையும் அழித்து விட துடிக்கிறார்களே தவிர, அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

சென்னையில் 63% கொரோனா மரணங்களை மறைத்துள்ள திரு. பழனிசாமி அரசு - மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கிறதோ? - மு.க.ஸ்டாலின்


"சென்னையில் 63% கொரோனா மரணங்களை மறைத்துள்ள திரு. பழனிசாமி அரசு - மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கிறதோ?" -  மு.க.ஸ்டாலின்.

தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாகத் தவறுகளாலும் கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது பெரிய அளவில் பரவியுள்ள நிலையில் இலட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. அடுத்தவர் மீது பழி போட்டுத் தப்பிப்பது, அக்கறையற்ற  அணுகுமுறை, தவறான செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, கணக்கில் மறைக்கப்பட்ட 444 கொரோனா மரணங்கள் குறித்து வெளியான உண்மைகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் பொய்யான அறிக்கைகளையும் போலியான கணக்குகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஜூலை மாதம் 26ஆம் நாள் ‘கார்கில் விஜய் திவஸ்’, அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும். - பிரதமர் நரேந்திர மோடி உரை


எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  இன்று ஜூலை மாதம் 26ஆம் நாள், இன்றைய தினம் மிகவும் விசேஷம் நிறைந்தது.  இன்று  ‘கார்கில் விஜய் திவஸ்’,  அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும்.  21 ஆண்டுகள் முன்பாக,  இதே நாளன்று தான் கார்கில் யுத்தத்தில் நமது இராணுவமானது இந்தியாவின் வெற்றிக் கொடியை நாட்டியது.  நண்பர்களே, கார்கில் போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை பாரதம் என்றுமே மறவாது.  பெரிய பெரிய கனவுகளை மனதில் கொண்டு பாரதநாட்டு பூமியை அபகரிக்கவும், தங்கள் நாட்டில் நிலவி வந்த உள்நாட்டுக் பூசல்களிலிருந்து அவர்களது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பாகிஸ்தான் இந்த வெற்று சாகசத்தைக் கட்டவிழ்த்து விட்டது.  பாரதமோ அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது; ஆனால், 

பயரூ அகாரண் சப் காஹூ சோ.  ஜோ கர் ஹித் அன்ஹித்  தாஹூ சோ.

 “बयरू अकारण सब काहू सों | जो कर हित अनहित ताहू सों || 

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். DR. அன்புமணி ராமதாஸ்


கிரீமிலேயரை தீர்மானிப்பதற்கான மத்திய 
அரசின் புதிய திட்டமும் ஏமாற்றமளிக்கிறது! - DR. அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட  ஒதுக்கீட்டை  பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இடஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது.- மு.க.ஸ்டாலின்


"இடஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது;
கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி - க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும்" 
-  மு.க.ஸ்டாலின் 

நீண்ட நெடுங்காலமாக இடையறாது போராடி, பிரதமராக 'சமூக நீதிக் காவலர்' வி.பி. சிங் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீட்டில்  50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து - மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை 'விதவிதமாக' பாழ்படுத்திவரும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு 'நிகர சம்பளத்தை' கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள்; இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.

சனி, 25 ஜூலை, 2020

டிஜிட்டல் மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தெருவோர வியாபாரிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். - திரு.நரேந்திர மோடி


மத்தியவீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின், 
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் செயல்பாடு குறித்து 
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பரிசீலித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2.6 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன என்றும்,64 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும்,5,500க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு கடன் தொகை விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இணையதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் இந்தத் திட்டம் விரைவாகவும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் முதலிலிருந்து, இறுதிவரை டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். 

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி


தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற அடிப்படையில் அனைத்து கட்சிகளும்  எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தவேண்டுமென்பதில் மத்திய அரசு மிகுந்த முனைப்புக்  காட்டி வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால்  10 மற்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. - E.R.ஈஸ்வரன்


வருகின்ற 27-ஆம் தேதி நடைபெறுகின்ற விவசாயிகளின் கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. - E.R.ஈஸ்வரன்

கொரோனா நோய் தொற்றினால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அவசர சட்டங்களை பிறப்பித்து நடைமுறைப்படுத்த துடிக்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கின்ற சூழ்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 

கொரோனா பேரிடர் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உள்நோக்கத்துடன் தடுக்கும் அதிமுக அரசு - மு.க.ஸ்டாலின்


"கொரோனா பேரிடர் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உள்நோக்கத்துடன் தடுக்கும் அதிமுக அரசு;
நிதிப்பயன்பாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தாமதமின்றி வெளியிட வேண்டும்” -  மு.க.ஸ்டாலின் 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்குரிய வழி காட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயில் – சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி,  கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 1 கோடி ரூபாயை அரசு  நேரடியாக எடுத்துக் கொள்ளும் என்று தன்னிச்சையாக முதலமைச்சர் அறிவித்தார். அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட 234 கோடி ரூபாய் மாநில அளவில் செலவிடப்படும் என்றார். இதுதவிர - கொரோனா பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு - அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் - மீதியுள்ள 1.75 கோடி ரூபாய் நிதியை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நெருக்கடியை அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் ஏற்படுத்தியிருக்கிறது.

"கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி - பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன்


"கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி - பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன் 

தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களாகும். அதன் முக்கியத்துவங்களை அறிந்திருந்ததால்தான் மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், ‘உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த’ கழகத் தலைவர் தளபதி அவர்களும் கழக ஆட்சியின்போது தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் அதிகார வரம்புகள் அனைத்தையும் விவசாயத்திற்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையிலும் அமைத்துத் தந்திருந்தார்கள்.

கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலை. வனக்காவலர்களை 302 – பிரிவின் படி உடனடியாக கைது செய்ய வேண்டும்..!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலை.
வனக்காவலர்களை 302 – பிரிவின் படி உடனடியாக கைது செய்ய வேண்டும்..!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது - 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், மேல் சட்டை கூட அணிய விடாமல், அவர்களுடைய தோட்டத்தில் வேலி அமைத்தது சம்பந்தமாக கடையம் அருகே சிவசைலம்