இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 34 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 45,60,088 முகாம்களில் 34,46,11,291 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 43,99,298 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் புதிய கட்டம், கடந்த ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் தடுப்பூசியை விரைவாக செலுத்தி, பெருவாரியான மக்களுக்கு அதனை கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 6-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
- நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்கு பிறகு 5 லட்சத்திற்கும் குறைவாக, 4,95,533 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும்.
- சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 14,104 சரிந்துள்ளது.
- தொடர்ந்து 51-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 57,477 பேர் குணமடைந்தனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 13,366 பேர் குணமடைந்தனர்.
- இதுவரை மொத்தம் 2,96,05,779 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 18,76,036 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,64,16,463 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.50 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.35 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 26 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக