சனி, 17 ஜூலை, 2021

தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறைமுகத்திற்கு (INS TABAR) ஐஎன்ஸ் தாபர் கப்பல் சென்றடைந்தது.


 தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறைமுகத்திற்கு 2021 ஜூலை 12 அன்று ஐஎன்ஸ் தாபர் கப்பல் சென்றடைந்தது. பிரான்சு நாட்டின் கடற்படை ஐஎன்ஸ் தாபருக்கு வரவேற்பளித்தது.

கப்பலை பார்வையிட்ட பிரான்சு மற்றும் மொனாகோவுக்கான இந்திய தூதர் திரு ஜாவெத் அஷ்ரப், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு ஆற்றி வரும் பங்குக்காகவும், நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் கப்பல் குழுவினரை பாராட்டினார்.

அட்லாண்டிக் கடல்சார் பிராந்தியத்தின் துணை அட்மிரல் ஆலிவியர் லெபாஸை அவரது தலைமையகத்தில், இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் கப்பலின் தலைமை அதிகாரி சந்தித்தார்.


பிரெஸ்ட் துறைமுகத்தில் இருந்து கிளம்பும் போது, பிரான்சு போர்கப்பல் எஃப் என் எஸ் அக்விடைனுடன் கூட்டு பயிற்சியில் ஐஎன்எஸ் தாபர் ஈடுபடும்.

மேலும் படிக்க : பெருங்கோயிலை கட்ட பல திறமையும், தியாகமும் தேவை அதுபோலவே தமிழக பாஜக என்ற கோயில் பல காரிய கர்த்தாக்கள் தங்கள் இன்னுயிரையும் நீர்த்த வேள்வியில் உருவானது.- K.அண்ணாமலை

மேலும் படிக்க : பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை கடைகோடி மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.- திரு. எல். முருகன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக