முன்னணி ஆன்லைன் பயண முகவர்கள் (OTA கள்) பிரதிநிதிகள்
 மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் (பொறுப்பு) 
திரு. பிரஹலாத் சிங் படேலை புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண முகவர்கள் (OTA’s) குழு மத்திய வெளியுறவு அமைச்சர் (பொறுப்பு) சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேலை இன்று புதுதில்லியில் சந்தித்தது. இந்த சந்திப்பு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றைத் திறப்பதற்கும், ஊரடங்கிற்குப் பின், விடுதி மற்றும் பயணம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த நெறிமுறைகளை வழங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
உள்நாட்டு சுற்றுலாவில் தொடங்கி பயணத்துறையை மறுதொடக்கம் செய்வதற்கான அமைச்கத்தின் திட்டத்தை மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார், மேலும் பயண முகவர்கள் முன்வைத்த திட்டங்கள் மற்றும் யோசனைகளையும் கேட்டறிந்தார்.
மேலும் பல்வேறு சுற்றுலா சேவைகளுக்கு சிறந்த அணுகலை வழங்குவதற்காக, இன்கிரடபில் இந்தியா (Incredible India) டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை சுற்றுலா அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து வழங்குவது தொடர்பான விஷயங்களை பிரதிநிதிகள் விவாதித்தனர். பிற துறைகளின் ஒத்துழைப்புடன் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான மின்-சந்தை இடத்தை உருவாக்குதல் மற்றும் OTA துறைக்கு மூலாதாரத்தில் சேகரிக்கப்பட்ட வரி (TCS) மற்றும் வரி விலக்கு (TDS) ஆகியவற்றில் சீர்திருத்தம் ஆகியவையும் அடங்கும்.































