வெள்ளி, 19 ஜூன், 2020

இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரிப்பு


இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட 
கொவிட் -19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் 
குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில், 10,386 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,04,710 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,63,248 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

தினமும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உரிய காலத்தில் கொவிட்-19 தொற்றை நிர்வகிக்க இந்தியா வகுத்த உத்தியின் விளைவாக குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது. அரசு பரிசோதனைச் சாலைகள் 703 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 257 ஆகவும் (மொத்தம் 960) அதிகரித்துள்ளன.

நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 541 (அரசு : 349 + தனியார் : 192), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 345 (அரசு : 328 + தனியார் : 17),  CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 74 (அரசு  : 26 + தனியார் : 48) ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 64,26,627 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மருத்துவமனைகளில் கொவிட் மற்றும் கொவிட் அல்லாத மருத்துவப்பிரிவுகளில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆலோசனை நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அமைச்சகத்தின் இணையதளத்தில், ஜூன் 18-ம் தேதியிட்ட அறிவிக்கையில் (1 முதல் 4-ம் பக்கம் வரை) காணலாம்.

கொவிட்-19 தொடர்பான  முறையான நடத்தைக்காக, படங்களுடன் கூடிய தகவல் கையேடு ஒன்றை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை  https://www.mohfw.gov.in/pdf/Illustrativeguidelineupdate.pdf  என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக