சனி, 20 ஜூன், 2020

கோவிட்-19 நோய்தொற்றைக் கண்டறிவதற்கான விலை மலிவான சோதனைக் கருவிகளை ஐஐடி குவஹாத்தி உருவாக்கியுள்ளது.


நூதன கொரோனா வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு துல்லியமான சோதனை முக்கியமானதாகும். இது தொடர்பான முயற்சிகளை குவஹாத்தி இந்திய தொழிநுட்பக்கழகம் முன்னெடுத்துச் சென்று, ஆர்.ஆர் விலங்கு சுகாதார பராமரிப்பு நிறுவனம், மற்றும் குவஹாத்தி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை (ஜி.எம்.சி.எச்) ஆகியவற்றுடன் இணைந்து நோய்த் தொற்றைக் கண்டறியும் மலிவு விலையிலான கருவிகளை உருவாக்கியுள்ளது. இவை வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியம் (விடிஎம்) கருவிகள், ஆர்டி-பிசிஆர் கருவிகள் மற்றும் ஆர்என்ஏ தனிமைப்படுத்தும் கருவிகளாகும். வி.டி.எம் கருவிகள் என்பது நோய்த்தொற்றை முதலில் கண்டுபிடித்துத் தடுக்கும் சாதனமாகும். இதனைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாய் வழியாக மென்மையான துணியால் மாதிரிகளை ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து சேகரித்து,  பாதுகாப்பாக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று திசுக்கள், கிருமிகள் பராமரிப்பு மற்றும் சோதனைக்காக பயன்படுத்தப்படும்.

இந்தக் காலகட்டத்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மாதிரிகள், சோதனை நடைமுறை முடிவடையும் வரை அப்படியே இருக்கவேண்டும். இந்தச் சோதனைக் கருவிகள் ஒரு விரிவான தீர்வை வழங்கும் வகையில், சார்ஸ்-கோவி-2 மாதிரிகள் சேகரிப்புக்கும், அவற்றை ஆய்வகத்திற்கு கொண்டு செல்வதற்கான போகுவரத்துக்கும் ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக