செவ்வாய், 9 ஜூன், 2020

“பரதநாட்டியம், கர்நாடக இசை, வாய்ப்பாட்டு கற்றுதரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.” - ஜி.கே.வாசன்



“பரதநாட்டியம், கர்நாடக இசை, வாய்ப்பாட்டு கற்றுதரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.”
 - ஜி.கே.வாசன்

இயல், இசை, நாடகம் என்பது நம்முடைய, பாரம்பரியம், கலாச்சாரம், அதனை பேணிக்காப்பதும், வளர்ப்பதும் நமது கடமை, கொராணா தாக்கத்தால் பல்துறையும் பாதிக்கப்பட்டு, அனைவரும் பொருளாதார இழப்பால் தவித்துவரும் சூழ்நிலை நாடெங்கும் நிலவுகிறது,

தமிழகம் முழுவதும் பரதநாட்டிய வகுப்புகளையும், கர்நாடக சங்கீதம், வாய்பாட்டு, பல்வேறு இசைக் கருவிகளை கற்றுதரும் ஆசிரியர்கள் வாடகை இடத்தில் தான் வகுப்புகளை நடத்துகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கொராணா நோயால் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு, கருணையோடு மூன்று மாதங்களுக்கு கட்டட உரிமையாளர்கள் வாடகையை கேட்க கூடாது அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் பலர் வாடகையை கட்டாயப்படுத்தி கேட்பதும், தரவில்லை இல்லையென்றால் இடத்தை காலிசெய்யும்மாறும் நிர்பந்திப்பதும் மனிதாபிமானமற்றச் செயலாகும்.

ஊடரங்கு உத்தரவால் வருமானமின்றி தவிக்கும், பரதநாட்டிய கலைஞர்கள், இசை பயிற்சி, மற்றும் இசைகருவிகள் பயிற்சி ஆசிரியர்கள், கர்நாடக இசை, வாய்பாட்டு ஆசிரியர்கள் வகுப்பை தொடங்கியவுடன் வாடகை பாக்கியை சிறிது, சிறிதாக செலுத்தி விடுவார்கள், இதற்கு கட்டட உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

அதோடு ஊடரங்கு உத்திரவால் வருமானம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக