நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 37.43 கோடிக்கும் அதிகமான (37,43,25,560) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும் 48,65,110 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 35,75,98,947 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.67 கோடி (1,67,26,613) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
- நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
- நாளொன்றின் புதிய பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,733 ஆகக் குறைந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,59,920 ஆகக் குறைந்துள்ளது; மொத்த தொற்றாளர்களில், இவர்களின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு.
- நம் நாட்டில் இதுவரை 2,97,99,534 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் 47,240 பேர் குணமடைந்துள்ளார்கள்
- தொடர்ந்து 55-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.39 சதவீதமாக உள்ளது.
- தினசரி தொற்று உறுதி வீதம், தொடர்ந்து 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.29 சதவீதமாக பதிவாகி உள்ளது.
- இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 42.33 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக