வியாழன், 14 மே, 2020

புதுச்சேரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் உஜ்வலா திட்டத்தின்கீழ் 3,600 எரிவாயு சிலிண்டர்களையும் விநியோகித்துள்ளது.


புதுச்சேரி மாவட்டத்தில் ஊரடங்கு கால கட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் நிறுவனம், பொது ஒதுக்கீட்டில் 90,109 எரிவாயு சிலிண்டர்களையும் பிரதம மந்திரியின் உஜ்வலா திட்டத்தின்கீழ் 3,600 எரிவாயு சிலிண்டர்களையும் விநியோகித்துள்ளது. அதாவது மொத்தமாக 93709 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. ஐ.ஓ.சி-யின் இண்டேன் நிறுவனம்தான் இந்தியாவின் எரிவாயு சிலிண்டர் தேவையில் சுமார் 50 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது.
ஊரடங்கு என்றாலும் வீட்டில் அடுப்பு எரிந்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும்.  திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் மனதில் பலவிதமான அச்சங்கள் ஏற்பட்டன.  அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்க முனைந்தனர்.  கேஸ் தீர்ந்து விட்டால் என்னாவது என்று உடனடியாக பதிவு செய்தனர்.  ஆரம்ப கட்டத்தில் மக்களிடையே பதற்றமான சூழல்தான் நிலவியது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளது என்று எடுத்துச் கூறி நிலைமையை சீர்செய்தனர்.
ஊரடங்கின்போது பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு பலவிதங்களில் உதவிகளை அளித்து வருகின்றது.  அதில் முக்கியமானது இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்ற அறிவிப்பே ஆகும்.  பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதம் ஒரு இலவச சிலிண்டர் என மூன்று மாதங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
ஊரகப் பகுதிகளில் அடுப்பெரிக்க பெண்கள் விறகு உள்ளிட்ட எரிபொருட்களைத் தேடிச் சென்று சேகரித்து வருவதில் பல மணி நேரம் செலவழிக்கின்றனர். விறகு, கரி போன்றவற்றால் அடுப்பெரித்து சமைத்து முடிக்கவும் நேரம் செலவாகிறது.  இந்த அடுப்பில் இருந்து வரும் புகையானது சுவாச மண்டலப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.  ”ஒரு மணி நேரம் அசுத்தமான அடுப்புப் புகையை உள்ளிழுப்பது 400 சிகரெட்டுகளை பிடிப்பதற்குச் சமம்” என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவத்தின் ஒரு அறிக்கை. பெண்களும் குழந்தைகளும் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில்தான் கிராம வீடுகளில் சமையல் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 

இந்தியாவில் ஏழைக் குடும்பங்களில் நிலவும் இந்த அடுப்பு பிரச்சனையை தீர்ப்பதற்காகத்தான் மத்திய அரசு 1.5.2016ல் பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் என்ற இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  பொது ஒதுக்கீட்டில் எரிவாயு இணைப்புப் பெற வைப்புத் தொகை உட்பட கட்டணம் செலுத்த வேண்டும்.  அடுப்பு வாங்க வேண்டும், சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.  இதெல்லாம் நம்மால் முடியுமா என்ற கேள்விக்குறியுடன்தான் ஏழைக் குடும்பங்கள் விறகு, சுள்ளி, வறட்டியோடு நின்று விட்டன. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக எரிவாயு இணைப்பு தருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.  குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவியின் பெயரில்தான் இணைப்புத் தரப்படுகின்றது. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு தரப்பட்டு உள்ளது.
ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பில் உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்களுக்கு ஏப்ரல், மே, ஜுன் என மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் என 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கேற்ப புதுச்சேரி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் நிறுவனம் 3600 எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் மாதத்தில் உஜ்வலா பயனாளிகளுக்கு விநியோகித்து உள்ளது. இண்டேன் மேலாளரும் புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான திரு.வில்லியம் கேரி ”ஏப்ரல் மாதத்துக்கான சிலிண்டர் தொகை மாதத் தொடக்கத்திலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது.  ஏப்ரலில் சிலிண்டர் வாங்கிய அனைவருக்கும் மே மாத சிலிண்டருக்கான தொகையும் வரவு வைக்கப்பட்டு விட்டது.  எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை இல்லை.  போதுமான அளவு இருப்பில் உள்ளது.  உஜ்வாலா பயனாளிகள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துதான் சிலிண்டருக்குச் செலுத்த வேண்டும்.  உஜ்வாலா பயனாளிகள் ஊரடங்கு நிவாரணமாக 14.5 கிலோ சிலிண்டர்கள் மூன்று அல்லது 5 கிலோ சிலிண்டர்கள் ஐந்தை இலவசமாகப் பெறலாம் என திரு.வில்லியம் கேரி மேலும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள இந்திரா இண்டேன் கேஸ் உரிமையாளர் திரு.எம்.பரசுராமன் கூறுவதாவது: `ஊரடங்கு நிலவுகின்ற காலகட்டத்தில் பிரதமர் ஏழை பயனாளிகளுக்காக அறிவித்துள்ள இலவச கேஸ் சிலிண்டர்களை விநியோகிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக