சனி, 27 பிப்ரவரி, 2021

மிகச்சிறந்த பொம்மைகளை உருவாக்குவதற்குத் தேவையான பாரம்பரியம், தொழில்நுட்பம், கருத்துகள் மற்றும் திறன், இந்தியாவிடம் உள்ளது.-நரேந்திர மோடி

இந்திய பொம்மை கண்காட்சி 2021 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி மாநாடு மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி; மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி ஆகியோர் கலந்து கொண்டனர். பொம்மை கண்காட்சி 2021 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறைகளை அமைக்க வேண்டும்: எம்.வெங்கையா நாயுடு


 துணைத் தலைவர் ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு, அதிகப்படியான தாமதங்கள், செலவு மற்றும் சட்ட நடைமுறைகள் கிடைக்காதது ஆகியவை சாமானியர்களுக்கு திறம்பட நீதியை வழங்குவதில் தடையாக இருப்பதாகக் கூறினார். காந்திஜியின் மேற்கோளைக் குறிப்பிடுகையில், திரு. நாயுடு, "நீதி தேடும் ஏழ்மையான மனிதர்" சட்ட வல்லுநர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களில் அவரது பிரதான இயக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நீதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை ஸ்ரீ நாயுடு அடிக்கோடிட்டுக் காட்டினார், விரைவாகவும், தீர்வு காணவும், பொதுச் செயற்பாட்டாளர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை வேண்டுமென்றே தீர்ப்பதற்கும் அழைப்பு விடுத்தார். இந்த நோக்கத்தை அடைய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என்று துணை ஜனாதிபதி பரிந்துரைத்தார், குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை கையாள்வதற்கு. தேர்தல் மோதல்களைத் தீர்ப்பதற்கும், தேர்தல் முறைகேடுகளைப் பார்ப்பதற்கும் தனித்தனி விரைவான நீதிமன்றங்களை அவர் முன்மொழிந்தார். சட்டமன்றங்களில் தவறிழைத்த வழக்குகள் காலவரையறையில் விரைவாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா ஒதுக்கும் நிதி கொஞ்சமும் போதுமானதல்ல. அடுத்த 10 ஆண்டுகளிலாவது இந்தியா கல்விக்காக 6% நிதியை ஒதுக்கீடு செய்தால் தான் கல்வியில் தன்னிறைவு பெற முடியும்.- DR.S.ராமதாஸ்


 கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6%: எப்போது 

எட்டுவோம் இந்த இமயத்தின் சிகரத்தை? - DR.S.ராமதாஸ்

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட  கோத்தாரி ஆணையம் என்று அழைக்கப்படும் முதலாவது கல்வி ஆணையத்தின் மூன்று முக்கிய பரிந்துரைகள் குறித்து நான் விளக்கி வருகிறேன்.

மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது.- DR.S.ராமதாஸ்


வன்னியர் இடப்பங்கீடு: 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி  ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொய் பிரச்சாரங்கள் - பொய் புகார்கள் மூலம் திமுகவிற்கு எதிராக அருந்ததியின மக்களை திருப்பலாம் என தூய்மை பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசனும், பாஜகவும், தினமலரும் கனவு காண வேண்டாம்.- திரு. அந்தியூர் செல்வராஜ் MP

"பொய் பிரச்சாரங்கள் - பொய் புகார்கள் மூலம் திமுகவிற்கு எதிராக அருந்ததியின மக்களை திருப்பலாம் என தூய்மை பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசனும், பாஜகவும், தினமலரும் கனவு காண வேண்டாம்"
- திமுக துணை பொதுச்செயலாளர் திரு. அந்தியூர் செல்வராஜ் MP அவர்கள் அறிக்கை.

கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்று வரும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அமோக ஆதரவைப் பார்த்து “தினமலருக்கு” எரிச்சல்! ஆகவே, அந்த நிகழ்ச்சியில் என்னைத் தனியாக நிற்க வைத்து விட்டனர் என்று ஏதோ அருந்ததியினர் மக்கள் மீது அக்கறை இருப்பது போல் வேடமிடுகிறது. அய்யோ பாவம்! தினமலர் பத்திரிகை இட்டுக் கட்டிய - ஒரு கற்பனையை வெளியிட்டு – அப்பத்திரிகைக்கு வேண்டியவர்களை மனம் குளிர வைத்துள்ளது!

வியாழன், 25 பிப்ரவரி, 2021

இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்


 இந்தியாவில் 'எளிதான வணிகத்தை' ஊக்குவிப்பதற்கும், உள்ளடக்கிய ஒழுங்குமுறை அமலாக்கத்தை மேம்படுத்துவதற்கும், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆகியவை தரவு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (எம்.சி.ஏ) மற்றும் நிதி அமைச்சின் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) இரு நிறுவனங்களுக்கிடையில் தரவு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எம்.சி.ஏ செயலாளர் திரு. ராஜேஷ் வர்மா, சிபிஐசி தலைவர் திரு. அஜித் குமார், எம்சிஏ இணை செயலாளர் திரு. மனோஜ் பாண்டே மற்றும் சிபிஐசியின் ஏடிஜி திரு பிபி ஆகியோர் முன்னிலையில். குப்தா அதில் கையெழுத்திட்டார்.

சுகாதாரம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவில் தீர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த மருத்துவ சூழலியல், உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும்.- பியூஷ் கோயல்


 

இந்திய மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறையில் உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதற்கான வசதி, உறுதித்தன்மையில் சிறந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

 மருந்தியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறை பற்றிய 6-வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் சிறந்த தயாரிப்பு முறைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் கோவையில் பல கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை


 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களே, தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களே, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, தமிழக அமைச்சர் வேலுமணி அவர்களே, மரியாதைக்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

இங்கே கோவைக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொழிற்சாலைகள் மற்றும் புதுமை சிந்தனை படைப்புகள் நிறைந்த நகரம் இது. இன்றைக்கு கோவை மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயன் தரக் கூடிய பல வளர்ச்சித் திட்டங்களை நாம் தொடங்கி வைக்கிறோம்.

NLC தேர்தல்: பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாட்டாளி தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டதை தொழிலாளர்கள் உணர வேண்டும்.- அன்புமணி ராமதாஸ்

NLC தேர்தல்: பாட்டாளிகளின் உரிமைகளை

வென்றெடுப்பதற்கு பாட்டாளிகளை வெற்றி பெற செய்யுங்கள்!

 - அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்படுத்தற்காக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. பாட்டாளிகளின் உரிமைகளை தாரை வார்த்த, அடகு வைத்த அமைப்புகளை புறக்கணித்து விட்டு, பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாட்டாளி  தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டதை தொழிலாளர்கள் உணர வேண்டும்.

சமையல் எரிவாயுவுக்கான அடிப்படை விலையாக ரூ.500 நிர்ணயித்து மீதமுள்ள தொகை முழுவதையும் மானியமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில்

மூன்றாவது முறை விலை உயர்த்துவதா? - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயு விலை உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.

பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


"பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனம்;

இந்நிலை தொடர்ந்தால் திமுக போராட்டத்தில் இறங்கும்"

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும் - அ.தி.மு.க.வினரையும் பாதுகாக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை.- வைகோ


காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள
கர்நாடக மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை! - வைகோ அறிக்கை

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றுவதற்காக இத்திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.

புதன், 24 பிப்ரவரி, 2021

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம், குடிமக்களில் மருத்துவ அறிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, இதர உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களிலும் கூட்டணி அமையலாம்.- நரேந்திர மோடி


சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

வலைதள கருத்தரங்கில் பேசிய பிரதமர், முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதார துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் மேம்பட்ட சுகாதாரத்தை வழங்க அரசு உறுதிபூண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார்.

அகில இந்திய தொகுப்பு இடங்களில் OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான திருத்த அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.


 
மருத்துவ மேற்படிப்பு: ஓபிசி இட ஒதுக்கீடு

மீண்டும் மறுக்கப்படுவது மாபெரும் அநீதி! - DR.S.ராமதாஸ்

இந்திய தேசிய தேர்வு வாரியம் (National Board of Examinations) நேற்று வெளியிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிக்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதனால் அமைக்கப்பட்ட குழுவும் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில். மீண்டும் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவதில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் தவிர்ப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளுக்கு பெருமை தரும். - நாராயணன் திருப்பதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள  முடியாத, கடும் பிரச்சினை என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பின் மூலமே நிர்வாக செலவுகளையும், மக்கள் நலத்திட்டங்களையும்  செயல்படுத்தி வருகின்றன. ஒரு ஆண்டின் வருவாய் - செலவு திட்டங்கள்  வரி விதிப்பின் அடிப்படையிலேயே அமைகிறது.

ஆனால் கடந்த நிதியாண்டு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. கொரோனா தொற்று மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி எடுத்தது கண்கூடு. 2 மாதங்கள் முடங்கிப்போன மொத்த வாழ்க்கையே முடங்கிப்போன நிலையில், உற்பத்தி துறை உட்பட அணைத்து துறைகளும் பாதித்தன. பல தொழில்களும் முடங்கியதால்  பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியும் எதிர்பார்த்ததை விட குறைந்தது. ஆனாலும் மத்திய அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கிற புதிய ஆட்சிக்குக் கடன் சுமையாக ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியை வைத்து விட்டுச் செல்வது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாக இருக்க முடியும்.- கே.எஸ்.அழகிரி

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு துறைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கிற தமிழக அரசு, பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே, தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4.85 லட்சம் கோடியிலிருந்து ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலைமை அதல பாதாளத்தில் சென்றுவிட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், இவை வெறும் அறிவிப்புகளாகவே கருதப்படும்.

வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது. - E.R.ஈஸ்வரன்


2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா.

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை! - தி.வேல்முருகன்


 
சட்டமன்ற தேர்தல் செலவுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை! - தி.வேல்முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 கோடி புதிதாகக் கடன் வாங்குவதற்கு, இந்த 2021-22 வரவு- செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. 

தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி - அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி மண்ணில் இருந்து தொடங்குகிறது.- மு.க.ஸ்டாலின்

 "தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி - அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி மண்ணில் இருந்து தொடங்குகிறது

பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் மாநிலத்தை கொள்ளையடிப்பது - பாஜக அரசுக்குக் கொத்தடிமையாக இருப்பது மட்டுமே” 

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

தமிழகத்தின் பெருமை மிகு மேட்டூர் அணை இருக்கும் இந்தப் பகுதியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவிரி ஆற்றின் குறுக்கே 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணை 1934 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையால் கடந்த நூறு ஆண்டு காலத்தில் தமிழகம் அடைந்த பயன் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. மக்களை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நீர் தேவதையாக இந்த மேட்டூர் அணை இருக்கிறது.

ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை.- மு.க. ஸ்டாலின்

"ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை;

கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் -  ஓபிஎஸ் ஆகியோரை கண்டித்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிப்பு”

-  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக அரசு தமிழகப் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு தள்ளியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு


தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை (2021-2022) துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் உள்ள விபரங்களை பார்க்கும் பொழுது ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகும் நிலையில் தமிழகத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது.

கல்வி, வேளாண்மை வளர்ச்சிக்கு வகை செய்யும் நிதிநிலை அறிக்கை! - DR.S.ராமதாஸ்

கல்வி, வேளாண்மை வளர்ச்சிக்கு

வகை செய்யும் நிதிநிலை அறிக்கை! - DR.S.ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவை வரவேற்கத்தக்கவை.

மக்களை நம்புங்கள் - பச்சோந்தி அரசியலை புதுச்சேரியில் குழிதோண்டிப் புதைக்க பொதுவானவர்கள் துணை நிற்கட்டும்! - கி.வீரமணி


புதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்!

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநில அரசின் நிர்வாகம் மத்திய அரசின் பிடியில் உள்ளது.  மக்கள் தேர்தலில் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் உருவாக்கினாலும்கூட, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேச ஆட்சி- உள்துறை அமைச்சகத்தின் மற்றும் மத்தியில் உள்ள ஆட்சியின்கீழ் இயங்கவேண்டிய நிலையே நீடிப்பது ஒரு அரசியல் முரண்நகை.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜக'வின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.- தொல்.திருமாவளவன்


புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு ! இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே! 

பாஜக'வின் அநாகரிக அரசியலுக்கு   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜக'வின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புதுச்சேரி வாக்காளர்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறோம். 

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 62 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவற்றை மீட்பது குறித்து இலங்கை அரசிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 தமிழக மீனவர்களின் 62 படகுகள்  இலங்கை வசம் உள்ளன: மீனவர்களைத் தாக்கக் கூடாது என இலங்கைக்கு கண்டிப்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு வெளியுறவு அமைச்சர் பதில்

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 62  படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,  அவற்றை மீட்பது குறித்து இலங்கை அரசிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திடீர் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்க! - DR.S.ராமதாஸ்

திடீர் மழையால் சேதமடைந்த நெல்

மூட்டைகளை கொள்முதல் செய்க! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் விழுப்புரம், கடலூர் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெய்த மழை அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக உழவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் எதிர்பாராத மழையில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மத்திய - மாநில அரசுகள் பெட்ரோல் - டீசல் விலையை கடுமையாக உயர்த்தி, மக்களுக்கு சாட்டையடி தருகின்றன - மு.க.ஸ்டாலின்

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மத்திய - மாநில அரசுகள் பெட்ரோல் - டீசல் விலையை கடுமையாக உயர்த்தி, மக்களுக்கு சாட்டையடி தருகின்றன” - மு.க.ஸ்டாலின் உரை.

அந்தியூர் என்றாலே மாட்டுச் சந்தையும், குதிரைச் சந்தையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மாடு என்றால் செல்வம். குதிரை என்றால் கம்பீரம். செல்வமும் கம்பீரமும் நிறைந்த ஊர் தான் இந்த அந்தியூர்.

மாட்டுச் சந்தைகூட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் குதிரைச் சந்தை என்பது தென்னிந்தியாவில் நடக்கும் ஒரே இடம் இந்த அந்தியூர் தான். சுல்தானியர்களின் ஆட்சி காலத்தில் குதிரைப்படை வீரர்கள் அதிகமாக வாழ்ந்த வீரம் மிகுந்த பகுதிதான் இந்த அந்தியூர் பகுதியாகும்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு தலைவர் ராகுல் காந்தி, எம்.பி . கடிதம்:


நூல் விலை உயர்வு மற்றும் இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

கொரோனோ பரவல் ஜவுளி விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக காட்டன் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் சேர்ந்து குறு, சிறு, நடுத்தர தொழில்துறையைப் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவில் நூல் தட்டுப்பாடு இருந்தபோதிலும், வியட்நாம், வங்காள தேசம் மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நூல், பொது முடக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

சனி, 20 பிப்ரவரி, 2021

விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!


விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலையிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு வரும் 25.02.2021 அன்று நடைபெறவுள்ளது. இக்குடமுழுக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கிணங்க கருவறை - கலசம் - யாகசாலை ஆகிய மூன்று முகாமையான நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டுமென “தெய்விகத் தமிழ்ப் பேரவை” கோரிக்கை விடுத்து வருகிறது. 

மலைவேடன் இன மக்களுக்கு பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல்லை திணற வைத்த போராட்டம்! - DR.S.ராமதாஸ்

மலைவேடன் இன மக்களுக்கு பழங்குடி 

மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி 

திண்டுக்கல்லை திணற வைத்த போராட்டம்! - DR.S.ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் கட்சி. பிற கட்சிகளைப் போல வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சியல்ல. செயலில் காட்டும் கட்சி. அதற்கு ஆயிரமாயிரம்   எடுத்துக்காட்டுகளை கூற முடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில்  மலைவேடன் எனப்படும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நான் பங்கேற்று நடத்திய போராட்டம் ஆகும்.

அமைதிக்குப் பேர் போன கோவையை கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய வேலுமணிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.- மு.க.ஸ்டாலின்

 "அமைதிக்குப் பேர் போன கோவையை கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய வேலுமணிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்;

மக்கள் மன்றத்தால் பழனிசாமி தண்டிக்கப்பட வேண்டும்”

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த உதகை மாவட்டத்தில் - மணம் கமழும் மேட்டுப்பாளையத்தில் உங்களை எல்லாம் சந்திக்கும் உன்னதமான வாய்ப்பை இந்த மாலை வேளையில் நான் பெற்றிருக்கிறேன்!

தமிழகத்தை பூந்தோட்டம் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தப் பூந்தோட்டத்தில் எத்தனை விதமான மலர்கள் இருக்கிறது என்பதையும் அவரே வர்ணித்தார்.

அமைச்சர் வேலுமணி மீதான புகார்களுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன - திமுக அரசு அமைந்ததும் அவர் மீது வழக்குப் பாயும்” - மு.க.ஸ்டாலின் உறுதி.

“திமுகழக அரசு அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் அதிமுகவினரின் ரவுடியிசம் ஒடுக்கப்படும்;

அமைச்சர் வேலுமணி மீதான புகார்களுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன - திமுக அரசு அமைந்ததும் அவர் மீது வழக்குப் பாயும்” 
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி.

கொங்குத் தமிழால் அன்பைச் செலுத்துகிற மக்கள் வாழும் இந்த மண்டலத்தில்- தொழில்வளர்ச்சி காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையில்- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோவையில்- ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு செம்மொழித் தகுதியை ஏற்படுத்தி செம்மொழி மாநாடு நடத்திய இந்த மாநகரத்தில் - உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்காக வருகை தந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி.- மு.க.ஸ்டாலின்


 “திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி;

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் இந்த ஸ்டாலினிடம் இருந்தும் - சட்டத்திடம் இருந்தும் தப்பவே முடியாது”

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

கண்களில் கனவுகளோடும், கையில் மனுக்களோடும் இதயத்தில் ஏக்கத்துடனும் - இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களது நீண்ட காலப் பிரச்னைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல! நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ- அந்த நம்பிக்கையை நான் உயிரோடு இருக்கும் வரை நிச்சயமாகக் காப்பாற்றியே தீருவேன்!

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தையும் எச்.ராஜா-வின் “தாத்தா”எழுதி வைத்ததைப் போலவும் அதை மீட்க வந்த “பேரன்” போலவும் பேசி வருகிறார்.- சாமி. நடராஜன்



 கோவில் நிலங்கள் எச்.ராஜாவின் தாத்தா எழுதி வைத்தவையா?
- சாமி. நடராஜன், மாநில அமைப்பாளர், 
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர்
பாதுகாப்பு சங்கம்

தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபோர்டு, தேவாலயங்கள் என சமயம் சார்ந்தவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 95% பேர் இந்து மக்களே. 

சிஏஏ போராட்டம், கொரோனா வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது! - DR.S.ராமதாஸ்

 சிஏஏ போராட்டம், கொரோனா வழக்குகள்

வாபஸ் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.  முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு, விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளது.


 சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான இயக்குநரகம் ஜெனரல் ஆகியோர் தொலைதூர இயக்கப்படும் விமான அமைப்பு (ஆர்.பி.ஏ.எஸ்) பயன்பாட்டிற்காக இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு நிபந்தனை விலக்கு அளித்துள்ளனர். இந்த அனுமதியின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் ட்ரோன்களைப் பயன்படுத்தி நாட்டின் 100 மாவட்டங்களில் விவசாய பகுதிகளில் ரிமோட் சென்சிங் தரவுகளை சேகரிக்கும். இந்த தரவு பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (பி.எம்.எஃப்.பி.ஒய்) கீழ் மகசூல் மதிப்பீட்டிற்காக கிராம பஞ்சாயத்து மட்டத்தில் சேகரிக்கப்படும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் - பிரதமர் நரேந்திர மோடி


விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாற்றினார். மேற்கு வங்க ஆளுநரும், விஸ்வ-பாரதியின் ரெக்டாருமான ஜகதீப் தன்கர், மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், வீர சிவாஜி குறித்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டினார். தனக்கு உத்வேகம் அளித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அதன் காரணமாக  அவர் அழைப்பு விடுத்தார். மாணவர்களும், பல்கலைக்கழக அலுவலர்களும், பல்கலைக்கழகத்தின் அங்கமாக மட்டுமின்றி, துடிப்பான பாரம்பரியத்தின் சிறப்பை முன்னிறுத்துபவர்களாகவும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

வியாழன், 18 பிப்ரவரி, 2021

தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் .


 

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், 2015-ல் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 


குழந்தைகள் நலனை உறுதி செய்ய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், 2015-ல் திருத்தங்கள் செய்வதற்கான, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், திட்டத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. அதன் பிறகே சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி அதிரடி



பட்டியலின வெளியேற்றமே இறுதித் தீர்வு - டாக்டர்.கிருஷ்ணசாமி அதிரடி

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, அந்த மக்கள்`தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கப்படுவார்கள் என்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்தநிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

``தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவும், அந்த மக்களை தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து நீக்கவும் கடந்த 25 வருடங்களாக புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியது. எங்களின் கோரிக்கைக்காக, புதிய தமிழகம் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். தற்போது `தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேசமயம், `தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைப்பதுடன், பட்டியல் பிரிவிலிருந்தும் நீக்க வேண்டும். இதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதை முன்வைத்தே தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவந்தோம்.

வறுமையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் தவறாக, தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் இணைத்துவிட்டார்கள். அதனால், ஒரு சதவிகிதம் படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலையில் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டதால் எங்கள் மக்களின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் பெரும்பான்மையான மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது. அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும்கூட மலிவாகப் பார்க்கக்கூடிய சூழல் இருக்கிறது.

முன்னேற்றம் தடைப்படுவதால்தான், தங்கள் பெயரை மாற்றிக் கொடுத்தால் மட்டும் போதாது; பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மக்களின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். பெயர் மாற்றத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனவே, அவர்கள் பட்டியல் பிரிவிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற திருத்தத்தையும் மசோதாவில் கொண்டு வர வேண்டும்.

எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, இ-மெயில் மூலமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பவிருக்கிறோம். 

பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. அதன் பிறகே சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பட்டியல் இனத்திலிருந்து நீக்கிவிட்டால் தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக அரசியல் அதிகாரம் பெறுவோம்” என்றார்.

புதன், 17 பிப்ரவரி, 2021

மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளை வசப்படுத்தி ஆட்சியைப் பிடித்ததுபோல புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக வின் அரசியல் பேரம்! - கி.வீரமணி

 ம.பி.யில் எதிர்க்கட்சிகளை வசப்படுத்தி ஆட்சியைப் பிடித்ததுபோல புதுச்சேரி மாநிலத்திலும் பா.ஜ.க.வின் அரசியல் பேரம்!

கட்சி மாறிகளுக்கு  - வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்பவர்களுக்கு புதுச்சேரி மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்!

புதுச்சேரி மக்களுக்கு காலந்தாழ்ந்தாவது ஜனநாயக ரீதியில் - என்ன காரணத்தை மனதிற்கொண்டோ - ஒரு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் குறிப்பிட்டதுபோல், ‘‘இது புதுவை மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்த வெற்றி!’’ (இந்த முடிவுக்குப் பின்னால் வேறொரு திட்டமும் பா.ஜ.க. - மத்திய ஆட்சியில் இருக்கக் கூடும் என்று பத்திரிகையாளர் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுவதையும் புறந்தள்ளிவிட முடியாது).

பெட்ரோல்- டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும் ஆபத்து! - கி.வீரமணி


பெட்ரோல்- டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும் ஆபத்து!

இல்லத்தரசிகள் தங்களது கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவார்கள்! - கி.வீரமணி

கரோனா தொற்று - கோவிட் 19 ஏற்படுத்திய வேலை கிட்டாத தன்மை, வறுமை, கடன் தொல்லை இவற்றிலிருந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் இன்னமும் மீள முடியாத நிலை தொடர்கிறது.

விவசாயிகளின் வேதனையோ - இயற்கையின் ஒத்துழைப்பின்மையால், கதிர்முற்றி விளைந்த நெல்லைக்கூட அறுவடை செய்து, வருமானம் பெற முடியாத அளவுக்கு வயலில் பெய்த அதீத மழை காரணமாக பயிர்கள் மூழ்கி அழுகிய நிலை; ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக மட்டுமே வைத்து விற்க முடியாத அளவுக்கு காவிரி டெல்டா பகுதியில் கடும் மழை ஈரத்தால் பாதிக்கப்பட்டு, பணம் பார்க்க முடியாத பரிதாப நிலை!

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய பாஜக, அதிமுக அரசுகளை கண்டித்தும் – விலைக்குறைப்பை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 ”பெட்ரோல் – டீசல் - கேஸ் சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய பாஜக – அதிமுக அரசுகளை கண்டித்தும் – விலைக்குறைப்பை வலியுறுத்தியும், 22-02-2021 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50-க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி – சென்னை வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு “அதிர்ச்சி”ப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அனைத்து இயன்ற முயற்சிகளையும் அரசு செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.


 

உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு மற்றும் WHO இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது


 WHO இன் பிராந்திய பாரம்பரிய மருத்துவ திட்டத்திற்கான ஆயுஷ் நிபுணரை நியமிப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO SEARO) தென்கிழக்கு பிராந்திய அலுவலகம் இடையே இன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திடும் விழா புதுதில்லியில் உள்ள WHO SEARO இல் நடைபெற்றது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா மற்றும் WHO தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேதர்பால் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.-தி.வேல்முருகன்


 தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. 

கொரானா காலங்களில் பல்லாயிரம் பேர் வேலையிழப்பு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் வன்முறைகள், நாட்டின் உற்பத்தி குறைவு என நாடு அபாயத்தின் விளிம்பில் நின்று மூச்சிதிணறிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு, வெங்காயம் விலை உயர்வு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும்! சீரழிந்து கிடந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்த வரலாறு! - DR.S.ராமதாஸ்

 தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும்!

சீரழிந்து கிடந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் 

நினைவிடத்தை சீரமைத்த வரலாறு!

செப்டம்பர் 11...

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!

ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சமையல் எரிவாயு மானியத்தை ரூ.275.53 உயர்த்தி ரூ.300.48 ஆக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 அதிகரிக்கும் எரிவாயு விலையால் மக்கள்

அவதி: மானியத்தை உயர்த்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடாக மானியம் உயர்த்தப்படாததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 15 பிப்ரவரி, 2021

பாகுபாடற்ற முறையில் கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை பாகுபாடற்ற முறையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.- தொல்.திருமாவளவன்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர் இளங்கீரன் கைதுக்கு கண்டனம்! பொய் வழக்கை உடனே திரும்ப பெறு!

பாகுபாடற்ற முறையில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கு !

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்குட்பட்ட வீராநந்தபுரம் கிராமத்தில், சிதம்பரம்- திருச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின்  கோரிக்கைகளுக்காக தொடர்புடைய  அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை  நடத்திய AIKSCC-யின் மாநில செயற்குழு உறுப்பினரும், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான திரு.கே.வி.இளங்கீரன் அவர்களை  காட்டுமன்னார்கோயில் காவல்துறை அதிகாரிகள்  கடுமையாக தாக்கி அவர்மீது  பொய்வழக்குப் புனைந்து கைது செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் இப்போக்கை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது .

பிரதமர் மோடி விரித்திருக்கிற மாயவலையில் மடியில் கணம் உள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். - கே.எஸ்.அழகிரி


மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரிகைபுரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார். இலங்கையில் 40 ஆண்டுகாலமாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த நிலையில் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு பெறவேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தானாவுடன் 1987 இல் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ் தாயகப்பகுதி உருவாக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. 

தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக அரசு செலவில் விளம்பரம் செய்வதை நிறுத்தி, கட்சி நிதியில் செய்வதோடு - 'வெற்றுநடை போடும் தமிழகம்' என விளம்பரத்தை மாற்ற வேண்டும்.-கே.என்.நேரு MLA


 "தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக அரசு செலவில் விளம்பரம் செய்வதை நிறுத்தி, கட்சி நிதியில் செய்வதோடு - 'வெற்றுநடை போடும் தமிழகம்' என விளம்பரத்தை மாற்ற வேண்டும்"

- திமுக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு MLA அவர்கள் அறிக்கை.

டெண்டரே விடாமல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் மக்களை ஏமாற்றியது போதாது என்று ஆட்சியை விட்டுப் போகப் போகின்ற நேரத்திலும் கூட ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

பெட்ரோல் - டீசலை தொடர்ந்து சமையல் கேஸ் விலையையும் கடுமையாக உயர்த்தியிருப்பது – மோடி அரசு மக்களுக்குத் தந்துள்ள கொடூர பரிசு.- மு.க.ஸ்டாலின்

 “பெட்ரோல் - டீசலை தொடர்ந்து சமையல் கேஸ் விலையையும் கடுமையாக உயர்த்தியிருப்பது – மோடி அரசு மக்களுக்குத் தந்துள்ள கொடூர பரிசு”

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “எய்மஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஐ.ஐ.டி. முனைவர் மாணவர் சேர்க்கையில் சமூக அநீதி: வெள்ளை அறிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்

 ஐ.ஐ.டி. முனைவர் மாணவர் சேர்க்கையில்

சமூக அநீதி: வெள்ளை அறிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்

சென்னை ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற ஐந்து ஐ.ஐ.டிகளில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை புறக்கணித்து விட்டு,  பொதுப்பிரிவினரைக் கொண்டு 72.10% இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தேவேந்திரகுல வேளாளர் - மத்திய அரசு மசோதா பெயர் மாற்றம் சமூகத்திற்கான அடையாளம்! பட்டியல் மாற்றமே தேவேந்திரகுல வேளாளருக்கான அங்கீகாரம்!! - டாக்டர்.K.கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர் - மத்திய அரசு மசோதா பெயர் மாற்றம் சமூகத்திற்கான அடையாளம்! பட்டியல் மாற்றமே தேவேந்திரகுல வேளாளருக்கான அங்கீகாரம்!! - டாக்டர்.K.கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், அவர்கள் தற்போது இடம் பெற்றிருக்கக்கூடிய SCHEDULED CASTE  என்ற பட்டியலினத்திலிருந்து விலக்கிடவும் தொடர்ந்து போராடிவருகின்றனர்.  அதில் ஒரு பகுதியாகிய பெயர் மாற்றக் கோரிக்கைக்கான சட்டத் திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருக்கிறது.