வெள்ளி, 18 ஜூன், 2021

உலக யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தபால் துறை, நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்கள் மூலம் தனித்துவமான படங்கள் வடிவத்துடன் சிறப்பு முத்திரையை வெளியிடுகிறது.


 உலக யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தபால் துறை, நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்கள் மூலம் தனித்துவமான படங்கள் வடிவத்துடன்  சிறப்பு முத்திரையை வெளியிடுகிறது. இது மிகப் பெரிய தபால்தலை நினைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும்.

2021 ஜூன் 21ம் தேதி அன்று, அனைத்து தலைமை தபால் அலுவலகங்களும், கடிதங்களில் இந்த சிறப்பு முத்திரையை பதிக்கும்.  இந்த முத்திரையில், வரைகலை வடிவமைப்பு, சர்வதேச யோக தினம் என்ற வாசகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். தபால் முத்திரை என்பது தபால் தலைகளை மீண்டும் பயன்படுத்துவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதுவும் முக்கியமான சேகரிப்பாக மதிக்கப்படுகிறது.

தபால் தலை ஆய்வுகளில் இந்த முத்திரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2021 ஜூன் 21ம் தேதி சென்னை பார்க்டவுன் தலைமை தபால் அலுவலகத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1) ஆயுஸ் இணையதளத்தில் உள்ள யோகா நெறிமுறைகள், பல வகை யோகாசனங்கள், பார்க்டவுன் தலைமை தபால் அலுவலகத்தில் எல்இடி டி.வி. மூலம் மக்களுக்கு ஒளிபரப்பப்படும்.

2. வீட்டில் வழக்கமாக யோகாவில் ஈடுபடும் அதிகாரிகள், யோகாசனங்களை செய்வர் மற்றும் அதன் படங்களை அனுப்புவர். இது மற்ற அதிகாரிகளையும் தினந்தோறும் யோகா செய்வதை ஊக்குவிக்கும்.

3) 2021 சர்வதேச யோகா தினத்தில், ஆயுஷ் இணையளத்தில் உள்ள உறுதிமொழிகளை ஆன்லைன் மூலம் எடுக்க அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவர். 

யோகா மற்றும் சர்வதேச யோகா தினம் ஆகியவை பல ஆண்டுகளாகவே தபால்தலை நினைவுகூறல்களில் பிரபலமாக உள்ளன.

இந்தாண்டு கொவிட்-19 தொற்றை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் காணொலி  முறையில் நடக்கின்றன. ‘யோகாவுடன் இருங்கள், வீட்டில் இருங்கள்’’ என்பதுதான் இந்தாண்டில் பிரபலப்படுத்தப்படும் முக்கிய கருப்பொருள்.

ஊரடங்கில் இருந்து நாடு எச்சரிக்கையுடன் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தப் மிகப் பெரிய தபால் நினைவு நடவடிக்கை, 800க்கும் மேற்பட்ட முத்திரைகளுடன் (ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் வெளியிடப்படும் முத்திரையும் சேகரிக்க கூடியவை) மகத்தான தபால்தலை  நடவடிக்கைகளை தொடங்குகிறது. இது நாட்டில்  தபால் தலை சேகரிப்பு நடவடிக்கையை மீண்டும் தூண்ட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக