வியாழன், 3 ஜூன், 2021

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பை ராணுவ தளபதி ஆய்வு செய்தார்




 

தமது இரண்டு நாள் காஷ்மீர் பயணத்தின் இரண்டாவது நாளில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு நிலைமையை ராணுவ தளபதி, ஜெனரல் எம் எம் நரவனே ஆய்வு செய்தார்.

வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய் கே ஜோஷி மற்றும் சினார் கார்ப்ஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டி பி பாண்டே ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாதிகள் செய்யும் ஊடுருவல் முயற்சிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அங்கிருந்த தளபதிகள் தலைமை தளபதிக்கு விளக்கினர்.

வீரர்களுடன் உரையாடிய ராணுவ தளபதி, அவர்களது உயரிய மனவலிமைக்காகவும், எதையும் எதிர்கொள்ளும் தயார்நிலைக்காகவும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவி வரும் அமைதியை பாராட்டிய அவர், இதன் காரணமாக தங்களது காவலை வீரர்கள் குறைத்து விடக்கூடாது என்றும், எந்த விதமான பாதுகாப்பு சவால்களையும் எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக