வெள்ளி, 4 ஜூன், 2021

பிரிக்ஸ் நாடுகளின் பாரம்பரிய மருந்து தயாரிப்புகளின் தரப்படுத்தலை ஒழுங்குபடுத்துவது குறித்த இணைய கருத்தரங்கு


 பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இதனால், பிரிக்ஸ் நாடுகளின் பாரம்பரிய மருந்து  தயாரிப்புகளின் தரப்படுத்தலை ஒழுங்குபடுத்துவதில் இணக்கத்துடன் செயல்படுவது குறித்த இணைய கருத்தரங்கை ஆயுஸ் அமைச்சகம்  சமீபத்தில் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய மருந்து நிபுணர்கள் மற்றும் இதன் விற்பனையில் தொடர்புடைய பலர் கலந்துக் கொண்டனர். 

இதேபோல் இரண்டு காணொலி காட்சி கூட்டங்களை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆயுஸ் அமைச்சகம் நடத்தியது.

சமீபத்தில் நடந்த கூட்டத்துக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் மனோஜ் நெசாரி தலைமை வகித்தார். இந்த இணைய கருத்தரங்கில் பேசிய டாக்டர் மனோஜ் நெசாரி, பாரம்பரிய மருத்துவத் துறையில், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டுறவை பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாரம்பரிய மருந்துகளில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பாரம்பரிய மருந்துகளுக்கான  பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் இந்த இணைய கருத்தரங்கில் இந்தியா சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் இடையே பாரம்பரிய மருந்து  தயாரிப்புகளின் தரப்படுத்தலை ஒழுங்குபடுத்துவதில் இணக்கத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். 

ஆயுஸ் மருந்துகள் மூலம் கொவிட் பாதிப்பை குறைக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்த இணைய கருத்தரங்கில் எடுத்து கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக