புதன், 2 ஜூன், 2021

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயர் உடல்கள் குவிந்து கிடக்கும் அவலம் பாதுகாப்பாக இறுதிக்கடமைகள் செய்ய நடவடிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்

 தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயர் உடல்கள் குவிந்து கிடக்கும் அவலம் பாதுகாப்பாக இறுதிக்கடமைகள் செய்ய நடவடிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடல்கள் கிடங்கில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின்  உடல்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும்,  அவற்றை அவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டு எடுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. கொரோனா நோயாளிகளின் உடல்கள் பாதுகாப்பின்றி கிடத்தி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் எரிக்கவோ, புதைக்கவோ பட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் கூட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை  உறவினர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று  அரசு எச்சரித்துள்ளது. அத்தகைய சூழலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களே தேடிக்கண்டுபிடிக்கும் அளவுக்கு குவித்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது நோய்ப்பரவலுக்கு வழி வகுக்கும்.

உடல்கள் கிடங்கில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை என்பதால் தான் உடல்களை அடையாளம் காட்ட உறவினர்கள் அழைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுவது  ஏற்றுக்கொள்ள முடியாத  வாதம் ஆகும். கொரோனா நோயாளிகளின் விவரம் அவர்களின் உடல்கள் மீது இருக்கும் என்பதால் யாரும் அடையாளம் காட்டத்தேவையில்லை. யாருடைய உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்கக்கூடாது.  அரசு கண்காணிப்பில் தான் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக  கொரோனா நோயாளிகளின் உடல்களை குப்பைகளைப் போல கிடத்தி வைத்திருப்பது பேரவலம் ஆகும். இந்த அவலத்திற்கு  உடனடியாக அரசு முடிவு கட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக