வெள்ளி, 16 ஜூலை, 2021

1.52 லட்சம் சர்க்கியூட் கிலோமீட்டர்களுக்கு கூடுதல் பகிர்மான தடங்களை அமைத்து ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு-ஒரே அலைவரிசை இலக்கை எட்ட வேண்டும்.-ஆர் கே சிங்


 அரசு மின் விநியோக நிறுவனங்களின் 9-வது ஒருங்கிணைந்த தரவரிசை பட்டியலை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று வெளியிட்டார். அனைத்து நிறுவனங்களின் உற்சாக பங்களிப்புடன் நிறைவு செய்யப்பட்ட 2019-20 நிதியாண்டிற்கான 41 அரசு மின் விநியோக அமைப்புகளுக்கான இந்த ஒன்பதாவது வருடாந்திர தரவரிசைப் பணியை அமைச்சர் பாராட்டினார்.

1.52 லட்சம் சர்க்கியூட் கிலோமீட்டர்களுக்கு கூடுதல் பகிர்மான தடங்களை அமைத்து ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு-ஒரே அலைவரிசை இலக்கை எட்டுவது குறித்து திரு சிங் பேசினார்.

உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் விநியோக இடைவெளிகளை பூர்த்தி செய்வதை தாண்டி, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் மீது அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகள், 2020’ இதை நோக்கிய ஒரு முன்னேற்றம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முக்கிய நடவடிக்கை மூலம் நுகர்வோருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்றும், இதன் காரணமாக நாடு முழுவதும் வாழ்க்கை முறை எளிதாவதோடு, வர்த்தகம் செய்வதும் எளிமையாகும் என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை இணை அமைச்சர் திரு கிரிஷண் பால் குர்ஜார், மின்சார அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார், மாநில அரசுகளின் மின்சாரத்துறை செயலாளர்கள், மாநில விநியோக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஆர்ஈசி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக