வெள்ளி, 2 ஜூலை, 2021

குடிமைப் பணியாளருக்கு விதியை விட பங்களிப்பே முக்கியம்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


. இன்றைய குடிமைப் பணியாளருக்கு விதியை விட பங்களிப்பே முக்கியம் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

47-வது பொது நிர்வாகத்தில் முன்னேறிய பணிசார்ந்த திட்டத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய குடிமைப்பணி திறன் வளர்த்தல் திட்டமான கர்மயோகி எனும் இயக்கத்திற்கு வழிவகுக்கும் விதத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் முன்மொழிதல் ஒன்றுக்கு 2020 செப்டம்பர் 2 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று கூறினார்.

புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் மறைந்த டிஎன் சதுர்வேதி நினைவாக பெயரிடப்பட்டுள்ள உரையரங்கம் ஒன்றையும் அமைச்சர் திறந்து வைத்தார். தமது பணிக்காலத்தில் பல்வேறு பதவிகளை திறம்பட வகித்த திரு சதுர்வேதி நினைவாக இந்த அரங்கத்தை திறந்து வைப்பதற்கு தாம் பெருமை படுவதாகவும் இந்த நிகழ்வு தமது நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பன்முகத்தன்மை வாய்ந்த திரு சதுர்வேதி, மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக திகழ்ந்ததாகவும், இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர், இருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்ததாகவும் அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

நடுத்தர நிலையில் உள்ள அலுவலர்கள் இன்னும் பொறுப்பு வாய்ந்த மற்றும் முடிவெடுக்கும் நிலையில் உள்ள தலைமை பதவிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையானவற்றை பொது நிர்வாகத்தில் முன்னேறிய பணிசார்ந்த திட்டம் வழங்குகிறது பொது நிர்வாகம், நிதி, டிஜிட்டல் ஆளுகை, சைபர் பாதுகாப்பு, வேளாண் பொருளாதாரம், நகர்புற ஆளுகை, நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சமூக அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளை இத்திட்டம் கையாள்கிறது.

இவற்றைத் தவிர, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கான சுற்றுலாவையும் இது ஏற்பாடு செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் இதில் பங்கு பெறுவோர் பெரிதும் பயனடைவார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக