வியாழன், 15 ஜூலை, 2021

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குறைதீர்ப்பு மேலாண்மை பயன்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.


 செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குறைதீர்ப்பு மேலாண்மை பயன்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதை பாதுகாப்புத்துறை அமைச்சகம், கான்பூர் ஐஐடி உதவியுடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்தியப் பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்த பயன்பாடு, சிறந்த நிர்வாகத்தின் தயாரிப்பு எனவும், இது அரசு மற்றும் கல்வியாளர்கள் இடையேயான இணைதிறனை பிரதிபலிக்கிறது எனவும் கூறினார். இந்த நடவடிக்கை, மக்களை மையமாக கொண்ட அரசின் மற்றொரு சீர்திருத்தம் எனவும், இது மக்களுக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார். 

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த பயன்பாடு குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இது மக்களின் புகார்களை தானாக கையாண்டு ஆராயும். மனித தலையீடுகளையும், நேரத்தையும் குறைக்கும். குறைகளை தீர்ப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். 

பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், கூடுதல் செயலாளர்கள் திரு வி.சீனிவாஸ், திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, கான்பூர் ஐஐடி இயக்குனர் போராசிரியர் அபய் கரந்திகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக