செவ்வாய், 12 அக்டோபர், 2021

மின்சார இழப்பை குறைக்கும் நோக்கத்துடன் மின் விநியோக நிறுவனங்களின் எரிசக்தி கணக்கிடுதலை மின்சார அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது.


 தற்போது நடைமுறையில் உள்ள மின்துறை சீர்த்திருத்தங்களின் முக்கிய நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளி அடிப்படையில் எரிசக்தி கணக்கிடுதலை மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மின்சார அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான விதிமுறைகள் எரிசக்தித் திறன் குழுவால் இன்று வெளியிடப்பட்டது.

எரிசக்தி விநியோக நிறுவனங்கள் 60 நாட்களுக்கும் சான்றிதழ் பெற்ற எரிசக்தி நிர்வாகி மூலம் 3 மாதத்திற்கு ஒரு முறை எரிசக்தி கணக்கிடுதல் கட்டாயமென அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போல் அரசு அங்கீகாரம் பெற்ற சுயேச்சையான எரிசக்தி கணக்குத் தணிக்கையாளர் மூலம் வருடாந்திர எரிசக்தி கணக்கீடும் இருக்க வேண்டும். இந்த 2 அறிக்கைகளும் பொதுத் தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

நுகர்வோரின் பல்வேறு வகையினரால் பயன்படுத்தப்படும் மின்சாரம் பற்றிய விரிவான தகவலையும், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்லுதல் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகள் பற்றிய தகவலையும் எரிசக்தி இழப்பீடு அறிக்கைகள் கொண்டிருக்கும்.

அதிகபட்சமான இழப்பு மற்றும் திருட்டு நடைபெறும் பகுதிகள் இதன் மூலம் கண்டறியப்பட்டு சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். இதற்கு பொறுப்பான அதிகாரிகளை கண்டறியவும் இந்த நடவடிக்கைகள் உதவும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக