செவ்வாய், 12 அக்டோபர், 2021

2030ம் ஆண்டுக்குள் 450ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை இந்தியா அடையும்.- மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங்


 துபாய் 2020 கண்காட்சியில் நடந்த பருவநிலை மற்றும் பல்லுயிர் வார நிகழ்ச்சியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எப்ஐசிசியுடன் இணைந்து பலநிகழ்ச்சிகளை கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை  நடத்தியது. இதில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்கதி சாதனைகள், லட்சியங்கள், இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் உரையாற்றிய மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங், பருவநிலை மாற்றத்தை குறைக்க உடனடி  நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தினார். இதற்கு முதல் நடவடிக்கையாக எரிசக்தி மாற்றம் தேவை என அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் ஏற்கனவே 39 சதவீத அளவுக்கு படிமம் அல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் மின்சார உற்பத்தி திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2022ம் ஆண்டுக்குள் இந்தியா 40 சதவீத இலக்கை அடையும் என மத்திய அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர் திரு பகவாந்த குபா பேசுகையில், சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக இத்துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் கூறினார். 2030ம் ஆண்டுக்குள் 221 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை ஏற்படுத்துவதற்கான முதலீட்டு வாய்ப்புகளை இந்தியா திறந்துள்ளதாகவும் திரு குபா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக