புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

மீரா மிதுன் வெளியே போயிட்டார், இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா ? என்ற பலரது கேள்விக்கு பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் பிராசஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுவரை கன்பெக்‌ஷன் ரும்க்குள் நடந்து வந்த இந்த நாமினேஷன் பிராசஸ் முதல் முறையாக அனைவரது முன்னிலையிலும் நடந்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு மது (6) , கவின் (6)  ரேஷ்மா (4) சாக்க்ஷி (3)  மற்றும் அபிராமி (2) என ஐந்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் கடந்த வாரம் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த வாரம் ரேஷ்மாவை தவிர யாரும் நாமினேட் செய்யவில்லை. ரேஷ்மா  நாட்டாமை டாஸ்க்கில் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை என் மீது காட்டியதால் சேரனை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். குறிப்பாக கடந்த நாட்களில் சேரன் மீது அதிருப்தியில் இருந்த கவின், சரவணன், சாத்தான் என்று கூறிய சாண்டி மாஸ்டர் ஆகியோர் யாரும் நாமினேட் செய்யவில்லை.

கவினை இந்த வாரம் பெண்களில் லாஸ்லியாவை தவிர ரேஷ்மா, அபிராமி, ஷெரின், மதுமிதா மற்றும் சாக்‌ஷி முதல் முறையாக கவினை நாமினேட் செய்தனர். அதுபோல ஆண்களில் சேரன் மட்டுமே நாமினேட் செய்தார். மேலும் சாக்‌ஷி தன்னை நாமினேட் செய்த காரணத்தால் அதிருப்தியில் இருத்தார். கவின் சென்ற வாரம் சாக்‌ஷியை நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

மதுமிதாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ஆண்களில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் பெண்களில் அபிராமி, லாஸ்லியாவும் நாமினேட் செய்தனர்.



ரேஷ்மா முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை முகின், தர்ஷன், சேரன், கவின் ஆகியோர் நாமினேட் செய்தனர். முகின் ரேஷ்மாவை ஒருவரிடம் ஒரு விஷயத்தை கேட்டு அதனை மற்றொருவரிடம் சொல்லும் போது தவறாகவே சொல்கிறார் என்று கூறி நாமினேட்  செய்தார். ரேஷ்மாவும் முகின், தர்ஷன் ஆகியோர் தன்னை நாமினேட் செய்த காரணத்தால் கண்ணீர் சிந்தி அழுதார்.

சாக்‌ஷியை மதுமிதா, லாஸ்லியா, மற்றும் சரவணன் ஆகியோர் நாமினேட் செய்தனர். மேலும் கவினுக்கும் – சாக்‌ஷிக்கும் இடையிலான காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாக்‌ஷி மன அழுத்தம் காரணமாக ஷெரினிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அபிராமியை சாண்டி மற்றும் சரவணன் நாமினேட் செய்தனர். அபிராமி தன்னை இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது. 



பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

வசந்த பாலன் தனது பெஸ்புக் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.

இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,
அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது  எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.

வாழ்த்துகள் சாண்டி.
வென்று வாருங்கள்.
ஜெயில் காத்திருக்கிறது.


நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள் - மீரா மிதுன்

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?

கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?



கவின் பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பம் முதலே நான்கு பேரை காதலிப்பதாக கூறி வந்தார். இதற்கு காரணமாக அவர் சொன்னது ஜாலியாக மற்றும் மக்கள் பொழுதுப்போக்கு அம்சமாக அமையும் என்று கூறினார். ஆனால் அதற்கான எல்லையை கவின் வகுக்க வில்லை,அனைவரிடம் நெருக்கம் காட்டி வந்தார். இதை தவறாக உணர்ந்த சாக்க்ஷி தன்னை காதலிப்பதாக உணர்ந்தார். இதனை தன் நெருங்கிய நண்பர்கள் ஆன ஷெரின் மற்றும் அபிராமியுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு கவின் காதல் ரசம் பேச்சை ரசிக்கவில்லை, அதனால் விலகி நட்புடன் மட்டும் பழகி வந்தனர். ஆனால் இதனை லாஸ்லியா அறியாமல் கவின் தன்னிடம் மட்டும் தான் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், என நம்பி பழகி வந்தார்.

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கமல் வரும் நாளான எலிமினேஷன் நாட்களில் லாஸ்லியா பேசும் பொது மக்கள் செய்யும் ஆரவாரத்தை கவனித்த கவின் லாஸ்லியாவிடம் அதிகம்  நெருக்கம் காட்டினார். இதனை அறியாத லாஸ்லியாவும் கவினுடன் நெருக்கமாக நட்புக்கு மேல் புனித தன்மை பழகி வந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்களும் கவினையும் லாஸ்லியாவையும் இணைத்து காலாய்த்து கொண்டு இருந்தனர். இதனை கவினும், லாஸ்லியாவும் உள்ளுர மகிழ்ந்தனர். லாஸ்லியா கவினை அண்ணா என்று அழைப்பதும், கவின் வருந்துவது போல நடித்து பின்பு காதலில் உருகுவது போன்று பேசுவதும், வாடிக்கையாக இருந்து வந்தது இதன் பொருட்டு லாஸ்லியா மனதளவில் கவினுடன் நெருங்கி நட்புக்கு மேல்புனித தன்மையுடன் பழகி வந்தனர்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

கவின் லாஸ்லியாவின் ஜோடியை கண்டு சாக்க்ஷி பொசசிவ் ஆனார், சாக்க்ஷியும் கவின் தன்னிடம் காட்டிய நட்புக்கு மேல் புனித தன்மையுடன் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு சில நேரங்களில் கோபம் அடைந்தும் மற்றும் மனம் உடைந்தும் காணப்பட்டார். இதனை பார்த்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்களும் கவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்

இதனை உணர்ந்த கவினும் சாக்க்ஷியை சமாதானம் செய்ய முயற்சித்தார், இதனை லாஸ்லியாவும் தவறாக உணர்ந்தார். அதனால் லாஸ்லியா கவினுடன் சென்று “ நாம் பழக்கத்தால் சாக்க்ஷி மனம் வருந்துவதால் நீ என்னிடம் பேசமால் இரு”  என கூறி வந்தார். இதனால் இரண்டு லட்டு சாப்பிட நினைத்த கவினுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இது லாஸ்லியாவிற்கும் மனதளவில் பாதிப்பாக அமைந்தது. பின்பு லாஸ்லியாவிற்கு கவினுக்கும் சாக்க்ஷிக்கும் இருக்கும்  நட்புக்கு மேல் புனித தன்மையுடன் இருந்த உறவு அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவினுடன் பேசமால் தவிர்த்தார்.


பின்னர் கவின் அழுது புலம்பி இரண்டு நாள் சோகமாக சுற்றி  லாஸ்லியா, சாக்க்ஷி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இருவரிடமும் நட்பாக பழகி வருவதாக கூறினார். லாஸ்லியாவும் கவினிடம் மன்னிப்பு கூறினார். ஆனால் லாஸ்லியா நட்புக்கு மெல் புனித உறவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மிகவும் சோகமாக காணப்பட்டார், டாஸ்கில் கவனமின்றி மனம் போன போக்கில் செயல் பட்டார். இதனை கமலும் நேற்று சுட்டி காட்டினார். இன்று அபிராமியுடன் பேசுகையில் கூறியதாவது தான் மனதளவில் பாதிக்க ப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து மீண்டுவர தான் முயற்சித்து வருகிறேன். என்று கூறினார். பழைய லாஸ்லியாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா


ஞாயிறு, 28 ஜூலை, 2019

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

மதுவுக்கும் , சேரனுக்கும்  அநீதி இழைத்த கமல்ஹாசன்
"உண்மை ஒரு நாள் வெளிவரும் "; கமலுக்கு தண்ணி காட்டிய மீரா 




கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் தந்தாக கமல் கூறி நிகழ்ச்சி ஆரம்பித்தார்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை கூட கமலஹாசனால் தீர்க்க முடியவில்லை, முதலில் பிக்பாஸ் வீட்டில் கோபம் அடைந்தவர்களை நடித்து காட்டினார். பின்பு மிகுந்த கோபம் தனக்கு சிரிப்பை வர வைத்து என்று கூறினார். ஆனால் மதுவை கழிவறை செல்லும் முன் (heavy)யாக டான்ஸ் செய்ய சொல்லியாதால் வந்த கோபத்தை கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை, என் நாம் அவசரமாக மலம் அல்லது சிறுநிர் கழிக்கும் முன் இடையூர் செய்து குதிக்க அல்லது ஆட சொன்னால் நாம் எப்படி உணர்வோம், அதை பார்த்து சிரித்தால் நமக்கு கோபம் வாராத ஒரு வேளை மது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கூட(heavy)யாக டான்ஸ் செய்ய சொன்னால் கூட கோபம் வாராத இதை உணராத கமல் நகைச்சுவை இருந்தது கூறினார். மேலும் தன்னை குள்ளம் என்று கூறி கிண்டல் செய்தால் சில முறை ஜாலியாக எடுத்து கொள்ளலாம் தொடர்ந்து கிண்டல் செய்தால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை சாண்டி மாஸ்டரிடம் கமலஹாசன் உணர்த்த தவறினார்.
கடைசியாக மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. சேரனுக்காக வக்காளத்து வாங்கி பேசிய கமல்ஹாசன். பின்னர் மீராவை நடித்து காட்ட சொன்னார், அவரும் நடித்து காட்டினார், பின்பு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் குறும்படத்தை பொட்டு காட்டினார், இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பார்த்தனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடம் கருத்தையும் கமல்ஹாசன் கேட்டு அறிந்தார், வீட்டில் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை கூறினர் ஆனால் மீரா மிதுன் இதனை எற்கவில்லை.
தான் தவறாக தான் உணர்ந்தேன் என்று தன் நிலையில் இருந்தார்.

குறும்படத்தின் பயன் என்ன ? மீரா மிதுன் குற்றம் சாட்டிய அன்றே ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை என்று தான் கூறினர். மக்கள் அனைவரும் சேரன் மீது எந்த தவறும் இல்லை டிவியில் பார்த்தனர். அது தவிர மீரா மிதுன் குறும்படத்தை சமுக வலைத்தளங்களில் மற்றும் (hotstar) இல் பல முறை மக்கள் பார்த்தனர். குறும்படத்தை பொட்டது மீரா தன் தவறை உணர்வதற்கு தான். ஆனால் அவரோ “உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று கூலாக கூறி கமல்ஹாசனுக்கு தண்ணி காட்டினார். சேரனிடம் கடைசி வரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. சேரன் தன் மனைவி பிறந்த நாளில் கூட தன் மீது சுமத்திய அபாண்ட குற்றசாட்டிற்கு மீராவை சிறு வருத்தம் கூட தெரிவிக்க செய்ய முடியவில்லை. 
மீரா அவர்கள் சேரன் தன்னிடம் தவறாக நடந்தாக உணர்தேன் இறுதிவரை கூறி உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தெரிவித்து குறும்படத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தினார். மேலும் அவர் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும். வேளியே வந்து ( youtube channel ) மற்றும் சமுக வலைதளங்களில், சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் பல பேட்டிகளில் கூறுவார். என்பது குறிப்பிட்தக்கது.

கமல்ஹாசன் நாளை மீராவிடம் தன் தவறை உணர்த்த தாமல் வெளியேற்றினால் சேரனுக்கு பிக்பாஸ் ஹவுஸ் அநீதி இழைத்தாக கருதப்படும்.

சனி, 27 ஜூலை, 2019

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்



பொதுவாக கமல் நன்றாக மக்களிடம் பில்டப் செய்வார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் நீர்த்து பொவார். ஏற்கனவே கடந்த வாரங்களில் வனிதா விஜய்குமார், கவின் நடவடிக்கைகளை அவர் வன்மையாக கண்டிக்கவில்லை , கவின் இரண்டு பெண்களிடம் செய்த லிலைகளை அவர் காலாய்த்து மட்டும் விட்டார், அதுவும் சாக்ல்ட் விளம்பரம் மட்டும் செய்தார் என்று சொல்லாம்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

சாண்டி மாஸ்டர் செய்யும் கிண்டல்கள் பல ஹவுஸ்மேட் மணம் புண் பட்டது , அதை கமல் சாண்டி மாஸ்டரிடம் நசுக்காக சொல்ல தவறினார்.
மாறாக அதை வரவேற்று பேசினார்.

சரவணன் அவர்கள் மோகன் வைத்தியாவை திருநங்கை போன்று கிண்டல் செய்ததை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

மீரா மிதுனை கடந்த வாரங்களில் விஜய் டிவி காப்பாற்றி வந்தது, சென்ற வாரத்தில் கவின், சாக்‌ஷி, லோஸ்லியா என பல பிரச்சனைகள் இருந்த போதும் கூட சாக்‌ஷி, மீரா மிதுன் குறும்படத்தை காட்டி மீரா மிதுனை காப்பாற்றி நல்லவராக காட்ட முயன்றனர். மீரா மிதுன் சாண்டி தன்னை டாஸ்கில் சரியாக விளையாட விடாமல் செய்தார் குற்றம் சாட்டினார். அதற்குகாக சாக்‌ஷி அனைத்து ஹவுஸ்மேட் அழைத்து உன் விளக்கத்தை கொடு என்று கூறினார். ஆனால் மீரா மிதுனை நல்லவராக காட்டவே குறும்படத்தை போட்டனர்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

பல முறை எலிமினேஷனுக்கு வந்தும் மீரா மிதுன் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்துள்ளதாக அவரே எண்ணிக்கொள்கிறார். தன்னை ஒவியா ஒப்பிட்டு கொண்டுள்ளார். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் வகையில் மீரா செயல்பட்டு வருகிறார். 

அதனால் இந்த வாரம் மீரா மிதுன் தனக்காக ஒரு அணியை உருவாக்கி ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டும், ஏதாவது போட்டியாளரை வம்பிழுத்துக் கொண்டும் இருந்து வருகிறார் மீரா மிதுன். இதனால் சண்டை நடந்ததும், அப்போது அழுது பிரச்னையை முடிப்பது தான் மீராவின் யுக்தி. 

இந்த வாரம் நிகழ்ச்சியில் சேரன் மீது பரபரப்பு புகார் கூறிய மீரா, தொடர்ந்து போட்டியாளர்கள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். 

அதுபோல இன்றும் கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னை சூழலுக்கு ஏற்றார் போல பேசி, சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறி கமலின் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வைப்பார்.


கமலும் நழுவி சென்று அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பட்டதை பேசியபடி கடைசியில் சாக்‌ஷியை வெளியேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட முக்கிய காரணங்கள்,
சேரனுக்கு எதிராக ஆள் சேர்க்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்,






  1. லோஸ்லியாவிற்கும் தனக்கும் இடைவேளி எற்பட காரணம் சேரன் தான் என்று நம்புகிறார்.
  2. லோஸ்லியாவை சேரன் வெயிலில் கட்டி பொட்டு தண்டனை கொடுத்தால்.
  3. லோஸ்லியா சிறைக்கு சென்றது கவினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதற்கு சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  4. முன்பு ஒரு கொலைகாரன்  டாஸ்க்கில் தான் சிறைக்கு செல்ல சேரன் பரித்துரை செய்தார்
  5. சாக்‌ஷி மற்றும் ஷெரீன் தன்னை தவறாக நினைக்க சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  6. கவினுக்கு இயல்பாக வயதில் முதியவர்களை பிடிபதில்லை இதனை எலிமினேஷன் ஆன பாத்திமா பாபு கூறி இருந்தார்.
  7. சேரனை நேரடியாக எதிர்த்தால் போட்டியில் தொடர்வது பிரச்னையாக அமையலாம். அதனால் சாண்டி, கவின் ஆகியோரை தூண்டிவிட்டு வருகிறர் சரவணன்.  மேலும் சேரன், சரவணன் இருவரும் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிபிட்தக்கது.
  8. கவின் லோஸ்லியா, சாக்‌ஷி பிரச்சனையில் சேரன் தன்னை  ஹவுஸ்மேட்ஸுடம் மன்னிப்பு கேட்கும் படி பரித்துரை செய்தார்.



அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.


அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி டாஸ்கில்  சிறப்பாக விளையாடியவர்களாக  மிரா மிதுனை பரிந்துரை செய்தனர். மேலும் தங்களை டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என்று சிறை செல்ல தயரானார்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டி கொண்டனர், சிறைக் கைதிகளுக்கான உடை மாட்ர்ன் முறையில் அணிந்து கொண்டு இருந்தனர், அப்போது ஒலித்த பிக்பாஸ் சிறைக் கைதிகளுக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. பிக்பாஸிடம் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது போன்று கஞ்சி மற்றும் ஊறுகாய் வழங்க பட்டது. ஆனால் அதனை மகிழ்ச்சியுடன் எற்று கொண்டு நடித்து வருகிறார்கள்.இதனை பார்த்து கொண்டு இருந்த முகின், கவின் , சாண்டி விரும்பவில்லை. 

மேலும் லோஸ்லியா செய்த குற்றம் திருடியது டாஸ்கில் இல்லாதது இதனால் சேரன் தேவையற்ற அவமானத்தை சந்தித்தார். தனக்கு தானே தண்டனை யை கேட்டு வாங்கிய மாதிரி தான்  இந்த ஜெயில் தண்டனை. மற்றும் அபிராமி இது தன்னை எலிமினேஷன் காப்பாற்ற கூடும் என்றும் நம்புகிறார். இதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவியும் எண்ணிக்கொள்கிறார்கள். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவருடைய கருத்து மீது நம்பிக்கையில்லாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். 

வெள்ளி, 26 ஜூலை, 2019

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்


மீரா மிதுன் பற்றிய சர்ச்சைகள் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியிலும் உள்ளேவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 


மீரா மிதுன் முதல் வாரத்திலேயே அபிராமி மற்றும் சாக்‌ஷி பிரச்சனையை உருவாக்கினார். முகென் மற்றும் மீரா மிதுன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நீ யாருடன் வேண்டுமானால், பேசிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் பேசுறது எனக்கு பிடிக்காது. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லோஸ்லியாவும் உடன் இருந்தார். இவ்வளவு தான் நடந்தது. இதனைக் தவறாக நினைத்துக் கொண்ட சாக்‌ஷி, வனிதாவிடம் சென்று அபிராமி கிட்ட முகென் நீ பேசக் கூடாது என்று கூறியதாக காதில் விழுந்தது என்று குறிப்பிட்டார். முகினுடன் வாக்குவாதில் ஈடுபட்டார் பின்பு அபிராமியுடன் முடிந்தது




மீரா மிதுன் இரண்டாவது வாரத்தில் வீட்டின் உள்ளே தர்ஷனை அவர் காதலிப்பதாக சொல்லி பிரச்சனையை உருவாக்கினார். தர்ஷன் தனக்கு வேறு ஒரு காதலி வெளியில் இருப்பதாக கூறினார். தர்ஷனுக்கும் அவருக்கும் நெடுநாட்களாக பழக்கம் இருக்கிறதாம். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சனம் ஷெட்டி பிக் பாஸ் செட்டிற்கு வந்துள்ளார். மீரா மிதுனுக்கும் சனம் ஷெட்டிக்கும் உள்ள பகை பற்றி தர்ஷனுக்கும் தெரியும்  மீரா மிதுன் எல்லாம் தெரிந்து தான் வேண்டுமென்றே தர்ஷனை காதலிப்பதாக கூறுகிறார்.



மீரா மிதுன் முன்றாவது வாரத்தில் கவின் மற்றும் சாண்டி டார்கேட் செய்தார். பின்னர் சாக்‌ஷி தானாக வலையில் விழுந்தார், இதில் சாண்டி, கவின் தப்பித்தனர், பின்பு சாக்‌ஷியுடன் சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்திய மீரா.






மீரா மிதுன் நான்காவது வாரத்தில் மைனர் சரவணன், கீரிப்பட்டிக்கும் பாம்புப்பட்டிக்கும் இருந்த நெடுங்கால தொடர்பை கூறினார். அந்த கதையில் பாம்புப்பட்டி நாட்டமை சேரனின் மனைவி தான், கீரிப்பட்டி மதுமிதா. அவர்களுடைய மகள் தான் லோஸ்லியா என்று சரவணன் கதை சொன்னார். 

மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அப்போது, டாஸ்கின் அடிப்படையில் லோஸ்லியா ஒரு பொருளை திருடினார். அதை கையும் களவுமாக சேரன் பிடித்துவிட்டார். அப்போது லோஸ்லியா வைத்திருக்கும் பொருளை காப்பாற்ற மீரா முயற்சித்தார். இதை தடுக்க சேரன் உடனே மீராவை பிடித்து இழுத்து அந்த புறமாக போட்டார். 

 அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேச முன்வந்தார் மீரா. அதில் சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறினார்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா 



பிக்பாஸ் வீடு, இந்த வார லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை மேற்கொள்ள தயாரானது.  அதில் பாம்புப்பட்டி மக்கள், கீரிப்பட்டி மக்கள் என இரண்டு அணிகலாக பிரிக்க பட்டு விளையாடி வருகின்றனர். 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரம் காட்டி வருகின்றன. டாஸ்க் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் என்பது அவர்களுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான். இதில் பாம்புப்பட்டி கிராமத்தின் நாட்டமையாக இருக்கும் சேரன், தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.

மேலும்  சேரன் அவர்கள் அடிகடி கோவப்பட்டு டாஸ்க் ஈடுபடமால் இருப்பதால், மேலும் சேரனுடன் ரேஷ்மா, கவின், மீரா , ஆகியோருக்கும் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டது. அவரை இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் என்று சாக்‌ஷியும், கவின் மற்றும் ரேஷ்மா விவாதம் செய்கின்றனர்.

இதனை அறிந்த லோஸ்லியா சேரனை சிறையில் காப்பாற்ற, இந்த சிறையில் அடைக்க தன்னை பரிந்துரைக்கும் படி கவின் இடம் ஆதரவு கேட்டார். ஆனால் கவின் மறுத்து விட்டார். ஆகவே பிக்பாஸ் விதிமுறைகளை மிறி வருகிறார். 

லோஸ்லியா டாஸ்க் ஈடுபடமால் கழிவறை உபோயகித்து மற்றும் பானை உடைத்து அப்படி தான் செய்வேன் என்று  ரேஷ்மா, மது , சாக்‌ஷியிடம் கூறி வருகிறார், இதனை அறியாமல் ரேஷ்மா இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் எச்சரித்து வருகிறார்கள்.

வியாழன், 25 ஜூலை, 2019

வரலாறு 12-வது பாடக்குறிப்புகள்

வரலாறு 12-வது பாடக்குறிப்புகள்


  • பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
  • இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களூர்
  • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிடைவ்
  • ஹைதர் அலி மறைந்த ஆண்டு - 1782
  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்

வரலாறு 11-வது பாடக்குறிப்புகள்

வரலாறு 11-வது பாடக்குறிப்புகள்

  • மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாந்தர் இந்தியாவிற்க்கு வந்த வழி - ஸ்வாத் பள்ளத்தாக்கு
  • இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி - தோ ஆப்
  • செம்பு காலத்தை தொடர்ந்து வந்த காலம் - இரும்புக்காலம்
  • ஹரப்பா பயன்பாட்டின் துறைமுக நகரம் - லோத்தல்
  • வேதங்களில் பழமையானது - ரிக்

புதன், 24 ஜூலை, 2019

வரலாறு 10வது பாடக்குறிப்புகள்

வரலாறு 10வது பாடக்குறிப்புகள்

  • 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞர்கள் அழைத்தது - படைவீரர்கலகம்
  • இந்திய வரலாற்றறிஞர்கள் 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியை அழைத்தது - முதல் இந்திய சுதந்திரபோர்
  • 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் - கானிங் பிரபு
  • குடியானவர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டிய வரி - நிலவரி
  • குத்தகை நிலங்களை அரசின் கட்டுபாட்டில் கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு
  • பொது இராணுவப் பணியாளர் சட்டம் பொண்டு வரப்பட்ட ஆண்டு - 1856
  • முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம் - பாரக்பூர்
  • படைவீரர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டது - மீரட்
  • அயோத்தி நவாபின் மனைவி - பேகம் ஹஸ்ரத் மகால்
  • 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு பின் இந்திய கவர்னர் ஜெனரல் அழைக்கப்பட்டது - இந்திய அரசப் பிரதிநிதி 
  • சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழந்தவர் - இராஜாராம் மோகன்ராய்
  • 1829-ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி  என்னும் உடன்கட்டை  ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர் - இராஜாராம் மோகன்ராய்
  • சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
  • இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்
  • வள்ளலார் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு - திருவருட்பா
  • சார் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம் - அலிகார் இயக்கம்
  • சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம் – காசிப்பூர்
  • கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்த வாதி - ஸ்ரீநாராயண குரு
  •  பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழி கோலியது - ஏகாதிபத்தியம்
  • படித்த இந்தியர்களின் மொழியாக அமைந்தது. - ஆங்கிலம்
  • சமய (ம) சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்
  • மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வர்ணித்தது - அரசியல் பிச்சை
  • காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய மாநாடு - சூரத்
  • மிண்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது – சீக்கியர்கள்.
  • பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்
  • சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை - சத்தியாகிரகம்
  • சி.ஆர். தாஸ் (ம) மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26,1950 
  • 1932-ல் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது - வகுப்புவாத அறிக்கை
  • இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்தோ
  • நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது - ஜின்னா
  • இந்தியாவின் முதல் (ம) கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் - இராஜகோபாலச்சாரி
  • இந்திய சமஸ்தானங்களை இனைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் படேல்
  • இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - இராஜேந்திர பிரசாத்
  • வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படத் தூண்டியவர் - திப்பு சுல்தானின் மகன்கள்
  • மக்கள் உரிமையை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின்  முதல் அமைப்பு – சென்னை சுதேசி சங்கம்
  • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் - பி.இரங்கையா நாயுடு
  • வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜகோபாலாச்சாரி
  • 1908 ம் ஆண்டு பாரதியார்  சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியது - சுயராஜ்ஜிய நாள்
  • பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது - பாண்டிச்சேரி
  • தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயர் - சத்தியமூர்த்தி பவன்
  • 1940 ம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்திக்க இருந்தது - காந்திஜி
  • தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக காமராஜர் பதவி வகித்தது - 9 வருடம்
  • காமராஜரின் பிரபலமான கொள்கை - கே திட்டம்
  • தென்னிந்திய நல உரிமைக் கழகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது - நீதிக் கட்சி
  • நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது - திராவிடர் கழகம்
  • தமிழ்நாட்டின் தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதி - ஈ.வே.ராமசாமி
  • வைக்கம் அமைந்துள் இடம் - கேரளா
  • சி.என்.ஆண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது - அண்ணா
  • திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர் - சி.என்.அண்ணாதுரை
  • அண்ணாவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
  • டாக்டர்.முத்துலட்சுமியின்  சீரிய  முயற்ச்சியால்  புற்றுநோய்  மருத்துவமனை  தொடங்கப்பட்ட  இடம் - அடையார்
  • அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம் - பூனா
  • டாக்டர்.முத்துலட்சமியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம் - அவ்வை இல்லம்
  • டாக்டர் .எஸ். தருமாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் - இழவு வாரம்
  • மூவலூர் இராமமிர்தம் பிறந்த ஆண்டு - 1883


தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் தேவை! - DR .S. ராமதாஸ்

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் தேவை!
 - DR .S. ராமதாஸ் அறிக்கை
(பாமக நிறுவனர்)


ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80% உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பா.ம.க. இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். இத்தகைய சூழலில் தான் ஆந்திரத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று கர்நாடகம், குஜராத், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவை ஆண்டுக்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ள நிலையில், ஆந்திரத்தில் இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக 75% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது.

இந்த சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் ஆந்திர அரசு உறுதி செய்திருக்கிறது. வழக்கமாக இதுபோன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டால், திறமையானவர்கள் இல்லை என்று கூறி, அந்த பணியை நிர்வாகத்துக்கு நெருக்கமான வெளிமாநிலத்தவருக்கு வழங்குவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இத்தகைய ஏமாற்று வேலைக்கு ஆந்திர அரசின் சட்டம் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு பணிக்காக விண்ணப்பிக்கும் உள்மாநிலத்தவர் ஒருவருக்கு கல்வித்தகுதி இருந்து, திறமை/பயிற்சி இல்லையென்றால் அதைக் காரணம் காட்டி, அவருக்கு வேலைவாய்ப்பை நிராகரித்து விடக்கூடாது; மாறாக, அத்தகையோரை பணிக்கு தேர்ந்தெடுத்து, மாநில அரசுடன் இணைந்து பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வெளிமாநிலத்தவருக்கான 25% ஒதுக்கீட்டை விட கூடுதலாக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், ஆந்திர மாநில மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்ற கோணத்தில் இது சரியான நடவடிக்கையாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அவ்வாறு இருக்கும் போது தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகத் தான் மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும்.

ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதை மற்ற மாநில அரசுகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆந்திரம் செயல்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஆந்திர அரசின் செயல் பாராட்டத்தக்கது.

ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டு விட்டன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர்.

இப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்புக் குரல் - வைகோ அறிக்கை

என்.ஐ.ஏ. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தங்கள்
கண்டனத்துக்கு உரியவை
நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஆய்வுக்கு அனுப்புக!
- வைகோ அறிக்கை
(பொதுச்செயலாளர்,மதிமுக.)


இந்திய ஜனநாயக அமைப்புகளின் ஆணி வேர்களை அறுத்து வீசிவிட்டு மெல்ல மெல்ல பாசிச சர்வாதிகாரத்தைப் படற விடுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முனைப்பாக இருக்கின்றது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம், மத்திய அரசுக்கு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் ஏதேச்சாதிகாரத்திற்கு வழி வகுத்துள்ளது கண்டனத்துக்கு உரியது.

என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கானப் பட்டியலில் ஆள்கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், வெடி பொருட்கள் சட்டம் 1908ன் கீழ் வரும் குற்றங்கள், கள்ள நோட்டு அச்சிடுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. இனி தேசிய புலனாய்வு முகமைதான் இந்த குற்றச் செயல்களைப் பற்றி விசாரணை செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும். மேற்கண்ட குற்றங்களைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உள்ள சட்ட அதிகாரங்களைப் பறித்துவிட்டு, மாநில காவல்துறை தலைவருக்குக்கூட தகவல் கொடுக்காமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, இருப்பது மட்டுமல்ல, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பும்கூட இனி என்.ஐ.ஏ. கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

சிறுபான்மையினத்தவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்களைக் கடுமையாக ஒடுக்கவும், என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அபரிமிதமான அதிகாரத்தை அளிக்கிறது.

என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்புக் குரல் வலுப்பெற்று வரும் நிலையில், ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 இல் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க. அரசு.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவுகள் 13, 16 மற்றும் 27 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அழித்து ஒழிக்கும் வகையில் இருக்கின்றன.

மத்திய முதன்மை தகவல் ஆணையர்களாகவும், தகவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவோரின் ஊதியம் மற்றும் பணிக் காலம் நிர்ணயம் போன்றவற்றை மத்திய அரசே தீர்மானிக்கும் என்று சட்டத் திருத்தம் கூறுகிறது. இனி மத்திய அரசின் தயவில்தான் தகவல் ஆணையர்கள் பணியாற்ற வேண்டுமே தவிர, சுயேச்சையாகச் செயல்படுவதற்கு கடிவாளம் போடப்பட்டு இருக்கிறது.

மாநில தகவல் ஆணையர்களுக்கு ஊதியம் வழங்குதல் பதவிக் காலத்தை நிர்ணயத்தல் போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழி வகுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப் பறிக்கிறது.

இந்திய ஜனநாயக அமைப்பில் குடிமக்களுக்கு அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்வும், சீரிய முறையில் இயங்கிடச் செய்யவும் வாய்ப்பு அளித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பா.ஜ.க. அரசு நீர்த்துப்போகச் செய்திருப்பதும், கேள்வி கேட்பாரின்றி சர்வாதிகார ஆட்சி நடத்த முயற்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் ஆய்வுக் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வரலாறு 9- வது பாட புத்தக குறிப்புகள்

வரலாறு 9- வது பாட புத்தக குறிப்புகள்

  • மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஹிப்போகிராட்டாஸ்
  • எகிப்து அரசர் ஏவ்வாறு அழைக்கப்படுகிறார் - பாரோ
  • சுமேரியன் நாட்காட்டி ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது - ஏழு 
  • வெடி மருந்தை கண்டுபிடித்தவர்கள் ?- சீனர்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2019

வரலாறு 8-வது பாட புத்தகம் குறிப்புகள்


வரலாறு 8-வது பாட புத்தகம்

  • ஹெர்ஷா யாருக்கு முன்னோடி என அழைக்கப்படுகிறார் - அக்பர்
  • எந்த அரசரின் அரண்மனையில் நீதிச் சங்கிலி கட்டப்பட்டுள்ளது - ஜஹாங்கீர் 
  • குரு அர்ஜீன் தேவ் எத்தனை யாவது சீக்கிய குரு ஆவார் - ஐந்தாவது
  • உமாயூன் என்றால் பொருள் - அதிர்ஷ்டசாலி

திங்கள், 22 ஜூலை, 2019

வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம்! தலைவர் கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம்! - மு.க.ஸ்டாலின்

”வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம்! தலைவர் கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம்!”

-  மு.க.ஸ்டாலின் கடிதம்.
( தலைவர், திமுக.)


முழுமையான வெற்றியை தி.மு.கழகமும் கூட்டணியும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு - பழிபோட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்.

தி.மு.கழகத்தைக் குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள

நடிகர் சூர்யாவின் மனிதாபிமான கல்வி அறப்பணிகள் புகழின் உச்சம்! - வைகோ பாராட்டு

கலைத்துறையில் ஒளிரும் நட்சத்திரம் நடிகர் சூர்யாவின்
மனிதாபிமான கல்வி அறப்பணிகள் புகழின் உச்சம்!

வைகோ பாராட்டு
(பொதுச்செயலாளர், மதிமுக.)

இந்திய நாட்டினுடைய பன்முகத் தன்மையைச் சிதைத்து, சமூக நீதிக்குக் கொள்ளி வைத்து, ஏழை எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்காரக் குரல் எழுந்தது.

சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத் துரோக வழக்குகளின் பணிச் சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது என் மனதைக் காயப்படுத்துகிறது.

நடிகர் சூர்யாவின் விளக்கத்தைப் பத்திரிகைகளில் படித்தபோது, அவரது மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித் திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் ‘அகரம் பவுண்டேசனி’ல் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.

தமிழ் எழுத்துக்களில் முதல் உயிர் எழுத்தைக் கொண்டுதான் “அகர முதல” என திருக்குறள் தொடங்குகிறது. திருவள்ளுவர் சொன்ன மனிதநேயக் கண்ணோட்டம் ‘அகரம் பவுண்டேசனி’ல் பிரகாசிக்கிறது. அதில் மூன்றாயிரம் மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். பொறியியல், கலை அறிவியல், மருத்துவத் துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அகரத்தின் மூலமாக ஏற்றம் பெற்றனர். 90 விழுக்காடு முதல் தலைமுறைப் பட்டதாரிகள். கிராமங்களுக்கு தேடிச் சென்று அகரம் நிறுவனம் இந்த உன்னதத் தொண்டைச் செய்கிறது. பெற்றோரை இழந்த ஒரு மாணவியை மருத்துவராக்கி, கல் உடைக்கும் தொழிலாளியின் மகனை, ஆடு மேய்க்கும் பெற்றோரின் மகனை மருத்துவர்களாக்கி இருக்கிறது அகரம் நிறுவனம். ‘நீட்’ தேர்வு இருந்திருந்தால் இவர்கள் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது.

தியாக சீலர் காமராசர் தமிழ்நாட்டில் கல்விக் கண்களைத் திறந்தார். புதிய கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது. நடிகர் சூர்யாவின் தந்தை குணச்சித்திர நடிகரான சிவக்குமார் கலைத் துறையில் ஒழுக்கமானவர். நிகரற்ற இலக்கியச் சொற்பொழிவாளர். அவரது புதல்வர்கள் சூர்யாவும், கார்த்திக்கும் தந்தையைப் போலவே தனி மனித ஒழுக்கம் கொண்டவர்கள். அகந்தையும், ஆணவமும் அறவே இல்லாதவர்கள்.

நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. “இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்” என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சினையில் நடந்துள்ளது.

அகரம் நிறுவனம் மூலம் செய்த பணிகளை அவர் விளம்பரப்படுத்திக்கொண்டது இல்லை. பிறர் அறியமாட்டார்கள். அந்த உயர்ந்த சேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். போற்றுதலுக்குரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ்ச் சமூகத்திற்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் எனப் பாராட்டுகிறேன்.


ஞாயிறு, 21 ஜூலை, 2019

வரலாறு 7 வது பாட புத்தக குறிப்புகள்


  • முதலாம் நரசிம்ம வர்மனின் பட்டபெயர் - வாதாபி கொண்டான்
  • காவேரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டியவர்- ரிகால சோழன்
  • முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய மன்னரை தோற்கடித்ததால்

சனி, 20 ஜூலை, 2019

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் - மதிமுக தீர்மானம்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 20.07.2019 சனிக்கிழமை, காலை சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வெள்ளி, 19 ஜூலை, 2019

கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும் - மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விவாதம்.

’கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும்’
”22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது; 9 பெரியதா – 13 பெரியதா?”
”அதிமுகவின் 12 தொகுதிகளை வென்றது திமுகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது”

-  மு.க.ஸ்டாலின் .
(தலைவர், திமுக.)

நேற்றைய முன் தினம் மத்திய அமைச்சரவையில் தேசிய எக்ஸிட் தேர்வு குறித்து ஒரு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுகுறித்து சில விளக்கங்களை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நான் பெற விரும்புகின்றேன்.

தமிழக அரசு பள்ளிகளின் வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு ‘இந்தி’ திணிப்பு! - வைகோ

தமிழக அரசு பள்ளிகளின்
வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு ‘இந்தி’ திணிப்பு!

- வைகோ கண்டனம்
(பொதுச்செயலாளர், மதிமுக.) 

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணை போய்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு

வியாழன், 18 ஜூலை, 2019

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் திமுக-வின் நிலைப்பாடு - ஆ.இராசா விளக்கம்

"தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் திமுக-வின் நிலைப்பாடு!"

-  ஆ.இராசா எம்.பி., விளக்கம்.
( நாடாளுமன்ற திமுக கொறடா )


15.7.2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தை தி.மு.க ஆதரித்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசியலுக்காக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

தி.மு.கழகம் சிறுபான்மை மக்களின் நலனிலும் உரிமைகளை பாதுகாப்பதிலும்

மத்திய அரசுக்கு மித மிஞ்சிய அதிகாரம் வழங்கப்படுகிறது. - வைகோ

எதேச்சாதிகாரத்திற்கு வழிவகுக்கும்
‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை கைவிடுக!

 - வைகோ MP வலியுறுத்தல்
(மதிமுக பொதுச்செயலாளர்)


இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 இல் மாற்றம் கொண்டுவந்து, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவு 2017 இல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்தவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற உரிமம் பெறுவதற்கு

100 தீர்ப்புகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. - DR.S. ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக 
தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(பாமக நிறுவனர்)

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 100 தீர்ப்புகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று, ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்கள் தங்களின் வழக்கு குறித்த விவரங்களை தாங்களே படித்து தெரிந்து கொள்ள வசதியாக, ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாநில மொழியிலும் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. முதற்கட்டமாக ஆந்திரா, அஸ்ஸாம். சத்தீஸ்கர், தில்லி, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மராட்டியம், ஒதிஷா, திரிபுரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய 12 மாநிலங்களைச் சேர்ந்த 100 வழக்குகளின் தீர்ப்புகள் தெலுங்கு, அஸ்ஸாமி, இந்தி, மராத்தி, ஒரியா, வங்காளம், இந்தி ஆகிய 7 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் சார்பில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்ட செய்தியில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு, அஸ்ஸாம் ஆகிய 5 மொழிகளிள் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வழக்குகள் மொழியாக்கம் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் தமிழ் இல்லாதது குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப் படவுள்ள முதற்கட்ட மாநில மொழிகள் பட்டியலில் தமிழும் சேர்க்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

இதனால் தமிழ் மொழியிலும் முதல் கட்டத்திலேயே தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் தீர்ப்புகள் வெளியாகாதது மிகவும் வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் முதலில் அறிவிக்கப்பட்ட 5 மொழிகள் பட்டியலில் இடம் பெறாத மராட்டியம், வங்காளம் ஆகிய மொழிகளில் கூட தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக முதல் கட்டத்திலேயே தமிழ் மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே உறுதியளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதன்படி நடக்காதது தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவதென தலைமை நீதிபதி முடிவெடுத்தது உண்மையாகவே புரட்சிகரமான நடவடிக்கை ஆகும். அதற்காக தலைமை நீதிபதியை எவ்வளவு பாராடினாலும் தகும். அதேநேரத்தில் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதில் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், உச்சநீதிமன்றத்திற்கு அதிக வழக்குகளை அனுப்பும் மாநிலத்தின் மொழியானதுமான தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்ட மொழிபெயர்ப்பு தீர்ப்புகளில் தமிழ் இடம் பெறாத நிலையில், தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

புதன், 17 ஜூலை, 2019

ஹைட்ரோகார்பன் அனுமதியை உடனடியாக மத்தய அரசு ரத்து செய்ய வேண்டும். - தொல்.திருமாவளவன்

விவசாயம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன் குறித்து 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. 


விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நமது அரசு முக்கியத்துவம் அளித்திருப்பதாக தெரியவில்லை. தொழில் வளர்ச்சியே இந்த தேசத்தின் வளர்ச்சி என்கிற தவறான எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதனால்

எடப்பாடி பழனிச்சாமியின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கூண்டில் நிறுத்த வேண்டும் - வைகோ

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை,  செய்தியாளர்களிடம் கூறியதாவது, இரண்டு செய்திகளை உங்கள் மூலமாக இந்தியா முழுவதும் தெரிவிக்க விரும்புகின்றேன்.



முதலாவது பிரச்சினை:

அலைபேசிகள் பல குற்றங்களுக்கும், பல கலவரங்களுக்கும், பல பெண்களின் வாழ்வுச் சீரழிவுக்கும் காரணமாகவும் இருந்திருக்கின்றது என்பதால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அலைபேசி (மொபைல் போன்) உபயோகிக்கக் கூடாது