புதன், 3 ஜூன், 2020

விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் குறித்த அவசரச் சட்டம், 2020' -க்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்


வணிக உதவியாளர்கள், குழு சேர்ப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பு.

`விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் குறித்த அவசரச் சட்டம், 2020' -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பின்னணி

சிறு சிறு நில உரிமையாளர்கள் இருப்பதால் இந்திய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலையைச் சார்ந்திருத்தல், உற்பத்தியில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஊகிக்க முடியாத மார்க்கெட் நிலவரம் போன்ற பலவீனங்கள் உள்ளன. இதனால் இடுபொருள்,  விளைச்சல் மேலாண்மையில் பாதிப்பை ஏற்படுத்தி, வேளாண்மையை ஆபத்து நிறைந்ததாக ஆக்கியுள்ளது.

பயன்கள்

சுரண்டல் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், சம போட்டி நிலையில்,  வணிக உதவியாளர்கள், குழு சேர்ப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. வசதி ஏற்படுத்துபவருக்கு விவசாயிகள் கொடுக்கும் விலையில் நிச்சயமற்ற நிலை ஆபத்தை இது மாற்றும். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் நல்ல இடுபொருள்கள் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விற்பனை செய்வதற்கான செலவை இது குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்.

இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில் வழங்குவதற்கான சங்கிலித் தொடர் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான தூண்டுகோலாக இந்த அவசரச் சட்டம் இருக்கும். உயர் மதிப்பு வேளாண்மைக்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகள் பெறுவர். அதுபோன்ற வேளாண் பொருள்களுக்கான சந்தையை உருவாக்க முடியும்.

விவசாயிகள் நேரடி மார்க்கெட்டிங் செய்ய முடியும். அதனால் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள். இதனால் விற்கும் விலை முழுவதும் விவசாயிகளுக்கே கிடைக்கும். விவசாயிகளுக்குப் போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. குறைகளை நிவர்த்தி செய்ய தெளிவான காலக்கெடு நிர்ணயித்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு செயல் திறன்மிக்க நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 விவசாயிகள் நலனில் அரசு உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது

வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு உத்வேகம் அளிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் கடன் அட்டை மூலம் சலுகைகளுடன் கூடிய கடன் வசதி, வேளாண் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வசதி, பிரதமரின மத்ஸ்ய சம்பட யோஜ்னா மற்றும் மீன்வளத்தைப் பலப்படுத்த பிற நடவடிக்கைகள், கோமாரி மற்றும் கன்றுவீச்சு தடுப்பூசி, மூலிகை சாகுபடி ஊக்குவிப்பு, தேனீ வளர்ப்பு ஊக்குவிப்பு, பசுமைச் செயல்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பிரதமரின் கிசான் திட்டம் மூலம் 9.25 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. முடக்கநிலை அமல் காலத்தில் இதுவரையில் ரூ.18,517 கோடி இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. பிரதமரின் பசல் பீமா திட்டத்தின் கீழ் ரூ.6003.6 கோடி அளவுக்கான கேட்புரிமைகளுக்கு முடக்கநிலை காலத்தில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மிக சமீப காலத்தில் மேற்கொண்ட சில நடவடிக்கைகளாக மட்டுமே இவை உள்ளன. கடினமாக உழைக்கும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதன் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுபவையாக இவை உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக