புதன், 3 ஜூன், 2020

நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டும் பாலங்கள் (MORTH) மற்றும் எஃகு பாலங்கள் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் தேவைகள் குறித்து திரு.தர்மேந்திர பிரதான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.


எஃகு தயாரிப்பாளர்களுடன் திரு.தர்மேந்திர பிரதான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பிலாய் எஃகு ஆலையைச் சுற்றி, எஃகு தயாரிப்புத் தொகுப்பை மேம்படுத்த விரிவான திட்டம் வகுப்பது பற்றி, எஃகுத்துறை அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ரயிலவேத்தறை அமைச்சம், இன்ஸ்டாக் (எஃகு மேம்பாட்டு வளர்ச்சி மையம்), இந்திய எஃகு ஆணையம் (SAIL) அதிகாரிகள் மற்றும் பிலாய் எஃகு தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் நேற்று காணொளிக் காட்சி மூலம் நடத்திய கூட்டத்துக்கு மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியம், இயற்கை வாயுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். எஃகு பாலம் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் தேவைகள் குறித்து இந்தக் கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டன.

எஃகு தயாரிப்புத் தொகுப்பை உருவாக்குவது, இப்பகுதியில் சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறைக்கு ஊக்கமளித்து, வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இது மாண்புமிகு பிரதமர் அழைப்பு விடுத்த சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு வழிவகுக்கும்.

துர்க் மாவட்டத்தில் உள்ள எஃகு தயாரிப்பாளர்களின் தேவை முழுவதையும் உறுதி செய்யவும், இந்தக் கொள்முதலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் அதை அகற்றவும், பிலாய் எஃகு ஆலை தலைமை நிர்வாக அதிகாரிக்கு திரு.தரமேந்திர பிரதான் உத்தரவிட்டார். 

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டும் பாலங்கள் (MORTH) மற்றும் எஃகு பாலங்களை அதிகம் பயன்படுத்தும் ரயில்வே துறையில்,  எஃகு பயன்பாட்டை அதிகரிக்கும் யுக்தி குறித்தும் அமைச்சர் ஆலோசித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக