வியாழன், 3 ஜூன், 2021

உதம்பூர்-கத்துவா-தோடா மக்களவைத் தொகுதிக்கு வாங்கப்படும் ரூபாய் 2.5 கோடி மதிப்பிலான கொவிட் நிவாரணப் பொருட்களின் கொள்முதலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார்


 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தாம் ஒதுக்கியுள்ள பணத்திலிருந்து தமது உதம்பூர்-கத்துவா-தோடா மக்களவைத் தொகுதிக்கு வாங்கப்படும் ரூபாய் 2.5 கோடி மதிப்பிலான கொவிட் நிவாரணப் பொருட்களின் கொள்முதலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார்

தமது தொகுதியின் கீழ் வரும் ஆறு மாவட்டங்களான உதம்பூர், கத்துவா, தோடா, ரியாசி, ரம்பான் மற்றும் கிஷ்டுவார் ஆகியவற்றின் மாவட்ட வளர்ச்சி ஆணையர்களுடன் நடைபெற்ற விரிவான கூட்டத்தில், கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார். இப்பொருட்கள் மேற்கண்ட 6 மாவட்டங்கள் மற்றும் அவரது தொகுதியின் கீழ் வரும் சம்பா மாவட்டத்தின் இரண்டு வட்டங்களில் உள்ள கொரோனா தொடர்பான மையங்களில் விநியோகிக்கப்படும்.

கொவிட் மேலாண்மை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தினசரி அறிக்கையை 6 மாவட்டங்களிடமிருந்து பெறுமாறு மைய அதிகாரியான கத்துவா துணை ஆணையரை அறிவுறுத்திய அமைச்சர், அதை தமது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இப்பகுதியில் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது நிம்மதி அளிப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிவாரண பொருட்களை வாங்குவதற்காக ரூபாய் 2.1 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், பொருட்களின் விநியோகம் தாமதம் ஏதுமின்றி நடைபெறும் என்றும் அமைச்சரிடம் இந்த கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக