வியாழன், 3 ஜூன், 2021

இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக், ஜூன் 3 அன்று வெளியிடவுள்ளது


 இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக், ஜூன் 3 அன்று வெளியிடவுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  முதன்முதலில் வெளியிடப்பட்ட குறியீடு,  நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய சாதனமாக விளங்குகிறது. சர்வதேச இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வரிசைபடுத்தப்படுவதால், அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையும் எழுகிறது.

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகையை வெளியிடுவார்.

நிதி ஆயோக்கால் வடிவமைத்து, உருவாக்கப்படும் இந்தக் குறியீடு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்; ஐக்கிய நாடுகளால் வழிநடத்தப்படும் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் முகமைகள், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் முக்கிய மத்திய அமைச்சகங்கள் முதலிய பங்குதாரர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்படும் இந்தக் குறியீடு, சர்வதேச இலக்குகளை அடைவதை நோக்கிய நாட்டின் பயணத்தில் தேசிய மற்றும் அது சார்ந்த அளவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மதிப்பீடு செய்வதுடன், நிலைத்தன்மை, நெகிழ் தன்மை மற்றும் கூட்டு முயற்சியை எடுத்துரைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. 2030-ஆம் ஆண்டில் எட்ட வேண்டிய இலக்குகளுள் மூன்றில் ஒரு பங்கை அடைய வேண்டியுள்ள நிலையில், இந்தக் குறியீட்டு அறிக்கையின் பதிப்பு, கூட்டாண்மையின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தப்படுவதால், “இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை: 10 ஆண்டுகால செயலின் கூட்டாண்மை” என்று இதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக