புதன், 9 ஜூன், 2021

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை திட்டங்கள் குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் ஆய்வு கூட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை திட்டங்கள் குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் ஆய்வு கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் மாண்புமிகு அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 8.6.2021 அன்று பிற்படுத்தப்பட்டோர், அமைச்சர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள். காலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் திரு.சி.காமராஜ், இ.ஆ.ப., அவர்களும் மாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் திரு. மா.மதிவாணன், இ.ஆ.ப., அவர்களும் முன்னிலை வகித்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநருடன் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளின் செயல்பாடுகள், துறையின் திட்டங்களின் முன்னேற்றம் காலிப்பணியிடங்களை குறித்தும், விடுதிகளில் குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல் குறித்தும், மைய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள், மிதிவண்டிகள் வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்தும் சிறு குறு விவசாயிகளுக்கு மான்யம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டம் குறித்தும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயக்குநருடன் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், மிபிவ / சீம நல விடுதிகள் செயல்பாடுகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மைய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள், பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம், இலவச தையல் இயந்திரங்கள் / தேய்ப்பு பெட்டிகள் வழங்குதல் குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல் குறித்தும், நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நலவாரியங்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் வாரியம், தமிழ்நாடு சாதிவாரி அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவர சேகரிப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள உறுதிமொழிகளை சிறப்பான முறையில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக