வியாழன், 15 ஜூலை, 2021

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே வலுவான பிணைப்பை இந்த மாநாட்டு மையம் காட்டுகிறது.- பிரதமர் திரு நரேந்திர மோடி



 வாரணாசியில் ருத்ராக்‌ஷ்  என்ற சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.  பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட தாய், சேய் சுகாதார பிரிவை அவர் பார்வையிட்டார். கொவிட் தயார்நிலை குறித்து ஆராய அவர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களையும் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  கொவிட் தொற்று இருந்தபோதிலும், காசியில் வளர்ச்சி பணியின் வேகம் அப்படியே உள்ளது என்றார்.  படைப்பாற்றல் மற்றும் ஆற்றலின் விளைவாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் - ருத்ராக்‌ஷ் உள்ளது என பிரதமர் கூறினார்.  இந்த மையம் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலுவான இணைப்பை காட்டுகிறது என அவர் கூறினார்.  இந்த மாநாட்டு மையம் கட்ட உதவுவதில் ஜப்பானின் முயற்சியை அவர் பாராட்டினார்.

இந்த திட்டம் தொடங்கியபோது, திரு சுகா யோஷிஹைடே , அமைச்சரவையில்  தலைமை அமைச்சராக இருந்ததாகவும், பின்னர் அவர் பிரதமர் ஆனார் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.  அவர் பிரதமர் ஆகும் வரை, இத்திட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்தினார் எனவும், இந்தியா மீதான அவரது உறவுக்கு, ஒவ்வொரு இந்தியரும் நன்றியுடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியுடன், ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.  ஜப்பான் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபே, காசி வந்தபோது, ருத்ராக்‌ஷ் குறித்து ஆலோசனை நடத்தியதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.  இந்த கட்டிடம்  நவீனம் மற்றும் கலாச்சார பொலிவுடன் உள்ளதாகவும், இந்தியா-ஜப்பான் பிணைப்பு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகவும்,  பிரதமர் கூறினார்.  தான் ஜப்பான் பயணம் மேற்கொண்டதில் இருந்து  இது போன்ற மக்கள் இடையேயான உறவுகள் திட்டமிடப்பட்டதாகவும், ருத்ராக்‌ஷ் மற்றும் அகமதாபாத்தில் ஜென் பூங்கா போன்றவை இந்த உறவின் அடையாளமாக உள்ளன எனவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

யுக்தி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்பதற்காக, ஜப்பானை பிரதமர் பாராட்டினார். ஜப்பானுடனான இந்தியாவின் நட்பு இயற்கையான கூட்டுறவாக கருதப்படுகிறது. நமது வளர்ச்சி நமது அழகுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை  இந்தியா மற்றும் ஜப்பானின் கருத்தாக உள்ளது. இந்த வளர்ச்சி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும், அனைவருக்கும் இருக்க வேண்டும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பாட்டுகள், இசை மற்றும் கலை ஆகியவை பனாரஸின் நரம்புகளில் ஓடுகின்றன.  கங்கையின் படித்துறைகளில் பல கலைகள் உருவாகியுள்ளன.  அறிவு மாநாடு வரை சென்றுள்ளது. மனிதநேயம் தொடர்பான சீரிய சிந்தனைகள் ஏற்பட்டுள்ளன.  இதன் காரணமாகத்தான், பனாரஸ் இசை, மதம், உணர்வு, அறிவு மற்றும் அறிவியலின் மிகப் பெரிய உலகளாவிய மையமாக மாறியுள்ளது.  இந்த மையம் கலாச்சார மையமாகவும், பல மக்களை இணைக்கும் வழியாகவும் உள்ளது.  இந்த மையத்தை காக்க வேண்டும் என காசி மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் காசி, பல வளர்ச்சி திட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ருத்ராக்‌ஷா இல்லாமல் இந்த அலங்கரிப்பு எப்படி நிறைவடைய முடியும்? என பிரதமர் கூறினார்.  தற்போது உண்மையான சிவனாக  இருக்கும் இந்த காசி, ருத்ராக்‌ஷாவை அணித்துள்ளது, காசியின் வளர்ச்சி மேலும் ஜொலிக்கும், காசியின் அழகு மேலும் அதிகரிக்கும் என பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக