புதன், 6 அக்டோபர், 2021

ஏழைகளுக்கான நிதி சரியாக சென்றடைய வேண்டும். நிர்வாகத்தில் தாய்மொழியை பயன்படுத்த வேண்டும்.- திரு எம். வெங்கையா நாயுடு


 வடகிழக்கு பகுதியின் வளர்ச்சி இல்லாமல், இந்தியாவின் வளர்ச்சி முழுமையற்றது என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

மணிப்பூர் இம்பாலில், உயிரியல் வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IBSD) ஏற்பாடு செய்த ‘இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் உயிரியல் ஆதாரங்களிலிருந்து உயிரி பொருளாதாரம்’ பற்றிய தேசிய கருத்தரங்கில் குடியரசு துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் உருவாக்கத்தில், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நாட்டின் எதிர்காலம் விஞ்ஞானிகளின் கையில்தான் உள்ளது. இந்தியாவை மீண்டும் விஷ்வகுருவாக மாற்ற ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். விவேகமான சிந்தனை மற்றும் அறிவியல் மனநிலை முற்போக்கான நாட்டின் அடித்தளம். இந்தியாவை வேகமாக முன்னேற்றத் தேவையான கல்வி, பயிற்சி அனைத்தும் விஞ்ஞானிகளிடம் உள்ளது.

வடகிழக்கு பகுதியின் வளர்ச்சி இல்லாமல், இந்தியாவின் வளர்ச்சி முழுமையற்றது. வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அனைத்து மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். வளர்ச்சிக்கு அமைதி முக்கியம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் எந்த சமரசமும் இருக்க முடியாது.

ஏழைகளுக்கான நிதி சரியாக சென்றடைய வேண்டும். நிர்வாகத்தில் தாய்மொழியை பயன்படுத்த வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் குறித்த தகவலை, கிராம மக்களுக்கு உள்ளூர் மொழியில் அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக