சனி, 9 அக்டோபர், 2021

சர்வதேச தபால் தினத்தன்று உலகளாவிய அஞ்சல் சங்கம் மற்றும் அஞ்சல் குடும்பத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வாழ்த்தினார்.


 1874-ல் உலகளாவிய அஞ்சல் சங்கம் நிறுவப்பட்டதை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை, வணிகங்கள், நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தபால் துறை ஆற்றும் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டின் உலக தபால் தினத்தின் கருப்பொருள் ‘புத்தாக்கத்திற்கு புதுமைகளை புகுத்து’ என்பது ஆகும். உலக தபால் தினமான இன்று, கொவிட் பெருந்தொற்றின் சவாலான காலங்களில் பொதுமக்களுக்கு சேவையாற்றிய அஞ்சல் துறை பணியாளர்களின் பெருமதிப்பு மிக்க பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம்.

"பரந்த அஞ்சல் நெட்வொர்க்- பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான அஞ்சல் அலுவலகங்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களை இணைத்து நமது சமுதாயத்துடன் பிணைந்துள்ளது,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரெஸ் கூறினார்.

சர்வதேச தபால் தினத்தையொட்டி, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர், திரு அஸ்வினி வைஷ்ணவ், உலகளாவிய அஞ்சல் சங்கம் மற்றும் அஞ்சல் குடும்பத்தினருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தபால் துறையின் சமூக பங்களிப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக