செவ்வாய், 12 அக்டோபர், 2021

சிறப்பான செயல்பாட்டிற்காக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது: குடியரசு துணைத்தலைவர் வழங்கினார்


 சிறப்பான செயல்பாட்டிற்காக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு இன்று புகழாரம் சூட்டினார். பொது வாழ்வில் அவரது தனிச் சிறப்பான செயல்பாடுகள் ஈடு இணையற்றது என அவர் கூறினார்.

எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு 22-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் திரு எம் வெங்கய்யா நாயுடு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் லால் பகதூர் சாஸ்திரி தனது செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இது பொது வாழ்வில் மிக அரிய குணம் என்றார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்ததையும் அதை ஏற்றுக் கொள்ளும்படி அவர் வற்புறுத்தியதையும் குடியரசு துணைத்தலைவர் நினைவு கூர்ந்தார்.

தனது குறுகிய கால பிரதமர் பதவியில் சில திடமான முடிவுகளை லால் பகதூர் சாஸ்திரி எடுத்தார். உணவுப் பொருட்களை இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் தற்சார்பு நிலையை ஊக்குவித்தார்.

லால் பகதூர் சாஸ்திரியின் தைரியமான தலைமை வரலாற்றையும், சர்வதேச சமுதாயத்தையும் மாற்றியது, சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக புதிய பாரதத்தின் பிரகாசத்தைக் கண்டது என குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

சமீபத்தில் கொவிட் பெருந்தொற்றுக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் டாக்டர் ரன்தீப் குலேரியா முக்கிய பங்காற்றினார் என திரு வெங்கய்யா நாயுடு கூறினார்.

நம் எல்லோருக்கும் அவர் உறுதி அளித்ததோடு மட்டுமல்லாமல் கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் தனது பேச்சு மூலம் டாக்டர் ரன்தீப் குலேரியா போக்கினார் என குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம் இன்றி பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு அவர் ராணுவத் தளபதி போல் வழிகாட்டினார் என குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

நாட்டின் இளைஞர்களிடையே திரு லால் பகதூர் சாஸ்திரியின் மரபை பரப்புவதற்காக திரு அனில் சாஸ்திரி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் நிர்வாகத்தையும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக