ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நமது வரலாறு சார்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பற்றிய விளையாட்டுகளை உருவாக்க வேண்டும்.- பிரதமர் நரேந்திர மோடி


உள்ளூர் விளையாட்டுப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் நேரமிது என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

புதிய விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கச் செய்வது மற்றும் பொம்மை தயாரிப்பின் பெரிய மையமாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்பது குறித்து காந்தி நகரில் உள்ள குழந்தைகள் பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் அமைச்சகம், கல்வி அமைச்சகம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றோடு நடந்த தனது உரையாடல்களைக் குறித்து மனதின் குரலின் புதிய உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். விளையாட்டுப் பொருள்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் நமது ஆசைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுப் பொருள்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன என்று அவர் கூறினார்.

வகுப்பாசிரியர்கள் போன்று, ஊட்டச்சத்துக் கண்காணிப்பாளர்கள் தேவை; மதிப்பெண் அட்டை போல, ஊட்டச்சத்து விவர அட்டை உருவாக்கப்பட வேண்டும்.- திரு.நரேந்திர மோடி


வகுப்பாசிரியர்கள் போன்று, ஊட்டச்சத்துக் கண்காணிப்பாளர்கள் தேவை; மதிப்பெண் அட்டை போல, ஊட்டச்சத்து விவர அட்டை உருவாக்கப்பட வேண்டும் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைபிடிக்கப்பட இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.    தேசமும், ஊட்டச்சத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை என்றும் அவர் குறிப்பிட்டார்.   நாம் உட்கொள்ளும் உணவும், நமது மனநலம்  மற்றும் அறிவுசார் மேம்பாடும் நேரடியாக தொடர்புகொண்டவை என்பதைக் குறிக்கும் விதமாக,  எத்தகைய உணவு உட்கொள்கிறோமோ அதற்கேற்ற மனநிலை தான் உருவாகும் என்ற பழமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய GST வருவாய் பங்கை அளிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லுவதற்கு ஒரு மத்திய அரசு தேவையா ? - கி.வீரமணி


 மாநில அரசுகளின் சம்பந்தமேயின்றி கல்வியை மத்திய அரசுக்கே உரிய பட்டியல் என்பதுபோல் மத்திய அரசு நடந்துகொள்ளலாமா?

மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் பங்கை அளிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லுவதற்கு ஒரு மத்திய அரசு தேவையா?

மாநில அரசை ‘திருவோடு’ ஏந்த செய்யும்

இந்த யோசனை கைவிடப்படவேண்டும்! - கி.வீரமணி

மத்தியில் ஆளும் பா.ஜ.க. பிரதமர் மோடி தலைமையிலான அரசு - தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை மும்முரமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக நிறைவேற்றி வருகிறது!

தமிழக அரசு உடனடியாக கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். - கே.பாலகிருஷ்ணன்

 வட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து மரணம் அனைத்து கடன் வசூலையும் ஒத்தி வைப்பதுடன், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று (29.8.2020)  தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. 

தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்


 "தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்.

“வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் - வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் - குறிப்பாக, சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது.

சனி, 29 ஆகஸ்ட், 2020

கிராமங்களில் நடுநிலைக் கல்வி நிலையிலேயே வேளாண்மையை ஒரு பாடமாக அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


ஜான்சியில் அமைந்துள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

“தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை” முதலமைச்சர் திரு. பழனிசாமி கை கழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.- மு.க.ஸ்டாலின்


 தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்;

கேம்பஸ் இண்டர்வியூவில் வழங்கிய வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்த வேண்டும்" -  மு.க.ஸ்டாலின் 

“இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்று 26.8.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது. - DR.அன்புமணி ராமதாஸ்

 புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது.- DR.S.ராமதாஸ்

 அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்து வரும் நிலையில், மாணவர்களிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சரே எச்சரித்தப் பிறகும் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்



விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் த.மா.கா கோரிக்கை.

இயற்கையின் கருணையால் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து மேட்டூர் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவில் உயந்துள்ளது,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இதனால் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது விவசாயிகள் அனைவரும் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். 

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்! புதிய பட்டியலை உருவாக்குங்கள்!! உண்மையான சமூகநீதி மலரட்டும்!!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


ஊடகச் செய்திகளை வைத்து ஊளையிடும் திராவிட மனுவாதிகளே.!!
வழங்கப்படாத தீர்ப்புக்கு, வாழ்த்துக்களும் வரவேற்புகளுமா?

            பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் கூறுகளாக்கி வழங்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்கள் தொடர்ந்த வழக்குகளில் 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்று முடிவான தீர்ப்பு எதுவும் சொல்லாமல் அவ்வழக்கைப் பெரிய அமர்வுக்கு மாற்றிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து  தீர்ப்பளித்துள்ளது. 

புதன், 26 ஆகஸ்ட், 2020

பொது முடக்கத்தை நீக்குங்கள்; போக்குவரத்துத் தடையை விலக்குங்கள்! - வைகோ அறிக்கை

 பொது முடக்கத்தை நீக்குங்கள்;

போக்குவரத்துத் தடையை விலக்குங்கள்! - வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது.

வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. பழனிசாமி மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்? - மு.க.ஸ்டாலின்



நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களின் கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள்! -DR. அன்புமணி ராமதாஸ்



தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு  வசதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே நடத்தப்படாதது மிகவும்  ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி கனவு, கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு உதாரணமாகிவிடாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

இந்தியாவின் பன்மொழி கலாச்சாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிகழ்வுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டே உள்ளன! - கி.வீரமணி

மத்திய சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட நேச்சுரோபதி யோகா பயிற்சிகள் அனைத்தும் ஹிந்தியில் நடத்தப்பட்டது சரியானதுதானா?

தமிழகப் பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் கூறும்படி கோரிக்கை வைத்ததை மத்திய அரசுச் செயலாளர் புறக்கணித்தது ஆணவமே!

ஹிந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம் மிகவும் கண்டிக்கத்தக்கது! - கி.வீரமணி

மத்திய சுகாதாரத் துறை ‘‘ஆயுஷ்’’ அமைச்சகத் துறை சார்பில் நேச்சுரோபதி மற்றும் யோகாபற்றிய பயிற்சிக்கான காணொலி நிகழ்ச்சியில் பயிற்சி பெறுவதற்காக கலந்து கொண்ட தமிழ்நாட்டு பிரதிநிதிகளான 37 பேரும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அது என்னவென்றால், நிகழ்ச்சிகளில் கேள்வி - பதில் முதல்  பலவும் பெரிதும் ஹிந்தி மொழியிலேயே நடைபெற்றன.

தமிழர்களின் கோரிக்கை புறக்கணிப்பு! பங்கேற்ற தமிழ்நாடு உறுப்பினர்களுக்குத் திகைப்புதான் ஏற்பட்டது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பாதுகாப்பு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் தொழில்துறைகளை ஆதரிப்பதோடு, “சுயசார்பு பாரதத்திற்கு” பெரிய அளவில் பங்களிக்க உதவும்.- ராஜ்நாத் சிங்


 "சுயசார்பு பாரதம்" லட்சியத்தை அடைவதற்குத் தொழில் வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான 108 அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) அடையாளம் காட்டுகிறது.

எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலைத் தயாரிப்பது என்பது விரைவில் சாத்தியமாக உள்ளது.

புதைபடிவ எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள மிக நீண்ட கடல்சார் சூழ்நிலையில் காணப்படும் நுண்பாசியில் இருந்து எரிபொருளை முழு அளவில் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.  கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலைத் தயாரிப்பது என்பது விரைவில் சாத்தியமாக உள்ளது.  பயோடீசல் உற்பத்திக்காக நுண்பாசியில் கொழுமியம் சேகரிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக உயிர்தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஒரு விஞ்ஞானியின் முயற்சியால் இது சாத்தியமாக இருக்கிறது.

மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது

 மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது

மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019இன் (2019இன் 40 வது சட்டம்) பிரிவு 16இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 21 ஆகஸ்ட் 2020 தேதியிட்ட அறிவிக்கையின்படி மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது. மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.  அதேபோன்று சமூக நீதி, அதிகாரம் அளித்தல் இணையமைச்சர் துணைத்தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பாஜக - தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி.- மு.க.ஸ்டாலின்

 "ஆட்சியதிகார ஆணவத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பாஜக - தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி" - மு.க.ஸ்டாலின்  கண்டனம்.

தமிழக பா.ஜ.க.,வின் செயற்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள், தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

14 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் இப்போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது. - டாக்டர் K. கிருஷ்ணசாமி


 பணி நிரந்தரம் - அரசு ஊழியர்களாக்கப் போராடும் டாஸ்மாக் ஊழியர்கள்! ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சி!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும். எனவே, மதுவிலக்கை அமல்படுத்த எல்லாவிதமான பிரச்சாரங்களையும் தொடர்ந்து செய்து வருகிறோம். எனினும் தமிழகத்தில் 20 வருடங்களாக அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

என் மகள் ரசித்த களிமண்ணில் செய்த பிள்ளையார் சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். - உதயநிதி ஸ்டாலின்


மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் செய்தி


"விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் செய்தி"

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளில் (20.8.2020), அவருக்கு நாம் அனைவரும் இணைந்து செலுத்தும் வீரவணக்கம்; இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தீரர்களின்  தியாக வரலாற்றை, இன்றைய இளைய தலைமுறையினர்க்கு  எடுத்துரைக்கும் ஏற்றமிகு நிகழ்வாகும். 

மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் OBC இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்


மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் OBC இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான பணி நியமனங்களில் பிற  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக கடைபிடிக்கப்படவில்லை என்று வெளியாகி உள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு பணி நியமனங்களில் ஓபிசிகளுக்கு  தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை இந்த செய்தி உறுதி செய்துள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

திரைப்படத் தயாரிப்புக்கான தர நிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்

 

திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்படத் தயாரிப்புகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் உள்ள சூழ்நிலையில், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி, தொடரும் போது, திரைப்படத் தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு துறையினரும், நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹிந்தி நாட்டவர் ராஜேஷ் கோட்சேவே! இந்தியாவை விட்டு வெளியேறுகிறீரா அல்லது இந்தியராகிய நாங்களே உம்மை வெளியேற்றவா? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!


உலக நாடுகள் சங்கத்தின் (Leauge of Nations) ‘ஒரு மொழி ஒரு நாடு’ என்ற நியதிப்படி, ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சே, ஹிந்தி பேசும் ஒரு தனி  நாட்டைச் சேர்ந்தவரே! 

அவர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, ஹிந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா? 

ஹிந்தி நாட்டவர் ராஜேஷ் கோட்சேவே! இந்தியாவை விட்டு வெளியேறுகிறீரா அல்லது இந்தியராகிய நாங்களே உம்மை வெளியேற்றவா?  - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி! 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கு எள் முனையளவும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியாக இருக்க முடியும்.- DR.S.ராமதாஸ்


 மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு 

மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

'கூவத்தூர் கூத்தின்' மூலம் முதலமைச்சரான திரு.பழனிசாமி - தன் சகாக்களுடன் இணைந்து 'ஊழல் கூத்தும், கொண்டாட்டமும்' நடத்தியே, தனது பதவிக்காலத்தைக் கழித்து விட்டார்.- மு.க.ஸ்டாலின்


 "தமிழகப் பொருளாதாரம் & தொழில் வளர்ச்சியை படுபாதாளத்தில் வீழ்த்திய  அதிமுக ஆட்சியில் - வேலையில்லா திண்டாட்டம் தேசிய சராசரியை விட இரட்டிப்பாகி, இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டது" -  மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 சதவீதமாக அதிகரித்து - தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாகி வரலாறு காணாத வகையில் வானுயரப் பறந்து கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 2019-லிருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து - நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.

சனி, 22 ஆகஸ்ட், 2020

ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா? -DR.S.ராமதாஸ்


 ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து 

தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா? -DR.S.ராமதாஸ்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்; மிரட்டியுள்ளார். அதிகார மமதையிலான இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

சுங்கக்கட்டண உயர்வும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். - DR. அன்புமணி ராமதாஸ்


 நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை 

ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம்  தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தி தெரியவில்லை என்றால் யோகா வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்: மத்திய ஆயுஷ் அதிகாரி மிரட்டல்! - வைகோ கண்டனம்

 

இந்தி தெரியவில்லை என்றால் யோகா வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்: மத்திய ஆயுஷ் அதிகாரி மிரட்டல்! - வைகோ கண்டனம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர்களை “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள். மேலும் கேள்வி கேட்டால் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திமிரோடும், மமதையோடும், ஆணவத்தோடும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே மிரட்டியுள்ளார்.

கூவத்தூரில் 'லாட்டரி அடித்தது போல' முதல்வரான திரு. பழனிசாமி அவர்களுக்கு மக்களின் அருமை விளங்கவில்லை - மு.க.ஸ்டாலின்


"கூவத்தூரில் 'லாட்டரி அடித்தது போல' முதல்வரான திரு. பழனிசாமி அவர்களுக்கு மக்களின் அருமை விளங்கவில்லை;

அரசு விழா & ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக MP & MLA -களை அழைத்து, மக்களின் குறைகளுக்கு தீர்வுகாண வேண்டும்"
- மு.க.ஸ்டாலின்  

அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறு! இந்தி தெரியாத தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து வெளியேற்றி விடுவார்களா? - ஐயா பெ. மணியரசன்


 இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறு!

தமிழ்நாட்டையும் வெளியேறு என்பார்களா? - ஐயா பெ. மணியரசன்,

இந்திய அரசின் இந்திய மரபுவழி மருத்துவத்துறைக்கான ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் காணொலியில் பயிலரங்கம் நடத்தி, மாநிலங்களில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இப்பயிலரங்கின் தலைமைப் பயிற்சியாளர் அத்துறையின் நடுவண் அமைச்சகச் செயலாளர் வைத்தியா இராஜேஷ் கொட்டேச்சா! 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

மக்கள்தொகை பெருகி வருவதால், பல சவால்கள், தீர்வு காண்பதற்கு மேலும் கடினமானதாக இருக்கும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்

 

மக்கள் தொகை பெருகி வருவதால் ஏற்படும் வளர்ச்சி குறித்த சவால்கள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் எச்சரிக்கை

மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய சங்கம் (Indian Association of Parliamentarians for Population and Development - IAPPD) தயாரித்துள்ள “இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கையில், பாலின விகிதத்தின் நிலை”, “இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை நிலை, ஆதரவு அமைப்புகள்” என்ற இரண்டு அறிக்கைகளை இன்று புதுதில்லியில் மெய்நிகர் நிகழ்ச்சியில் வெளியிட்டுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஐ ஏ பி பி டி யைப் பாராட்டினார்.

 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கூடுதலாகச் சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய அனைத்திந்தியத் தேர்வு, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களை வடிகட்டிக் கழித்துக்கட்டுவதற்கான ஏற்பாடு.- பெ.மணியரசன்

 வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு

தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும்!  - பெ. மணியரசன் 

பொழுது விடிந்தால் புதிய குண்டு ஒன்றை மக்கள் உரிமைகளின் மீது வீசுவது மோடி அரசின் கொரோனாக் காலக் கொள்கையாகிவிட்டது. அவ்வாறு நேற்று (19.08.2020) புதிய சுமையாக – வேலைக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. 

முதற்கட்டமாகத் தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, நடுவண் அரசின் பணியாளர் தேர்வுத் துறை ஆகிய மூன்றுக்குமான ஊழியர் வேலைக்கு இந்திய அரசு அனைத்திந்திய முதல்நிலைத் தேர்வு முறையை அறிவித்துள்ளது. 

பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்திடுக உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். - கே.பாலகிருஷ்ணன்


 பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்திடுக

உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி மன்றப்பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்றார்கள்.  மத்திய அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு 14-வது நிதி ஆணைக்குழு பரிந்துரை அடிப்படையிலான 2019-2020 ஆண்டிற்கான நிதியை அனுப்பியிருந்தது. ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை தேவையான பணிகளுக்கு திட்டமிட்டு மன்றக்கூட்டங்களில் முடிவு செய்து நிறைவேற்றிடும் அதிகாரம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி ஊராட்சி மன்றங்களுக்கே உள்ளது. ஆனால்,  ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை மாவட்ட நிர்வாகமே பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட மாநில அரசு மாவட்டங்களுக்கு அரசாணை அனுப்பியது. இதனடிப்படையில் எல்லா மாவட்டங்களிலும் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாவட்ட நிர்வாகங்களே துணை ஆட்சியர் மூலம் பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட திட்டமிட்டது. ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடிய மாநில அரசின் இம்முடிவை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகம் பேக்கேஜ் டெண்டர் விட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது,

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! - தி.வேல்முருகன்

 

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! 

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! 

இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் அல்லது ஒரே நாடு என்பதிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

பிரிட்டிஷார் அன்று, பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் கொண்ட நாடுகள் - சமஸ்தானங்கள் - இனக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து வணிகச் சந்தைக்காக உருவாக்கியதுதான் இந்தியா என்ற நாடு. ஆனால் சுதந்திரம் பெற்றபின் தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அதில் மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) எனக் குறிப்பிடப்பட்டு, கூட்டாட்சி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகாறும் வந்த அரசுகள் இதைச் சிதைக்க பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு வந்ததிலிருந்து கூட்டாட்சி முறை என்ன, அரசமைப்புச் சட்டத்துக்கே வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதைத் தெளிவாக்குகிறது. 

பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் - கே.எஸ்.அழகிரி

 கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதாக அந்த தளர்வுகள் இல்லை.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.

கடந்த மார்ச்-மே மாதங்களில் 53 சதவிகித குடும்பத்தினரில், குறைந்தது ஒருவராவது வேலை இழந்துள்ளதாக, தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில்  தெரியவந்துள்ளது. 

ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினையில் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.-மு.க.ஸ்டாலின்

"ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினையில் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலையிட்டு விரைந்து தீர்வு காணவேண்டும்" - மு.க.ஸ்டாலின் 

இன்று என்னைச் சந்தித்த "ஸ்விக்கி" உணவு விநியோக ஊழியர்கள், "கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும் - அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும்" கூறிய போது- அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். ஊரடங்கு நேரத்திலும்  ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும்  மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விக்கி' நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்பதை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது. - வைகோ


 ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை: பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்!

 - வைகோ கண்டனம்

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசு பணியிடங்களை நீரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுயசார்பு இந்தியா மிக முக்கியமானது என்ற புரிதலுடன் நமது மருந்துப் பொருள் தயாரிப்பாளர்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பாளர்கள், மருத்துவத் துறையினர் இனி செயல்படுவார்கள் - திரு பியூஷ் கோயல்

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் நமது அனைத்து மருத்துவ சமுதாயத்தினரும் தேசத்தைப் பெருமை கொள்ளச் செய்துள்ளனர். சர்வதேச பங்கேற்பு,  வர்த்தகம் என்று வரும் போது இந்தியாவை நம்பிக்கைக்கு உகந்த பங்குதாரராக உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளனர் என்று தெரிவித்தார். புதுதில்லியில் இன்று சிஐஐ-ன் 12வது மெட்டெக் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

7 தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்; அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு ஆளுனரும், அரசும் வகை செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்


MDMA பதவிக்காலம் நீட்டிப்பு: 7 தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

ராஜிவ்காந்தி கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்முனை கண்காணிப்பு முகமையின் (Multi Disciplinary Monitoring Agency -MDMA) பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

2021-22 ஆம் ஆண்டில் சணல் விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய சணல் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய விதைக் கழகம் ஆகியவற்றிடையே கையெழுத்தானது.

புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டத் திருத்தம் தேவை! - DR. அன்புமணி ராமதாஸ்

 தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கு

மட்டுமே வழங்க சட்டத் திருத்தம் தேவை! - DR. அன்புமணி ராமதாஸ்

மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருக்கிறார். உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் இரட்டை வேடம் போட்ட எடப்பாடி பழனிசாமி அரசு - #OBCreservation விவகாரத்திலும் அதேபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.- மு.க.ஸ்டாலின்


 “நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் இரட்டை வேடம் போட்ட எடப்பாடி பழனிசாமி அரசு - #OBCreservation விவகாரத்திலும் அதேபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” - மு.க.ஸ்டாலின் 

“தமிழ்நாட்டிலிருந்து அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியிடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும்” என்றும் - “அதை வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய மூன்று மாதங்களுக்குள் கமிட்டி அமைக்க வேண்டும்” என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பினை, கடந்த 27.7.2020 அன்று வழங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.- டிடிவி.தினகரன்


காவிரி டெல்டாவில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறந்திட வேண்டும்: ஈரப்பதத்தைக் காரணம் காட்டி விவசாயிகளை  இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்திடுக
 - டி.டி.வி.தினகரன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக
மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக மாற்ற புதிய இயக்கம்! -DR.S.ராமதாஸ்

 இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக மாற்ற புதிய இயக்கம்! -DR.S.ராமதாஸ்

இளைஞர்கள் தான் நாட்டின் வருங்காலத் தூண்கள் என்று வீராவேசமாக வசனம் பேசி விட்டு, அவர்களை அரசியலில் வெற்று முழக்கங்களை எழுப்பவும், வெறுப்பரசியலை வளர்க்கவும் மட்டும் பயன்படுத்தினால், அவர்கள் வருங்காலத் தூண்களாக இருக்க மாட்டார்கள்; துரும்பாகத் தான் நலிவடைந்து போவார்கள். மாறாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை உறுதி செய்து, அதன்பிறகு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு பழக்கினால் அவர்களும் வளம் பெறுவார்கள்; அவர்களால் நாடும் முன்னேறும்.

மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாய தினமாக தமிழகம் முழுவதும் தமாகாவினர் கொண்டாட்டம்


மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாய தினமாக தமிழகம் முழுவதும் தமாகாவினர் கொண்டாட்டம்

மக்கள் தலைவர் ஐயா திரு. ஜி.கே.மூப்பனார் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ஆழ்வார்பேட்டை , அசோகா தெரு , தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில், திரு. ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள், ஐயா அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணுவித்து மரியாதையை செய்தார். 

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு - மு.க.ஸ்டாலின்


“ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு;
தீர்ப்பை வரவேற்று இன்றே அமைச்சரவைத் தீர்மானம் வெளியிட வேண்டும்" -  மு.க.ஸ்டாலின் 

“ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும்.

சுற்றுப்புறச்சூழலுக்கும் – தங்களின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவி மக்கள் மீது  கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப் பறித்த அ.தி.மு.க. அரசின் மாபாதகச் செயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டு  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நியாயம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகிவிடும்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

அரசனாய் இல்லாமல் ஆட்சியை இயக்குவது ஆரியத்திற்குக் கைவந்த கலை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறது.- பெ.மணியரசன்


தனியார் தொலைக்காட்சிகளில் ஆரியத்துவா அதிகாரம்! 
அரசனாய் இல்லாமல் ஆட்சியை இயக்குவது ஆரியத்திற்குக் கைவந்த கலை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறது. 
-  பெ. மணியரசன்

சிறுபான்மையாய் இருந்து கொண்டு, பெரும்பான்மையை ஆட்டிப் படைப்பது, துணைக் கண்டத்தில் சொந்த தேசமில்லாது, இயற்கையான தேசியங்களுக்கு எசமான வேலை பார்ப்பது, சொந்தத் தாய்மொழி இல்லாமல் மற்றவர்களின் தாய் மொழிகளை சமற்கிருதமயமாக்குவது, சொந்தக் கோயில் இல்லாமல் பிறர் தெய்வங்களுக்குச் சூத்திரதாரி ஆவது போன்றவையெல்லாம் ஆரியத்தின் அடிப்படைச் சூழ்ச்சிகள்! 

அதுபோல்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாமலேயே இப்போது ஆட்சி செய்கிறது ஆரியம்! அவர்களுக்கு இப்போதுள்ள கூடுதல் வலிமை, தில்லி ஏகாதிபத்தியத்தின் ஆட்சி அவர்கள் கையில் இருப்பதாகும்! இதுவரை பதுங்கிக் கிடந்த பிராமண அறிவுசீவிகள், நடுநிலை நாடகமாடியோர், இப்போது படமெடுத்து ஆடுகின்றனர். 

”தூய்மைத் திருவிழா” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நகரங்கள், மாநிலங்களுக்கு மொத்தம் 129 விருதுகள் வழங்கப்படும்.- நரேந்திர மோடி

 

2020ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வின் முடிவுகளை 2020 ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவிப்பார். நாட்டின் தூய்மை நிலவரம் குறித்த கள ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும் இது.

”தூய்மைத் திருவிழா” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நகரங்கள், மாநிலங்களுக்கு மொத்தம் 129 விருதுகள் வழங்கப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தூய்மையான நகர்ப்புற இந்தியா இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், தூய்மை இயக்க வீரர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் காணொளிக் காட்சியின் மூலம் பிரதமர் உரையாடுவார்.

விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.- வெங்கையா நாயுடு

 

விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்.

விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த  வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.