புதன், 2 ஜூன், 2021

பொதுத்துறை நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நிறுத்தக் கடையாக மட்டுமல்லாமல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.- திரு.பியூஷ் கோயல்


 அரசின் மின்னணு சந்தை தளத்தில்  பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காகக் கூடுதல் பங்கேற்பாளர்களை இணைத்து, அத்தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

அரசின் மின்னணு சந்தை தளம் மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய அவர், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நிறுத்தக் கடையாக மட்டுமல்லாமல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். காகிதமற்ற, ரொக்கமில்லா, கணிப்பொறியில் இயங்கும் மின்னணு சந்தை தளம் குறைந்த மனித சக்திகளை பயன்படுத்தி, பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதாகக் கூறிப் பாராட்டிய அமைச்சர், இந்தத் தளத்தின் மீது பிரதமர் மிகுந்த நம்பிக்கைக் கொண்டு இருப்பதாகவும், அதை ஈடு செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விற்பனையாளர்களின் கூட்டு முயற்சிக்கு எதிராக இந்த தளம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த கொள்முதல் அமைப்புமுறையை நோக்கி ரயில்வே மின்ணு கொள்முதல்  அமைப்பை அரசின் மின்னணு சந்தை தளத்தை இணைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு கோயல் வலியுறுத்தினார். இதன் மூலம் பொது நிதி சேமிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பெட்ரோலியம் மற்றும் எஃகு துறைகள் பெருமளவு கொள்முதலை மேற்கொள்ளவும் இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த அமைப்பு முறையில் ரயில்வே துறையில் வாங்குபவர்களின் ஏலம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பிற்குப் பிறகு மின்னணு சந்தை வாயிலாக சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ரயில்வே துறையால் ஆண்டுக்கு மேற்கொள்ளப்படக்கூடும்‌.

அரசின் மின்னணு சந்தை தளத்தினால் எண்ணிக்கை மற்றும் தாக்கத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பு நிதியாண்டு 2020-21 ரூ. 38620 கோடியை எட்டியது. சுமார் 52 ஆயிரம் நுகர்வோரும் சுமார் 18.75 லட்சம் விற்பனையாளர்களும் பதிவு செய்துள்ள இந்தத் தளத்தில், 16332 பொருட்களும் 187 சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஜீஎம் (GeM) பல கோவிட் -19 தொடர்பான முன்முயற்சிகளை எடுத்துள்ளது, இதில் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை / வகைகளுக்கான பிராண்ட் ஒப்புதல் ஆகியவை அடங்கும். அசல் விநியோக காலத்தின் காலாவதிக்கு அப்பால் விநியோக காலத்தை 30 நாட்கள் நீட்டித்தல் இயக்கப்பட்டுள்ளது. ஏல காலம் 10 முதல் 1 நாளாகவும், விநியோக காலம் 15 முதல் 2 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 வகைகளில் மார்ச் 20 முதல் மே 21 வரை ஆர்டர் மதிப்பு ரூ .7863 கோடியாக உள்ளது, இதில் ரூ .268 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளன.

வாங்குபவர்களிடமிருந்தும் விற்பனையாளர்களிடமிருந்தும் பின்னூட்டத்தின் அடிப்படையில் பல புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன:

  • தனிப்பயன் பொருள் ஏலம், BoQ- அடிப்படையிலான ஏலம், திறன் அடிப்படையிலான ஏலம் உள்ளிட்ட பல்வேறு புதிய ஏல வடிவங்கள்
  • விலை மாறுபாடு பிரிவு (பி.வி.சி) உடன் ஒப்பந்தங்களுக்கான ஏற்பாடு
  • மைல்ஸ்டோன் அடிப்படையிலான கொடுப்பனவுகளுடன் நிறுவல், ஆணையிடுதல், பயிற்சி மற்றும் ஏஎம்சி / சிஎம்சி ஆகியவற்றை வாங்குதல்
  • தேவை திரட்டுதல்
  • விற்பனையாளர் பிரதிநிதித்துவம், தொழில்நுட்ப தெளிவு மற்றும் சவால் நிராகரிப்பு சாளரத்தின் அறிமுகம்
  • தாமதமாக பணம் செலுத்துவதற்கு வாங்குபவர்களுக்கு வட்டி அபராதம் அறிமுகம்
  • புதுப்பிக்கப்பட்ட விற்பனையாளர் மதிப்பீட்டு முறைமை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக