ஞாயிறு, 30 ஜூன், 2019

இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் நடத்துவது? - ராமதாஸ்

இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 
எத்தனை ஆண்டுகள் நீட் நடத்துவது?
-ராமதாஸ் அறிக்கை


சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடத்தப்படுவதாகவும், அது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து

மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது - கி.வீரமணி

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற எல்லாமே ‘‘ஒரே ஒரே’’ என்று கூறும் மத்திய பி.ஜே.பி. அரசு - இப்பொழுது ஒரே ரேசன் கார்டு என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது.
மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது
- கி.வீரமணி அறிக்கை
(திராவிடர் கழகம் தலைவர் )



ஒற்றை ஆட்சி முறைக்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடு
ஒரே நாடு (இந்துராஷ்டிரம்), ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத கலாச்சாரம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கு விடை கொடுக்கும் ஒரே அதிபர் என்பதை நோக்கியே) என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது,

கூட்டாட்சித் தத்துவத்தை (Federal) ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை (மத்திய) ஆட்சி முறைக்கே (Unitary system of Government) என்பதற்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட சலுகை விலையில் (கோதுமை 2 ரூபாய், அரிசி கிலோ மூன்று ரூபாய்) என்பது போன்று தருவதை மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் (Migrant Population) பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்!

‘‘The biggest beneficiary of this he (Paswan) said, would be migrant labourers who move to other states to seek better job opportunities.’’

அந்தந்த மாநிலத்தின் உணவு நிலவரம், உணவு விநியோக முறை எல்லாம் ஒரே சீரான முறையில் இருக்கிறதா என்பது முதல் கேள்வி.

தமிழ் 12-வது புத்தகம் குறிப்புகள்


 தமிழ் 12-வது புத்தகம் குறிப்புகள்

  • ஒன்றே யென்னின் என்னும் கடவுள் வாழ்த்து பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
  • புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
  • புறநானூற்றின் திணைகள் - 11
  • தமிழரின் வாழ்வியல் சிந்தனைக்கு கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
  • புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
  • அகநானூறு மணிமிடை பருவத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 180
  • அகநானூற்றுப் பாக்களின் அடிவரையரை - 13-31
  • நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  • நற்றிணைப் பாக்களின் அடி வரையறை - 9-12
  • கபிலரை வாய்மொழிக் கபிலர் என்று போற்றியவர் - நக்கீரர்
  • குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
  • குறட்பா என்பது - ஈரடி வெண்பா
  • அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எண்ணிக்கை - 38
  • திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
  • கொண்டாடப்படும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.31
  • பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஓழிபியல்
  • திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
  • வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
  • சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
  • சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
  • சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு காதை
  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • வரி என்பது - இசைப்பாடல்
  • தாம் இயற்றிய இராம காதைக்கு கம்பர் இட்ட பெயர் - இராமவதாரம்
  • கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுககு கூறப்படும் கணக்கீடு - 96
  • உத்தரகாண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்
  • சுந்தரகாண்டம் இராமாயணத்தில் - ஐந்தாங்காண்டம்
  • சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் - அனுமன்
  • சிறியதிருவடி என்றழைக்கப்படுபவர் - அனுமன்
  • தனயை யென்ற சொல்லின் பொருள் - மகள்
  • இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
  • சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒரு திங்கள்
  • வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
  • கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
  • வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி
  • திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்து தந்தது- இலத்தீன் மொழியில்
  • தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர்- சுசைமாமுனிவர்
  • கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்
  • திவ்யகவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்
  • புலன் என்னும் இலக்கிய வகை - பள்ளு
  • பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
  • பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது 
  • முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா
  • பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம
  • சாகித்திய அகேடமி  பரிசு பெற்ற நூல் - பிசிராந்தையார்
  • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்
  • வாழ்வினிற் செம்மைச் செய்பவன் நீயே என்ற பாடலை வாழந்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு - புதுவை அரசு
  • வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்
  • பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 5
  • நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்க்கு உழைத்தல் என்று பாடியவர் - பாரதியார்
  • இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்
  • செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்
  • பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவிலியர் விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்
  • கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் - வாணிதாசன்
  • சுரதா நுல்களுள் தமிழ் வளர்ச்சி துறையின் பரிசினைப் பெற்ற நூல் - தேன் மழை
  • தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழண்னை விருது பெற்ற கவிஞர் - அப்துல் ரகுமான்
  • உவமைக் கவிஞர் எனப் பாரட்டப்பட்டவர் - சுரதா
  • கிருத்தவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர் - எச். ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  • சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
  • திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர் - பெரியவாச்சான்பிள்ளை
  • கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஓட்டக்கூத்தர்

11-வது தமிழ் புத்தகம்

11-வது தமிழ் புத்தகம்


  • தமிழ் மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள்
  • தாயுமானவர் ஆற்றிய பணி - அரசுக் கணக்கர்
  • பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப் பத்திரிக்கை - இந்தியா
  • பாரதியார் மொழி பெயர்த்த நூல் - கீதை
  • புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
  •  பேகன் - கடையெழு வள்ளல்களில் ஒருவன் 
  • கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈத்தவன் - பேகன்
  • களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 120
  • ஔவைக்கு அரிய நெல்லிக்கனியை ஈந்தவன் - அதியமான்
  • தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாரட்டப் பெறுவது - திருக்குறள்
  • திருக்குறள் என்பது - அடையடுத்த கருவியாகு பெயர்
  • அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
  • அறத்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள் - புரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  • திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை
  • சீவகசிந்தாமணியை இயற்றியவர் - திருத்தகக் தேவர்
  • சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்  - சீவகன்
  • சீவகசிந்தாமணிக்கு உரை கண்டவர் - நச்சினார்கினியார்
  • சீவகசிந்தாமணியில் பயின்று வரும் பாவினம் - விருத்தம்
  • உமறுப்புலவரின் ஆசிரியர் - கடிகை முத்துப் புலவர்
  • செலவியற்காண்டம் எனப்படுவது - ஹிஜ்ரத்துக் காண்டம்
  • சின்னச்சீறா என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் - மனூ அகமது மரைக்காயர்
  • உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல் - முதுமொழிமாலை
  • நபிகள் பெருமான் அபூக்கருடன் தங்கியிருந்த குகையுள்ள மலையின் பெயர் - தெளர்
  • பாந்தள், உரகம், பன்னகம், பணி, அரவு என்னும் சொற்களின் பொருள் - பாம்பு
  • விடமீட்ட படலம் எந்த காண்டத்தில் உள்ளது. - ஹிஜ்ரத்துக் காண்டம்
  • மனோன்மணீயத்தை இயற்றியவர் - சுந்தரம்பிள்ளை
  • மனோன்மணீயம் நூலின் வரும் துணைக்கதை - சிவகாமி சரிதம்
  • சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது - பல்கலைக்கழகம்
  • மனோன்மணியம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல் - இரகசிய வழி
  • ஜீவகன் புதுவதாய்க் கோட்டை நிறுவிய இடம் - திருநெல்வேலி
  • பலபட்டைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் - தென்றல் விடுதூது
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்கம்
  • தமிழில் முதலில் எழுந்த பரணி - கலங்கத்துப்பரணி
  • தென்தமிழ் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் போற்றியவர் - ஓட்டக்கூத்தர்
  • போர்முனையில் ஆயிரம் யானைகளை வென்ற வீரரைப் பாடுவது - பரணி
  • செங்கீரைப் பருவம் பிள்ளைத் தமிழில் - இரண்டாம் பருவம்
  • தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த நூற்றாண்டு - 18-ம் நூற்றாண்டு
  • கிள்ளைவிடு தூதில் உள்ள கண்ணிகள் - 239
  • முதற்குலோத்துங்கனின் படைத்தளபதி - கருணாகரத் தொண்டைமான்
  • ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவம் - 7


10-வது தமிழ் புத்தகம் குறிப்புகள்

10-வது தமிழ் புத்தகம்

  • மாணிக்கவாசகர் பிறந்த ஊர் - திருவாதவூர்
  • மாணிக்கவாசகர் பாடல்கள் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளன.- 8ம்
  • மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்கு உள்ளது - திருப்பெருந்துறை
  • மாணிக்கவாசகர் எந்த மன்னரிடம் தலைமை அமைச்சராகப்

தமிழ் 9-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்

 தமிழ் 9-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்


  • யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எப்படி திரியும் - என்
  • தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் பாது எப்படி திரியும் - தம் 

சனி, 29 ஜூன், 2019

நீதிபதிகள் நியமனம்: மாநில அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயலக் கூடாது! -ராமதாஸ்

நீதிபதிகள் நியமனம்: மாநில அதிகாரத்தை 
பறிக்க மத்திய அரசு முயலக் கூடாது!
- ராமதாஸ் அறிக்கை
(பாமக நிறுவனர்)


இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றைப் போன்று இந்திய நீதித்துறை பணி என்ற புதிய பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தேசிய அளவில் போட்டித்தேர்வுகளை நடத்தி நீதிபதிகளை தேர்வு செய்வதும், அவர்களை இந்தியாவின் எந்த பகுதியிலும் நியமிக்க வகை செய்வதும் தான் மத்திய அரசின் நோக்கமாகும். இதுகுறித்து மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கருத்துகளை கேட்பதற்காக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களுக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் டாக்டர். அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த ஜூன் 19-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்று தேசிய நீதித்துறை பணியாளர் தேர்வாணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் புதுமையானது அல்ல... புதியதும் அல்ல. ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2009&ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் 2013&ஆம் ஆண்டு நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

மத்திய அரசு அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வரும் ஒற்றைக் கலாச்சாரத்தை நீதித்துறையிலும் திணிக்க விரும்புவதன் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். ஆனால், இது நல்லது அல்ல. இது மறைமுகமாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். இப்போது வரை கீழமை நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றமே போட்டித் தேர்வுகளை நடத்தி மாவட்ட அளவிலான நீதிபதிகளையும், பிற கீழமை நீதிபதிகளையும் தேர்வு செய்கிறது. வேறு பல மாநிலங்களில் மாநில அரசுகளே கீழமை நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இந்த முறை குறைகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசு திணிக்க முயலும் புதிய முறைப்படி தேசிய அளவில் போட்டித் தேர்வுகள் மூலமாக கீழமை நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் தேர்ச்சி தரவரிசை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மாநிலப் பிரிவு வழங்கப்படும். அவர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உயர்நீதிமன்ற பரிந்துரைப்படி பணியமர்த்திக் கொள்ளலாம். இது இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக கடைபிடிக்கப்படும் முறை தான் என்றாலும் கூட, கீழமை நீதிபதிகள் நியமனங்களை இவ்வாறு செய்வதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். தமிழகத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியாத வட இந்தியர்கள் தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டால், நீதி வழங்கும் முறையே சிதைக்கப்பட்டு விடும். இது எனது ஐயம் மட்டுமல்ல. 2013&ஆம் ஆண்டு நடந்த முதல்வர்கள் மாநாட்டிலும் இதே ஐயம் தெரிவிக்கப்பட்டது. ‘‘ சாட்சிகள் விசாரணைக்கு உள்ளூர் மொழி மற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியம் என்பதால், உள்ளூர் மொழி தெரியாத ஒருவரை நீதிபதியாக நியமித்தால் அது நீதி வழங்கும் திறனை பாதித்து விடும்’’ என்று முதல்வர்கள் மாநாட்டில் கூறப்பட்டது.

ஆந்திரா, மும்பை, தில்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களும் இதே கருத்தைக் கூறி தேசிய அளவிலான நீதிபதிகள் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்வது மிகப்பெரிய அதிகார ஆக்கிரமிப்பு ஆகும். இது மக்களாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்காது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதித்துறையில் உச்சநீதிமன்றம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் பொதுப்பட்டியலில் தான் உள்ளன. கீழமை நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கினாலும் கூட, நீதிமன்றங்களை நிர்வகிப்பது, கீழமை நீதிபதிகளை நியமிப்பது ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க முயலக் கூடாது. இதற்கு முன் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் தான் பெரும் சீரழிவை சந்தித்தது. நீதித்துறைக்கும் அதே போன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது.

எனவே, தேசிய அளவில் கீழமை நீதிபதிகளை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் என்பதால் இந்தத் திட்டத்தை ஏற்க இயலாது என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும்.

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை உண்டாக்கும்! - வைகோ

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம்
விபரீத விளைவுகளை உண்டாக்கும்!
-வைகோ எச்சரிக்கை

இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி;

வெள்ளி, 28 ஜூன், 2019

"கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்காதே! தமிழகத்தை அழிவுத் திட்டங்களி...

நதிகளை இணைக்கும் படி நான் மத்திய அரசை வேண்டுகிறேன். - ஆர்.எஸ்.பாரதி எம்.பி

"கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முதல்கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்!"

- ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
திமுக மாநிலங்களவை

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி 26.06.2019 அன்று ஆற்றிய உரை வருமாறு : இந்த முக்கியமான பிரச்சினையில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினை பற்றி மேன்மைக்குரிய இந்த அவையில் விவாதிக்கவேண்டும். எனக்கு முன்னால் பேசிய உறுப்பினர்கள் அனை வரும் நாடு சந்தித்து வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றி குறிப்பிட்டார்கள் அவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட தைப் போல 2020 ஆம் ஆண்டில் இந்தி யாவில் உள்ள 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும். 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவிகிதம் பகுதி யில் நிலத்தடி நீர் இருக்காது என்று கூறப்படுகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இது அனைத்துப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்தவற்கான முக்கியமான நேரம். காலம் குறைவாக இருக்கும் காரணத் தால் நான் 4 அல்லது 5 கருத்துக்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக நதிகளை இணைக்கும் படி நான் மத்திய அரசை வேண்டுகிறேன். இது உங்களுடைய தேர்தல் அறிக்கை யில் இடம்பெற்றிருந்தது. ஆனால் குடியரசுத் தலைவரின் உரையில் நதிகளை இணைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில் லை. எனவே நான் இந்திய அரசை குறைந்தபட்சம் முதல் கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். ஏனெனில் தமிழ் நாடு குறிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட சென்னையில் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிப்பதற்காக நள்ளிரவு வரை தெருக்களில் காத்துக் கிடக்கின்றனர். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, நான் அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, ஏற்கனவே அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதால் இதை அதன் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறச் செய்து தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இரண்டு வகையான சூழ் நிலைகளை எதிர்கொள்கிறோம். ஒன்று புயல் அல்லது வெள்ளம் மற்றொன்று வறட்சி, எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதுதான். இது திரும்பத் திரும்ப அனைத்து உறுப்பினர்களாலும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் அரசு தனியாக ஒரு அமைச்சரவையை அமைத்துள்ள இப் போதாவது இந்தப் பிரச்சினைக்கு உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நான் நம்பு கிறேன்.

நான் நான்கு முறை ஆலந்தூரில் மாநகராட்சித் தலைவராக இருந் தேன். நான் பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து நடத்தும் திட்டத்தின் கீழ், நிலத்தடி கழிவுநீர்க் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினேன். நாங்கள் 5000 ரூபாயை வைப்புத் தொகையாக (டெபாசிட்) வசூலித் தோம் மக்கள் அந்த வைப்புத் தொகையைச் செலுத்தினார்கள். நான் ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், நீங்கள் ஏதாவது செய்ய முன்வந்தால் மக்கள் ஏதேனும் நிதி வழங்கத் தயாராக இருக்கிறார்கள். நாம் தண்ணீரைப் பெறு வதற்கும் ஏதாவது செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

சென்னையில் கல் அள்ளும் குவாரி களைக் கொண்ட மலைகள் நிறைய இருக் கின்றன. அவை பழுப்பு மற்றும் கருப்பு நிறத் தண்ணீரைக் கொண்டுள்ளன. அவை வீணாகிக் கொண்டிருக்கின்றன. பருவ மழைக் காலத்தில் மழை நீர் கடலுக்குப் போய்விடுகிறது. இவை அறிவுபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு, தண்ணீர் சேகரித்து வைக்கப்படவேண்டும்.

மூத்த உடன் உறுப்பினர் திரு.டி. கே.ரெங்கநாதன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல கூவம் ஆற்றில் பச்சையப்ப முதலியார் குளித்தக்காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அது கெட்டுப்போன கழிவுநீர் ஆறாகிவிட்டது. தயவு செய்து இந்த எல்லாக் கழவுகளையும் அகற்றுங்கள்.

எனக்கு போதுமான அளவு நேரம் இல்லை. எனினும் நான் ஒரு கோரிக் கையை மத்திய அரசுக்கு வைத்து என் உரையை நிறைவு செய்யவிரும்புகிறேன். மத்திய அரசு தண்ணீரை பொதுப் பட்டியலில் இடம் பெறச் செய்யவேண்டும் அதற்குப் பதிலாக நீங்கள் கல்வியைப் பொதுப் பட்டியலில் சேர்த்துள்ளீர்கள் கல்வி தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. “நீட்” தேர்வையும் பிற பிரச்சினைகளை யும் எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தயவு செய்து “கல்வி” யை மாநிலப்பட்டி யலிலுக்கு மாற்றுங்கள், அத்துடன் நதிகள் மற்றும் தண்ணீரை பொதுப் பட்டியலில் இடம்பெறச் செய்யுங்கள். இச்சொற்களுடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

"நீட்"டுக்கு விலக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் என்ன செய்யவேண்டும்? - கி.வீரமணி

"நீட்"டுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கக்கோரும் தீர்மானத்தை, கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றவேண்டும்
ஆசிரியர் கி.வீரமணி
(திராவிடர் கழகம்)


நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று சென்றுள்ள தி.மு.க.வின் உறுப்பினர்கள் குறிப்பாக தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவையின் தி.மு.க. கட்சித் தலைவர் திருச்சி சிவா அவர்களும் மற்றும் எம்.பி.,க்களும், தமிழ்நாட்டிற்கு நீட்' தேர்விலிருந்து விலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணியை பாந்தாடிய இந்தியா



இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். விராட் கோஹ்லி இருவரும் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 48 ரன்னுக்கு அவுட்டானார். விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அரைசதம் அடித்த கேப்டன் விராட் கோஹ்லி (72) ரன்னுக்கு அவுட்டானார். இதன் முலம் சர்வதேச போட்டிகளில் தனது 20,000 ரன்னை கடந்தார், மற்றும் சச்சின், லாரா வின் சாதனை முறியடித்தார்.

கடைசி நேரத்தில் தோனி, பாண்ட்யா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். 6வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 70 ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா (46) ரன்களுக்கு அவுட்டானார். கடைசி ஓவரில் 2 சிக்சர் உட்பட 16 ரன்கள் விளாசிய தோனி, அரைசதம் எட்டினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி (56) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும் காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும் நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விரைவில் வெளியேறினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து புள்ளி பட்டியல் இரண்டவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் - மு.க.ஸ்டாலின்

”காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுவதோடு - தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவையும் பாஜக அரசு கைவிட வேண்டும்”

- மு.க.ஸ்டாலின் அறிக்கை
(திமுக தலைவர்)


தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு, அதனால் ஏற்படப் போகும் பேரழிவை எண்ணிப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, திருவாரூரில் 59, தஞ்சாவூரில் 17, அரியலூரில் 3 ,கடலூரில் 7, ராமநாதபுரத்தில் 3 என்று மொத்தம் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்து விட்டதா என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. “விவசாயிகள் நலனுக்காகத் திட்டங்கள் தீட்டுகிறோம்” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, அது வெளிப் பூச்சுக்குத்தான் என்று நிரூபிக்கும் வகையில், மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, “திட்டமிட்டு” கெட்ட நோக்குடன் அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது. காவிரிப் படுகையில் ஏற்கனவே 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க 18650 கோடி ரூபாய் முதலீட்டில் அனுமதி பெற்றுள்ள ஓ.என்.ஜி.சி மற்றும் “ ஸ்டெர்லைட் புகழ்” வேதாந்தா நிறுவனங்கள் வேளாண் மண்டலத்தையே சிதைத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, தமிழகத்தின் பொருளாதாரத்தை அடியோடு பிடுங்கியெறியும் விதத்தில் இப்படித் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தங்களுக்கு உள்ள பேராபத்தை “நெடுவாசல் போராட்டம்”, “கதிராமங்கலம் போராட்டம்”, “நாகை, திருவாரூர் போராட்டம்”, “விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு எழுச்சிமிகு மனித சங்கிலிப் போராட்டம்” எல்லாம் நடத்தி -தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரோ, மாநிலத்தில் உள்ள முதலமைச்சரோ அந்த மக்களை- விவசாயிகளை அழைத்துப் பேசிட முன்வரவில்லை. உண்மையான ஜனநாயக உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்க மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. “தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்படாது” என்று வாக்குறுதி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், இப்போது இந்த அனுமதிகளை வழங்குவது ஏன் ? “மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்ற முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி, பெட்டிப் பாம்பாய் அடங்கி அரவமற்றுக் கிடப்பது ஏன்? அடக்குமுறை சட்டங்களை ஏவி- விவசாயிகளின் உரிமைக்குரலை அடக்கி ஒடுக்கி முறித்துப் போட்டுவிடலாம் என்பதில் மட்டுமே முதலமைச்சர் திரு பழனிச்சாமி ஆர்வமும் அதிக கவனமும் செலுத்தி- விவசாயிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பது கடும் கண்டத்திற்குரியது.

இது ஒருபுறமிருக்க காவிரி மேலாண்மை ஆணையம் “தபால் அலுவலகம்” போல் செயல்படும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. “சட்டப் போராட்டம் மூலம் சகல அதிகாரமும் உள்ள ஆணையம் அமைத்து விட்டோம்” என்று தம்பட்டம் அடித்த அதிமுக அரசு, இன்றைக்கு அந்த ஆணையம் போட்ட முதல் உத்தரவையே அவமதித்துள்ள கர்நாடக அரசை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய பா.ஜ.க. அரசிடம் வலியுறுத்தத் துணிச்சல் இல்லாமலும் அஞ்சி- தமிழக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி நீரும் திறந்து விடப்படவில்லை. இப்போது இரண்டாவதாக ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று போட்ட உத்தரவின்பேரில் 31.24 டி.எம்.சி நீரும் திறக்கப்படவில்லை. “காவிரியில் நீர்வரத்து இருந்தால் ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுங்கள்” என்று காவிரி மேலாண்மை ஆணையம் போட்டிருக்கும் இரண்டாவது உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறிய செயல் மட்டுமல்ல- பல் இல்லாத ஆணையம் பவர் இழந்து,கோலூன்றிக் குனிந்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. பொறுப்புத் தலைவரின் கீழ் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திடமிருந்து இதை விட அதிகமாக தமிழக விவசாயிகள் எதிர்பார்க்க முடியாத கீழ்மை நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, காவிரி ஆணையத்திற்கு உடனடியாக நிரந்தரத் தலைவர் நியமிக்கவும், இதுவரை ஆணையம் போட்டுள்ள இரு உத்தரவுகளின் அடிப்படையில் 40.43 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்களையும், விவசாயிகளையும், வேளாண்மையையும் போற்றி நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், 27 ஜூன், 2019

தமிழகம் கடுமையான நீர் நெருக்கடி மாநிலங்களவையில் காரசார விவாதம்

தமிழகம் கடுமையான நீர் நெருக்கடியில் உள்ளது. மாநிலங்களவையில் (26-06-2019)புதன்கிழமை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது. 


டி.கே.ரங்கராஜன்(சிபிஐ (எம்)) : பேசுகையில், மாநில தலைநகர் சென்னையில் தங்கம், தண்ணீரை விட மலிவானது. மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் 13 வரை தமிழகம் மழையை 41 சதவீதம் குறைத்துள்ளது. இந்தியாவின் முதல் வறண்ட நகரமாக சென்னை உருவாக உள்ளது . சென்னையில் பெரும்பான்மையான மக்கள் தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள். மாநகராட்சி மற்றும் தனியார் டேங்கர்களால் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு தனியார் தண்ணீர் லாரி விலை ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட அதிகம். ஐ.டி துறை தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்கள் சென்னையை காப்பாற்றும் பொறுப்பும் உள்ளது .

டி.ராஜா (CPI) : தமிழகத்தில் அதிகரித்து வரும் கடுமையான நீர் நெருக்கடியால் மக்களின் கவலை அதிகரித்து வருகிறது. நீர் தொடர்பான சிரமங்களை மையம் விரைவாக தீர்க்க வேண்டும். நதிகளை இணைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சிவசேனாவின் அனில் தேசாய் : இப்போது இருக்கும் நீர் நெருக்கடி அடுத்து வருங்காலங்களில்  போர் தண்ணீருக்காக  மட்டுமே இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும். இதே நிலை மகாராஷ்டிராவிலும் காணப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தை சமாளிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆர்.ஜே.டி யின் மனோஜ் குமார் ஜா : தண்ணீரை துஷ்பிரயோகம் செய்பவரை கைது செய்ய அனுமதிக்கும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது என்று  கூறினார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிட்டி பி.பிரகாஷ் : நாட்டின் 21 நகரங்கள் நீர் நெருக்கடியை எதிர்த்துப் போராடுகின்றன என்று  தெரிவித்தார். நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தெலுங்கானாவிற்கு நிதி வழங்குமாறு மையம் கோரப்பட்டுள்ளது.

இந்தி தேசிய மொழியும் அல்ல; பெரும்பான்மையினரின் மொழியும் அல்ல - கி.வீரமணி

இந்தி தேசிய மொழியும் அல்ல; பெரும்பான்மையினரின் மொழியும் அல்ல
தேசிய கல்வியின் ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பதெல்லாமே அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர பிஜேபியின் சூழ்ச்சியே! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

- கி.வீரமணி அறிக்கை
(திராவிடர் கழகம்)

ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பதெல்லாம் சமஸ்கிருத கலாச் சாரத்தைத் திணிப்பதும், அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்குமான சூழ்ச்சியே, இந்தப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கியஅறிக்கை வருமாறு:

“ஹிந்து ராஷ்டிரத்தைப் பற்றி நாம் கொண்டி ருக்கும் கற்பனையின்படி, அது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு வெறும் மூட்டையல்ல. பண்பாடுதான் அதன் சாரமான தத்துவம். நமது தொன்மையான, மாண்புயர்ந்த பண்பாட்டு மூலங்கள் அதன் மூச்சுக் காற்றாகும்."
- கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்
(‘ஞான கங்கை’ - நூல் - பக்.33-34).


நமது தேசீய மொழிப் பிரச்சினைக்கு வழி காணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி, ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தர வேண்டியிருக்கும். ஹிந்தி மொழியில் எந்தவிதமான அமைப்பு உடைய ஹிந்தியைக் கைக் கொள்ள வேண்டும்? எந்த ஹிந்தி அமைப்பு மற்ற பாரதீய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியுள்ளதோ, வளர்ச்சி பெற்றுள்ளதோ அதைத்தான் இயற்கையாக நாம் விரும்புகிறோம்.
- கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் 
(‘ஞான கங்கை’ - நூல் - பக்.171).


அவசர அவசரமாக ஒரு தேசிய கல்வி

மீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க.வின் (ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும்) மோடி ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, வாக்காளரின் ஒரு விரல் மை காயும் முன்னே, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த புதிய தேசியக் கல்விக் கொள்கையில், மும்மொழித் திட்டம் என்ற ஒரு ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு ஏற்பாடு செய்து, ஆட்சி சக்கரத்தை சுழற்றுகிறது!

மேலே காட்டியுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் கொள்கைக்கு செயல் வடிவம் - சட்ட வடிவம் கொடுத்து - பண்பாட்டுப் படையெடுப் பினை நிகழ்த்த முழு மூச்சுடன் இறங்கி விட்டது!

ஒற்றை அதிபர் ஆட்சி முறைக்கு அடிகோலப்படுகிறது

எனவே பன்மொழி, பன் மதங்கள், பல பண்பாடுகள் - ஆகியவற்றைக் கொண்ட நம் நாட்டினை ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைத் தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கே “விடை” கொடுத்து ஒற்றை அதிபரே வரும் ஆயத்தப் பின்னணியில்) என்பதெல்லாம் புதிய திட்டத்தில் பேசப்படுகிறது.

கல்வி 1976க்கு முன்பு மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்தது (From State list) ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent) மாற்றப்பட்டதை, ஓசையின்றி இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு - ஆக்கிரமித்து “ஜனநாயக ரீதியாகவே” செய்ய முயல்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றுதான் ஹிந்தி, மற்றொருமொழிதான் சமஸ்கிருதம்.

“மொழிகள்” Languages என்று தான் அதன் தலைப்பு - “தேசிய மொழி” என்று எந்த மொழிக்கும் அரசியல் சட்ட கர்த்தாக்கள் உரிமை வழங்கவில்லை.

காந்தியார் கூறிய உருது கலந்த இந்தியல்ல

ஆட்சி மொழி (Official Languages) என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகிறபோது (Hindi in Devnagri Script) தேவநகரி எழுத்துக்களை உடைய ஹிந்தியே ஆட்சி மொழி என்று பதிவு செய்தார்கள்.

“தேவபாஷை” என்று பார்ப்பனர்களால் (செம்மொழியாயினும் தமிழ் நீச்சபாஷைதான் என்பதால் சமஸ்கிருதம் பெருமையுறுகிறது - அரசமைப்புச் சட்டத்தால்) குறிப்பிடப்பட்டதற்கு முக்கிய காரணம்; அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள ‘ஹிந்தி’ காந்தியார் கூறிய உருது கலந்த ஹிந்துஸ்தான் என்ற ஹிந்தியல்ல. அதை உள்ளே விடாமல் பார்த்துக் கொண்டார்கள்!

ஹிந்தி பெரும்பான்மை மொழியா?

புதிய தேசியக் கல்வி கொள்கையில் உள்ள வரைவு அறிக்கைப்படி
ஹிந்தித் தொகுப்பில் 62.83 கோடி (மொத்த மக்கள் தொகை 136 கோடி மக்கள்) உள்ளனர் என்றாலும் ஹிந்தியைத் தாய்மொழி என்று குறிப்பிட்டிருப்போர் 32.22 கோடி பேர்களே!

பீகாரை எடுத்துக் கொண்டால் பொத்தாம் பொதுவில் அது ஹிந்தி பேசும் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டாலும்கூட,
பீகாரில் மூன்றில் ஒரு பங்கினர் போஜ்புரியையும், அய்ந்தில் ஒரு பகுதியினர் மஹதியையும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்!

சமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்!

பெரும்பான்மையோர் ஹிந்தி பேசுவதால் அதை ஆட்சி மொழியாக்குகிறோம். ஆங்கிலம் 15 விழுக்காடுதான் என்று கூறுகின்றனர். அதன் விழுமிய பயன் இன்று இந்தியாவை மற்ற ஹிந்தி பேசாத பகுதி மக்களுடன் இணைத்திருப்பதை வசதியாக மறந்து விட்டு, மறைத்து விட்டு வாதிடுகிறார்களே, அப்படியானால் சமஸ்கிருதத்தை தாய்மொழி எனக் கொண்ட வர்கள் இந்தியாவின் 136 கோடியில் வெறும் 24,821 பேர்களே!

வெகு வெகுச் சிறுபான்மை மொழிக்கு மட்டும் தனிச் சலுகை - தனிக் கவனமாம்! இந்தச் சிறப்புத் தகுதிக்கு மூலகாரணம் என்ன? ஒரே காரணம் மேலே காட்டிய ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளைக் கற்றுத் தர வாய்ப்பு உண்டா? 8 கோடி மக்கள் பேசும், எழுதும், செம்மொழி தமிழுக்கு வாய்ப்பு வானொலி, தொலைக்காட்சிகளில் உண்டோ?

திராவிட இயக்கம் எழுப்பும் கேள்வி

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக அந்த அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தும்கூட இங்கே - தமிழ் பிறந்த மண்ணில் தமிழுக்குரிய இடம் தரப்படவில்லையே!
திராவிட இயக்கம் தானே இந்தக் கேள்வியை அந்நாள் தொட்டு இந்நாள் வரை கேட்டுப் போராடுகிறது!
எனவே மொழி என்பது பேசும் கருவி எழுதும் வாய்ப்பு என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டின் ஊற்று என்பதை எவரே மறுக்க முடியும்?

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

எனவே தான் இதில் கை வைக்க முயன்றால் தேன் கூட்டைக் கலைத்தவர்களின் கதியாக ஹிந்தி சமஸ்கிருத திணிப்பாளர்களால் ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

எனவே பண்பாட்டுப் படையெடுப்பு எந்த உருவத்தில் வந்தாலும் ஒன்றுபட்டு முறியடிப்போம் வாரீர்!

திராவிட மண் - பெரியார் மண் என்பது பற்றி புரியாதது போல் கேள்வி கேட்கும் புல்லர்கள் இதைப் புரிந்து கொள்ளட்டும்!

பாஜகவுக்கு எதிராக இடது மற்றும் காங்கிரஸ் ஒன்று சேர வேண்டும் - மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக இடதுச்சாரிகள் மற்றும் காங்கிரஸ் ஒன்று சேர வேண்டும் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (26-6-2019) புதன்கிழமை வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் பட்பாடாவில் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர்
திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்த பட்பாடாவில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவுக்கும் மம்தாவின் கட்சித் தொழிலாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் எழுந்தது.  அரசியல் வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

 பட்பாடாவில் வன்முறையைப் பற்றி குறிப்பிடுகையில், மம்தா வங்காள சட்டமன்றத்தில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் என்ன நடக்கிறது என்பதை மாநில மக்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார். கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பாஜகவை விமர்சித்த மம்தா​ வெளி கலாச்சாரத்தை மேற்கு வங்க மாநிலத்திற்கு கொண்டு வர கட்சி முயற்சிக்கிறது  தவறான அறிக்கைகளை பரப்பி, கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் நபர்கள், அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்

நாம் பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும், அனைத்து எதிர் கட்சிகளும் போராட வேண்டும். இது நாம் கைகோர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல, ஆனால் தேசிய பிரச்சினைகளில் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற குழு (ஜூன் 28) அன்று கூட உள்ளது என்று கூறினார். முன்னதாக, வன்முறை தொடர்பான பாஜகவின் மூன்று பேர் கொண்ட குழுவும் அமித் ஷாவுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்! - சீமான்

மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். 
சீமான் வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சி


மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்!  கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால் சமூகப் போராளியும், மருத்துவருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றச் செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். 

பெரும்பான்மையான மக்களைக் குடிகாரர்களாக மாற்றியிருக்கிற 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை கருதி, ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகநடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களில் மதுபானக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று பலமுறை மக்கள் வற்புறுத்தி போராடியும்கூட நாடெங்கும் பரவலாக மதுபானக்கடைகளை திறந்து வருகிற தமிழ்நாடு அரசின் சீர்கெட்ட செயல்பாடுகளால் இன்று ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன் மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் நீதிமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் ரமேசின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.

தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழ்நாடு அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின் மீது இழைத்திருக்கின்ற ஆகப்பெரும் கொடுமை. மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால் தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ் சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்டத் தனது மகளைகூடப் பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசினை அறிவிக்க வைத்திருக்கிறார்.

கோவை மருத்துவர் ரமேஷ் அவர்கள் எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து அதற்கெதிராக குரல் கொடுத்து போராடி வருகிற சமூகப்பற்றாளர். அவரது உற்றத் துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் ரமேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து இருக்கின்ற அருமை மகள் சாந்தி தேவி அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என எனது நம்பிக்கையினைப் பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் ரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.

மதுவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம்; வாக்குசெலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகம். இதுநாள்வரை மதுபானக்கடைகளை மூடாது மதுவிலக்கைச் செயற்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க இனிமேலாவது மதுவிலக்கினைச் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும், மதுவிலக்கை அமல்படுத்தும்வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இணையவழி குளறுபடி - E.R ஈஸ்வரன் (KMDK)

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இணையவழி குளறுபடிகளை அடுத்து தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறையிலேயே மீண்டும் தேர்வை நடத்த முன்வர வேண்டும்.
-E.R ஈஸ்வரன்
(KMDK)


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 814 கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முதலாக இணையவழியில் 23.06.2019 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வை நடத்தியது. 

அதில் நாமக்கல் மாவட்டம், KSR பொறியியல் கல்லூரியில் 3 மையங்களில் சுமார் 2200 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 மையங்களில் இணையவழி தேர்வில் கம்ப்யூட்டர்கள் வேலை செய்யவில்லை என்று சுமார் 1020 தேர்வர்கள் தேர்வு எழுத முடியவில்லை. ஆதலால் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான தேர்வு முறையை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு எழுத முடியாமல் குளறுபடி நடந்தது. ஆதலால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுத முடியாதவர்களுக்கும், தேர்வில் பாதியுடன் வந்தவர்களுக்கும் மறுதேர்வு நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இத்தேர்வு முறையில் தேர்வர்கள் எழுதும் விவரங்கள் அதாவது எத்தனை கேள்விகள் சரியாக எழுதினோம் என்ற விவரம் தெரியாமல் போய்விடும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த தவறு செய்தாலும் தேர்வர்களுக்கு அதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆகவே 23.06.2019 ஆம் தேதியில் நடைபெற்ற குழப்பமான தேர்வை முழுவதும் ரத்து செய்து, இணையவழி தேர்வு முறையை கைவிட்டு, Offline தேர்வு அதாவது OMR Sheet நகல் கொடுத்து நேர்மையாக நடத்துமாறு தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்சி

இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்சி

உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். இதில் இரு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மக்களவையில் வெடித்த கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மக்களவையில் வெடித்த கனிமொழி 


மக்களவையில் இன்றைய விவாத நேரத்தின் போது பேசிய தூத்துக்குடி 
மக்களவைத் தொகுதி தி.மு.க. எம்.பி., கனிமொழி அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சிபிஐ விசாரணை குறித்து மிகவும் கொதிப்புடன் பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு 100 நாட்களாக அமைதி வழியில்

புதன், 26 ஜூன், 2019

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு உதவுகிறது ! - தொல். திருமாவளவன்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு உதவுகிறது ! 
-  தொல். திருமாவளவன் (MP)
தலைவர்,விசிக. 


காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இன்னொரு புறம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசுக்குத் துணை போகிறது. இது அப்பட்டமான துரோகம். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . கடந்த ஜூன் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரையே இதுவரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை . இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லை , மழை பெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காத மேலாண்மை ஆணையம் அவர்களுக்குப் பரிந்து பேசுவதாகவும், தமிழகத்துக்கு எதிராக கர்நாடக அரசின் நிலையை நியாயப்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

‘இனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூரிலேயே கூட்டலாம் ‘ என்று தமிழக அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழக நலனுக்கு எதிரானதாக உள்ளது. 

பெங்களூருவில் கூட்டம் நடத்தப்பட்டால் அது கர்நாடகாவுக்கே சாதகமாக அமையும். எனவே கர்நாடகா அல்லாத ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்துவதே முறையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம்.

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி 


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா. ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது. முலம் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்த இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் தொடருமா ? என்பது வரும் போட்டிகளில் தெரியும் இந்நிலையில் . நாளை (ஜுன் 27) நடக்கும் இந்திய அணி,  மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது.

2014 - 2019 க்கும் இடையில் கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது - டி.கே.ரங்கராஜன்

பாஜக ஆட்சியாளர்களும் பெரு முதலாளிகளுமாக சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது என்றும் 
கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், அதன் பலனாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் அளவில் நிதி கைமாறு பெற்றிருக்கிறது 
-டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உறுப்பினர்)
(CPIM)தலைவர் 


மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன்  உரையாறினார்...

கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக மிகக்கடுமையான இந்துத்துவா மதவெறி தாக்குதல் களைக் கட்ட விழ்த்துவிட்டது; காங்கிரஸ் கட்சியின்

பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சி - CPIM(TAMILNADU)

பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க
அரசின் முரட்டுத்தனமான முயற்சி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்து கடுமையான எதிர்வினைகளுக்கு பின்பு அந்த ஆலோசனையை திரும்பப்பெற்றுள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நிர்ப்பந்தித்து வருகிறது. 28.06.2019 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. இதே போன்ற ஆணையை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு தனது துறைகள், நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் தென்னக ரயில்வேயில் இத்தகைய முயற்சியை செய்து உடனடியாக பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முயற்சிக்கு எதிராக குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்! - ராமதாஸ்

கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 
முயற்சியை அரசு கைவிட வேண்டும்!
ராமதாஸ் அறிக்கை


இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை கட்டாயப்பாடமாக்க மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அம்பலமாகியுள்ளன. மாணவர்களின் விருப்பத்திற்கு

தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன
கே. எஸ். அழகிரி அறிக்கை
(தமிழ்நாடு காங்கிரஸ்)


அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவான, மத்திய - மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்துராஜ் மசோதா 73 ஆவது சட்ட திருத்தத்தின்படி 1993 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் சட்டம்

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாத அ.தி.மு.க. அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும்.
- திரு. கே. எஸ். அழகிரி அறிக்கை
(தமிழ்நாடு காங்கிரஸ்) 

கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அ.தி.மு.க. அமர்ந்தது. கடந்த 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என்று உறுதி கூறப்பட்டது.
அதேபோல, 2019 ஜனவரி 25 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன்மூலம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 49 பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூபாய் 10 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் 18, 2019 நிலவரப்படி ரூபாய் 5 ஆயிரத்து 455 கோடி முதலீட்டில் 71,169 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 சதவீத இலக்கு தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கடந்த 2015, 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா ? தொழில் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்பு பெருகியதா ? இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை தர வேண்டும். ஆனால் நடைமுறையில் அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது என்கிற உண்மையை அ.தி.மு.க.வினரால் மறைக்க முடியாது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப் - 4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். தங்களது தகுதிக்கு குறைவான பணியாக இருந்தாலும் ஊதியக்குழு பரிந்துரையின்படி உறுதியான சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இதை விரும்புவதாக கூறுகிறார்கள். இத்தகைய அவலநிலையில் உள்ள தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்றுச் சொல்வதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழகத்தில் நகரங்களில் 58.80 சதவீதமும், கிராமப்புறங்களில் 41.19 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. படித்த தகுதிமிக்க பட்டதாரி இளைஞர்கள் தனியார் உணவகங்களில் இருந்து உணவுகளை டெலிவரி செய்கிற பணியை செய்து வருகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் ஒருநாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் கடுமையாக உழைத்து ரூபாய் 200 முதல் 400 சம்பாதிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் நடத்தப்பட்;ட கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடுமையான வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலையின்மை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சரிகட்டுவதில் தான் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிற வரை முதலீடு வருவதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ, வேலை வாய்ப்பு பெருகுவதற்கோ எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை. ஊழல் நிறைந்த தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாத அ.தி.மு.க. அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும்.

ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் - மு.க.ஸ்டாலின்

"ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் - வேடிக்கை பார்த்த காவல்துறையினருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்"

-  மு.க.ஸ்டாலின் அறிக்கை.
(தி.மு.க தலைவர்)

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் திரு.கோவிந்தராஜ் (இந்து தமிழ் திசை) மற்றும் திரு.நவீன் (ஜூனியர் விகடன்) ஆகியோரை ஈரோடு மேற்குத் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் கே.வி. ராமலிங்கத்தின் மகனும், மற்றும் பல அ.தி.மு.க.வினரும் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்கு

மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. விண்ணப்பம் - வைகோ கண்டனம்

காவிரி தீரத்தில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க
ஓ.என்.ஜி.சி. விண்ணப்பம்
-வைகோ கண்டனம்
(மதிமுக)

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் செயல்படுத்த உள்ள நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்மைத் தொழில் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால்

செவ்வாய், 25 ஜூன், 2019

ஏழை மற்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனை பாதிக்கும் - ராமதாஸ்

சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை 
குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்!
ராமதாஸ் அறிக்கை


பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரை விழுக்காடு வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை மற்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின்

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகம் தீவிர முயற்சி - வைகோ கண்டனம்

மேகேதாட்டுவில் அணை கட்ட
கர்நாடகம் தீவிர முயற்சி

- வைகோ கண்டனம்


காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கீழ் படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமல்

மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி சாம்பியன்

மகளிர் உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.



ஜப்பானின் ஹிரோசிமா நகரில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி! இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை ராணி ரம்பால் ஒரு கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் போட்டது. இதன்பின் ஆட்டம் மிகவும் சுவரஸ்யமாகச் சென்றது. இரு அணிகளும் கோல் போடும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 45-வது நிமிடத்தில் அசத்தான ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பின் 60-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.


முடிவில் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ராணி தேர்வு செய்யப்பட்டார். அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் குர்ஜித் கவுர் (11 கோல்) முதலிடம் பிடித்தார்.வாகை சூடிய இந்திய அணி 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

யாகம் செய்தால்தான் வருண பகவான் மழையை கொடுப்பானா? - ஆசிரியர் கி.வீரமணி

வரலாறு காணாத குடிநீர்ப் பற்றாக் குறை யால் மக்கள் சொல்லொணா அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உரிய வகையில்  தீர்வு காணாமல் பி.ஜே.பி. பாதையில் பக்திப் போதையை ஊட்டி, திசை திருப்பலாம் என்று தமிழக அரசு கனவு கண்டால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதற்குச் சமம் வரலாறு பாடம் கற்பிக்கும் .
- ஆசிரியர் கி.வீரமணி 
(திராவிடர் கழகத் தலைவர்)


தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் குடி தண்ணீர்ப் பஞ்சத்தால் ஏழை, எளிய, நடுத்தர குடிமக்கள் பெரும்பாலோரும், நகரின் புறநகர் பகுதிவாழ் மக்களும் நாளும் அவுதியுறு கிறார்கள். இது திடீரென்று ஏற்பட்டதல்ல. பருவ மழை பொய்த்தது; பெய்த அளவும் வெகு வாகக் குறைந்தது என்பது தெளிவாக மத்திய - மாநில அரசுகளுக்குத் தெரிந்த ஒன்றே!

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பலமுறை சில ஆண்டுகளுக்குமுன் பெய்த மழை வெள்ளப் பெருக்கின்போது, போதிய நீர் மோலண்மைத் திட்டம் கைக்கொள்ளப்படாததால், பெய்த மழை வெள்ளமாகக் கடலுக்குச் சென்று வீணானது. இதை நீர்வளத் துறை மேலாண்மை நிபுணர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் அப்போதே சுட்டிக்காட்டியும் இருக்கின்றனர்!

இந்து அறநிலையத் துறையின் சட்ட விரோத ஆணை