புதன், 6 அக்டோபர், 2021

1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மின்னணு-சொத்து அட்டைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வாமித்வா திட்ட பயனாளிகளிடம், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் கீழ் 1,71,000 பயனாளிகளுக்கு, மின்னணு சொத்து அட்டைகளை பிரதமர் வழங்கினார். மத்திய அமைச்சர்கள், மத்திய பிரதேச முதல்வர், எம்.பி.க்கள், எம்எல்.ஏ.க்கள், பயனாளிகள், கிராம, மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹாண்டியா, ஹர்தா பகுதியைச் சேர்ந்த திரு பவனிடம் கலந்துரையாடிபோது, சொத்து அட்டைகளை பெற்றபின் அவரது அனுபவத்தை பிரதமர் கேட்டார்.  இந்த சொத்து அட்டை மூலம் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கடன் பெற முடிந்ததாகவும் மற்றும் அதன் மூலம் கடை கட்டி வாடகைக்கு விட்டு, கடனை திருப்பிச் செலுத்தி வருவதாகவும், திரு பவன் தெரிவித்தார். டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனைகளை அதிகரிக்கும்படி அவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். கிராமத்தில் ட்ரோன் மூலம் நடந்த கணக்கெடுப்பு அனுபவம் குறித்து திரு நரேந்திர மோடி ஆலோசித்தார். இந்த சொத்து அட்டையை எளிதாக பெற்றதாகவும், அதன்பின் அவரது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டதாகவும், திரு பவன் கூறினார்.

மக்களின் வாழ்க்கையை, எளிதாக்குவதை அதிகரிக்க அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் கூறினார்.  

பிரதமரின் ஸ்வாமித்வா திட்டம் மூலம் சொத்து அட்டை பெற்ற திந்தோரி பகுதியைச் சேர்ந்த திரு பிரேம் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ட்ரோன் மூலம் சொத்தை படம்பிடிப்பதற்கு எடுத்துக்கொண்ட காலம் குறித்து பிரதமர் விசாரித்தார். சொத்து அட்டையை பெற்றபிறகு, அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து திரு பிரேம் சிங்கிடம் அவர் கேட்டார்.  அவரது வீட்டை கான்கிரீட் வீடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக திரு பிரேம் கூறினார். இந்த திட்டம் பற்றி அவர் எப்படி அறிந்தார் என அவரிடம் பிரதமர் கேட்டார். ஏழைகளின் சொத்துரிமை பாதுகாப்பு குறித்து, ஸ்வாமித்வா திட்டம் பிரச்சாரத்துக்குப்பின், அது பெறப்பட்டது குறித்தும் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

இந்த சொத்து அட்டை பெற்ற பிறகு, புத்னி-செகோர் பகுதியைச் சேர்ந்த திருமதி வினிதா பாயிடம், அவரது திட்டங்கள் குறித்து பிரதமர் விசாரித்தார். வங்கியிலிருந்து கடன் பெற்று, கடை திறக்க விரும்புவதாக அவர் கூறினார்.  இந்த திட்டத்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் குறையும் எனவும், நாடு முன்னேற்றம் அடையும் எனவும் பிரதமர் கூறினார்.

நவராத்திரியை முன்னிட்டு, அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

பயனாளிகளிடம் பேசிய பிரதமர், பிரதமரின் ஸ்வாமித்வா திட்டம் தொடங்கியதன் மூலம், வங்கியில் கடன்கள் பெறுவது எளிதாகி விட்டதாக பிரதமர் கூறினார். இத்திட்டத்தை விரைவாக அமல்படுத்தியதற்காக மத்தியப் பிரதேச அரசை அவர் பாராட்டினார். மத்தியப் பிரதேசத்தில் இன்று, 3000 கிராமங்களில் 1.70 லட்சம் குடும்பங்கள் சொத்து அட்டைகளை பெற்றுள்ளனர்.  இந்த சொத்து அட்டை அவர்களுக்கு வளத்தை கொண்டு வரும் வாகனம் என பிரதமர் கூறினார். 

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என அடிக்கடி கூறப்படுகிறது, ஆனால், சுதந்திரத்துக்குப்பின் பல தசாப்தங்களுக்குப் பிறகும், கிராமங்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் சக்தி, நிலம் மற்றும் கிராம மக்களின் வீடுகளை அவர்களின் வளர்ச்சிக்காக முழுவதுமாக பயன்படுத்த முடியவில்லை. மாறாக, கிராம நிலங்கள் மற்றும் வீடுகள் மீதான தகராறுகள், சண்டைகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால்   கிராம மக்களின் சக்தி, நேரம், பணம் வீணடிக்கப்பட்டது. இப்பிரச்சினை குறித்து மகாத்மா காந்தி எவ்வாறு கவலைப்பட்டார் எனவும், இதற்காக குஜராத்தில் தாம் முதல்வராக இருந்தபோது ‘சமரச கிராம பஞ்சாயத்து திட்டம்’ அமல்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 

கொரோனா காலத்தில் கிராமங்களின் செயல்பாட்டை பிரதமர் பாராட்டினார். இந்திய கிராமங்கள் ஒரே இலக்குடன் எவ்வாறு இணைந்து செயல்பட்டு, பெருந்தொற்றை மிகுந்த விழிப்புடன் சமாளித்ததையும் அவர் குறிப்பிட்டார். தனிமையில் வசிப்பதற்கான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடு செய்தது, வெளியிடங்களில் இருந்து வந்தவர்களுக்கான வேலை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்  இந்திய கிராமங்கள் முன்னணியில் இருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் விடா முயற்சியுடன் பின்பற்றப்பட்டது.

சிக்கலான நேரங்களில், தொற்றை கட்டுப்படுத்துவதில் கிராமங்கள் முக்கிய பங்காற்றின என பிரதமர் கூறினார்.

நாட்டின் கிராமங்கள், கிராம சொத்துக்கள், நிலம் வீட்டு ஆவணங்களை நிச்சயமற்றதன்மை மற்றும் அவநம்பிக்கையில் இருந்து விடுவிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

ஸ்வாமித்வா திட்டம் சொத்து ஆவணங்கள் வழங்கும் திட்டம் மட்டும் அல்ல, இது வளர்ச்சிக்கான புதிய மந்திரம் மற்றும் இது நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமங்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது.  கணக்கெடுப்பு பணிக்காக கிராமங்களில் பறக்கும் ட்ரோன், இந்திய கிராமங்களுக்கு புதிய விமானத்தை அளிக்கின்றன’’ என பிரதமர் கூறினார்.

ஏழைகள் மற்றவரை சார்ந்திருப்பதில் இருந்து விடுவிக்க, கடந்த 6-7 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது என பிரதமர் கூறினார். தற்போது, சிறு விவசாய தேவைகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது என அவர் கூறினார்.  ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசு அலுவலகங்களில் ஏழைகள் அலைந்து திரிந்த காலம் எல்லாம் சென்று விட்டது. தற்போது, அரசு ஏழைகளிடம் வந்து அதிகாரம் அளிக்கிறது. துணை நபரின் உத்திரவாதம் இன்றி, மக்களுக்கு கடன் வழங்குவதில் முத்ரா திட்டம் முன்மாதிரியாக உள்ளது என அவர் கூறினார். கடந்த 6 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு, சுமார் 29 கோடி கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாட்டில்  இன்று 70 லட்சம் சுயஉதவி குழுக்கள் பணியாற்றுகின்றன, ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்கள் வங்கி கணக்கு பெற்றுள்ளனர்.  துணை நபர் உத்திரவாதம் இல்லாமல், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேபோல், 25 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளனர்.

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள், நோயாளிகள் மற்றும் தொலைதூர பகுதிகள் அதிக பயன்களை பெறும் வகையில், பல கொள்கை முடிவுகள்  எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.  இந்தியாவில் ட்ரோன் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் தொடர்புடை ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், அதிக அளவிலான நவீன ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன மற்றும் முக்கியமான துறையில் இந்தியா தற்சார்புடையதாகுகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்கள் தயாரிக்க விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மென்பொருள் நிபுணர்கள் மற்றும் தொடக்க நிறுவன தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். ‘‘ இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் திறன் ட்ரோன்களுக்கு உள்ளது’’ என பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக