திங்கள், 31 மே, 2021

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டிற்கு குஜராத் மாநிலத்திற்கு ரூ. 3,411 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு


ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை அடைவதற்காக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய   இயக்கம் 2021-22-ஆம் ஆண்டிற்கு குஜராத் மாநிலத்திற்கு ரூ. 3410.61 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல் பகுதியாக ரூ. 852.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் குடிநீர் திட்டத்திற்காக சுமார் நான்கு மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அனுமதி அளித்துள்ளார். கடந்த 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 390.31 கோடியாக இருந்த மத்திய அரசின் ஒதுக்கீடு, 2020- 21-ஆம் ஆண்டில் ரூ. 883.08 கோடியாக அதிகரித்தது.

கொரோனா முன்களப் போராளிகளுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாக அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.


கொரோனா முன்களப் போராளிகளுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாக அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த புதுமை நிறுவனமான இந்திரா வாட்டர் தயாரித்துள்ள கிருமி நாசினி அமைப்பு முறை, முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்கும் சிறப்பம்சம் பெற்றுள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டுக்குள், புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்


 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்,  புகையிலை பொருட்களை தவிர்க்கும் உறுதிமொழியை தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

கொரோனா: மாற்றுத் திறனாளிகள், அமைப்பு

சாரா தொழிலாளர்களுக்கு நிதி வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகளும், அமைப்பு சாராத் தொழிலாளர்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.- தொல். திருமாவளவன்

பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

 தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.- கே.எஸ்.அழகிரி


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மே 28 அன்று காணொளி வாயிலாக ஜி.எஸ்.டி. மன்றத்தின் 43வது கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 31 மாநில நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 16 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 31 மாநிலங்களில் 17 இல் பா.ஜ.க.வும், 14 இல் பா.ஜ.க. அல்லாத ஆட்சியும் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்குகிற வகையில் மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளைஞர்கள் தான் இந்தியாவின் சொத்துகள் ஆவார்கள். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். - DR. அன்புமணி ராமதாஸ்

 புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும்

மக்களுக்கு அரசுகள் உதவ வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில்  சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற உதவ வேண்டியது அரசுகளின் கடமையாகும்.

ஞாயிறு, 30 மே, 2021

கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.- வைகோ பாராட்டு


அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! - வைகோ பாராட்டு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

தமிழ்நாட்டில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது; பெரிய தொழிற்சாலைகளையும் மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பு: குறையும்

கொரோனா அதிகரிக்க வழி தேடக்கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில்  கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையிலான இந்த முடிவு மிகவும் ஆபத்தானது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (30.05.2021) கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கழகத்தின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு: ஜம்முவில் 7 பஞ்சாயத்துகளில் கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 7 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் 7 பஞ்சாயத்துகளில் நடந்த கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்கள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை அருகே எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் (MV X-Press Pearl) கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் அயராது பணியாற்றுகின்றன.


இலங்கை அருகே எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் அயராது பணியாற்றுகின்றன.

இலங்கையின் கொழும்பு அருகே எம்.வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில், இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை கடந்த 25ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தின் (RINL’s ) எஃகு ஆலை அமைத்துள்ள 300 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) எஃகு  ஆலை அமைத்துள்ள 300 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், எஃகு துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே, ஆந்திர துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஏ. காளி கிருஷ்ணா சீனிவாஸ், மத்திய அரசு மற்றும் ஆர்ஐஎன்எல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கோவா உதய தினத்தை முன்னிட்டு, பழைய கோவாவில், இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.


கோவா உதய தினத்தை முன்னிட்டு, பழைய கோவாவில், இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவா  முதல்வர் திரு பிரமோத் சாவந்த், ஆயுஸ் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கொரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு நிவாரணம்: தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவிப்பு


 கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின் அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும் இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூக பாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்க நிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத் துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும் வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும் வழங்கப்படுகிறது.

கொவிட் தேசிய தடுப்பூசித் திட்டம் – சுமார் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் கிடைக்கும்


 கொவிட் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் ஜூன் மாதத்திற்கு சுமார் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். மேலும் ஜூன் மாதம் முழுவதிற்கும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2021 இல் தேசிய கொவிட் தடுப்பூசி திட்டத்திற்கு 7,94,05,200 டோஸ்கள் கிடைத்தன

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் (ECLGS) விரிவுபடுத்தப்பட்டது: ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க புதிய திட்டம்


 கொவிட் இரண்டாம் அலை, பல துறைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அரசு  மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

1. இசிஎல்ஜிஎஸ் 4.0: மருத்துவமனைகள்/ மருத்துவ கல்லூரிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க 7.5 சதவீத வட்டியில் ரூ.2 கோடி வரை 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் பெற முடியும்;

இந்திய கடற்படையின் ( ALH Mk III ) ரக விமானத்தில் மருத்துவ ஐசியு வசதியை Hindustan Aeronautics Limited (HAL) பொருத்தியுள்ளது.


 இந்திய கடற்படையின் ஏஎல்எச் மார்க் 3 ரக விமானத்தில் மருத்துவ ஐசியு வசதியை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்(எச்ஏலெ்) பொருத்தியுள்ளது.

இந்திய கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் ஹன்சாவில்  உள்ள ‘ஏஎல்எச் மார்க் 3’ ரக விமானத்தில் ஐசியு வசதிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 3 உள்ளம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை இல்லங்களில் கொண்டாடுவோம்.- மு.க.ஸ்டாலின் கடிதம்



"உள்ளம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை இல்லங்களில் கொண்டாடுவோம்" - தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

நம் உயிருடன் கலைந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஜூன் 3 - நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். தி.மு.கழகத்தினர்க்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம்  காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள். 

தேசம் எவ்வாறு தன் முழுபலத்தோடு கோவிட் 19க்கு எதிராகப் போராடி வருகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். - "மனதின் குரல்" பிரதமர் திரு.நரேந்திர மோடி


 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   தேசம் எவ்வாறு தன் முழுபலத்தோடு கோவிட் 19க்கு எதிராகப் போராடி வருகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம்.  கடந்த 100 ஆண்டுக்காலத்தின் மிகப்பெரிய பெருந்தொற்று இது;  இந்த pandemic ஆன இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே பாரதம், பல இயற்கைப் பேரிடர்களையும் உறுதிப்பாட்டோடு எதிர்கொண்டும் இருக்கிறது.  இதற்கிடையே அம்ஃபான் புயல் வந்தது, நிஸர்க் புயல் வந்தது, பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, சிறிய-பெரிய பூகம்பங்கள் பல ஏற்பட்டன, நிலச்சரிவுகள் நிகழ்ந்தன.  

சிஎஸ்ஐஆர் (CSIR) - சிஎம்ஈஆர்ஐ (CMERI) உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பம் குறித்த இணைய கருத்தரங்கம்.


 சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பம் குறித்த இணைய கருத்தரங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு கிளையுடன் இணைந்து 2021 மே 29 அன்று நடத்தப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் தொடர்புடைய சமூகத்தினருக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கிய பேச்சாளராக கலந்து கொண்ட சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ இயக்குநர், பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி, சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும், எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.

அனைத்து அரசு பணியாளர்களும் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்


 அனைத்து அரசு பணியாளர்களும் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவுறுத்துகிறது என்று வடக்கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது.

கொவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட் தடுப்பு மருந்து கிடைப்பதற்காக, கொவின் தளத்தை மத்திய அரசு உருவாக்கியது.


இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட் தடுப்பு மருந்து கிடைப்பதற்காக, கொவின் தளத்தை மத்திய அரசு உருவாக்கியது.

கொவின் தளம் டிஜிட்டல் பிரிவினையை உருவாக்குவதாகவும், சில பிரிவு மக்களுக்கு மட்டுமே பயன்படுவதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் தவறானவை மற்றும் உண்மையை முழுவதுமாக வெளிப்படுத்தாதவை ஆகும்.

இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அறிமுகப்படுத்தியது.


வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை  கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அறிமுகப்படுத்தியது.

சனி, 29 மே, 2021

மலர்வதற்கும், கனியாவதற்கும் அதிக குளிர்ந்த நேரங்கள் தேவைப்படாத வகையில் சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் புதுமையான ஆப்பிள் வகையை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.


 மலர்வதற்கும், கனியாவதற்கும் அதிக குளிர்ந்த நேரங்கள் தேவைப்படாத வகையில் சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் புதுமையான ஆப்பிள் வகையை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

கோடைக்காலத்தில், 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆப்பிள் விளைகிறது.

கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது


 கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, "பால் ஸ்வராஜ் (கொவிட்-பராமரிப்பு இணைப்பு)" எனும்  கண்காணிப்பு இணையதளத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது.

ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நலனை தாமதமின்றி உறுதி செய்வதற்காக ஆணையத்தின் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிராணவாயுவின் அளவு குறைந்தால், வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகள் ப்ரோனிங் முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் சுவாசம் சீரடைவதுடன், பிராணவாயுவின் அளவு அதிகரிக்கப்படும்.


 கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிடையே பிராணவாயுவின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இது பற்றி விளக்கம் அளித்த பெங்களூரு தேசிய காசநோய் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்  ரவிச்சந்திரா, “80% பேருக்கு கொவிட் பாதிப்பு லேசாகவே உள்ளது. மிதமான பாதிப்பு ஏற்படும் 15% பேருக்கு பிராணவாயுவின் அளவு 94%க்கும் குறைவாக இருக்கக்கூடும்.  தீவிர பாதிப்பு ஏற்படும் மீதமுள்ள 5% பேர், நொடிக்கு 30க்கும் அதிகமான சுவாச வீதம் மற்றும் 90%க்கும் குறைவான பிராணவாயு அளவுகளோடு பாதிக்கப்படக்கூடும்”, என்று கூறுகிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி நாட்டில் பெரும் மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

 


பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி நாட்டில் பெரும் மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நாள் ஒன்றுக்கு 33000 குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதைவிட பத்து மடங்கு கூடுதலாக, இன்று நாளொன்றிற்கு 3,50,000  குப்பிகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை கழகத்தினர் உருவாக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்



"தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை கழகத்தினர் உருவாக்க வேண்டும்"

- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்! - மு.க. ஸ்டாலின்



ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கும் - ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரும்பணியாற்றிய திரு. காளியண்ணக் கவுண்டர் அவர்களின் மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு.- மு.க.ஸ்டாலின்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின்
இரங்கல் செய்தி

இளம் வயதில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தவரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பழம்பெரும் தலைவருமான திருச்செங்கோடு திரு. டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் தனது 101-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் கலந்துரையாடினார்.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்  சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்திலேயே கட்டுப்பாடான உரிமைகள் இருக்கிறபோது, சமூக வலைதளங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடற்று செயல்பட முடியும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

இந்திய அரசியலமைப்பு சாசனத்திலேயே கட்டுப்பாடான உரிமைகள் இருக்கிறபோது, சமூக வலைதளங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடற்று செயல்பட முடியும்?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கும் எழுதிய கடிதத்தின்  சுறுக்கம்.   

வெள்ளி, 28 மே, 2021

என். ரங்கசாமி அவர்களை ‘பொம்மை முதல்வராக்கி’ பாஜக-வே புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆளுவது எனும் நிலையை உருவாக்கும் சூழ்ச்சி ? - கி.வீரமணி

 புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக நுழையும் பா.ஜ.க.வின் வித்தைகள்: என். ரங்கசாமி அவர்களை ‘பொம்மை முதல்வராக்கி’ பா.ஜ.க.வே ஆளுவது எனும் நிலையை உருவாக்கும் சூழ்ச்சி ? - கி.வீரமணி

‘எதிர்த்து ஒழிக்க முடியாத குடியை உறவாடிக் கெடு’ என்பது கிராமங்களில் புழங்கும் ஓர் அனுபவப் பழமொழி - அதனை இன்றைய அரசியலைப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டுமானால், புதுச்சேரியில் பா.ஜ.க. நடத்தும் அரசியல் ‘சித்து விளையாட்டையும்‘ ‘எத்துவாளித்தனத்தையும்‘ பார்த்தாலே புரிந்துவிடும்.

பா.ஜ.க. மறைமுக ஆட்சிக்கு முன்னோட்டமா?

கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம்



கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது உரை

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

டான் பாஸ்கோ பள்ளியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையும், பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தையும் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையும், பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தையும் தொடங்கி வைத்தார்.

கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு இலட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்திற்குத் தேவையான பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் உத்தரவு.


கொரோனா நோய் தடுப்புப்பணியில் திருக்கோயில்கள் சார்பாக மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் ஒரு இலட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்திற்குத் தேவையான பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் உத்தரவு.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினைப் போக்கும் விதமாக திருக்கோயில்களில் இருந்து உணவுப்பொட்டலங்களை உணவு தேவைப்படுவோருக்கு வழங்கிடுமாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் ஏற்கனவே ஆணையிடப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 19.05.2021 அன்று கொரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடகத்துடன் பேசுவது நமது உரிமைகளை இழக்கவும், சமரசம் செய்து கொள்வதற்கும் மட்டுமே வழிவகுக்கும். - DR.அன்புமணி ராமதாஸ்

 மேகதாது அணை குறித்து கர்நாடக

அரசுடன் பேச்சு நடத்தக் கூடாது! - DR.அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல் காவிரியில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம்  காட்டி வரும் நிலையில், அந்த அரசுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழக அரசு கூறுவது வருத்தளிக்கிறது.

பால் உற்பத்தியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைத்திருப்பது பெரும் சுரண்டலாகும்.- DR.S.ராமதாஸ்


தனியார் நிறுவன பால் கொள்முதல்

விலை சுரண்டலை தடுக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்திக் கொண்டு பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் கணிசமாக குறைந்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் பலவீனத்தை  பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைத்திருப்பது பெரும் சுரண்டலாகும்.

யாத்திரிகர்களுக்கு சார் தாம் (Char Dhams ) தலங்களுடன் விரைவான, பாதுகாப்பான மற்றும் சௌகரியமான இணைப்பு வழங்கப்பட வேண்டும்.- திரு பியூஷ் கோயல்


 “யாத்திரிகர்களுக்கு சார் தாம் தலங்களுடன் விரைவான, பாதுகாப்பான மற்றும் சௌகரியமான இணைப்பு வழங்கப்பட வேண்டும்”, என்று மத்திய ரயில்வே வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

சார் தாம் திட்டங்களுக்கான இறுதி மைல் இணைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1141 டேங்கர்களில் 18,980 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.


 பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1141 டேங்கர்களில் 18,980 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 284 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 20 டேங்கர்களில் 392 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 4 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

வஜ்ர கவச் (Vajra Kavach) எனப்படும் N-95 முகக்கவசங்கள்/தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தூய்மைப்படுத்தும் முறை மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.

 

மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான இந்திரா வாட்டர் உருவாக்கியுள்ள என்-95 முகக்கவசங்கள்/தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தூய்மைப்படுத்தும் முறை மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.

வஜ்ர கவச் என்று அழைக்கப்படும் இந்த கிருமிநாசினி அமைப்பு, என்-95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ பொருட்களை மறுபடியும் பயன்படுத்தும் வகையில் கிருமிகளை நீக்கி, அதிகப்படியான கொவிட்-19 உயிரி-மருத்துவ கழிவுகளை குறைத்து, பெருந்தொற்றை எதிர்கொள்ளும் செலவுகளை குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறது.

ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம், துரித தொலைதொடர்பிற்காக தொழில்நுட்பம் மற்றும் செல்பேசித் தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தும்.


 கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில் எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், “பெருந்தொற்றின் மறுபக்கம்... ஓர் அறிவியல் கொள்கை இணைப்பு” என்ற இணையவழி கருத்தரங்கில் தெரிவித்தனர்.

உயிரி தொழில்நுட்பத்துறை (Biotechnology ) மற்றும் உயிரிமருந்துகள் (Biomedicine) துறைகளில் உருவாகி வரும் பிரச்சனைகள் குறித்து, நான்காவது பிரிக்ஸ் (BRICS ) செயற் குழு கூட்டத்தில் நிபுணர்கள் விவாதித்தனர்.


 உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உயிரிமருந்துகள் துறைகளில் உருவாகி வரும் பிரச்சனைகள் குறித்து, நான்காவது பிரிக்ஸ் செயற் குழு கூட்டத்தில் நிபுணர்கள் விவாதித்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழு  கூட்டம் கடந்த மே 25 மற்றும் 26ம் தேதிகளில் காணொலி வாயிலாக நடைப்பெற்றது. இதில் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.

எரிசக்தி துறையில் ஆராய்ச்சிக்கான எனி சர்வதேச விருதை ( Eni International Award) பாரதரத்னா பேராசிரியர் ராவ் பெற்றார்


 எரிசக்தி முன்கள விருது என்று அழைக்கப்படும் சர்வதேச எனி விருது 2020-ஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் மின்சார சேமிப்பு ஆகிய துறைகளில் தாம் செய்த ஆராய்ச்சிக்காக பாரதரத்னா பேராசிரியர் சி என் ஆர் ராவ் பெற்றுள்ளார்.

எரிசக்தி ஆராய்ச்சியில் நோபல் பரிசு என  இது கருதப்படுகிறது.

மனித குலத்தின் நன்மைக்கான ஒரே எரிசக்தி ஆதாரம் ஹைட்ரஜன் எரிசக்தி என்று கருதி அதில் முழு முனைப்புடன் பேராசிரியர் ராவ் பணியாற்றி வருகிறார். ஹைட்ரஜன் சேமிப்பு, பெட்ரோ ரசாயனம் மற்றும் எலக்ட்ரோ ரசாயனம் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி, உலோகம் சாராத வினையூக்கம் போன்றவை அவரது பணியின் சிறப்பம்சங்களாகும்.

2021 அக்டோபர் 14 அன்று ரோமில் உள்ள குரினால் மாளிகையில் இத்தாலி குடியரசின் அதிபர், செர்ஜியோ மட்டாரெல்லா பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் எனி விருதுகள் 2020 வழங்கப்படும்.

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விருதான எனி விருது, எரிசக்தி ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதையும், புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். ரொக்கப்பரிசு மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தங்கப்பதக்கம் ஆகியவை வெற்றியாளருக்கு வழங்கப்படும்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் வாயிலாக யாஸ் புயலினால் எஃகு உற்பத்தி மற்றும் பிராணவாயுவின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் வாயிலாக யாஸ் புயலினால் எஃகு உற்பத்தி மற்றும் பிராணவாயுவின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மத்திய எஃகு அமைச்சகமும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், யாஸ் புயலினால் எஃகு மற்றும் பிராணவாயு உற்பத்தி பாதிப்படையக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த மே 23-ஆம் தேதி முக்கிய எஃகு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின. மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஆலைகள் மட்டுமே பாதிப்படையும் என்பதால் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஒடிசாவின் கலிங்காநகர், அங்குலில் உள்ள பிராணவாயு ஆலைகளைச் சார்ந்துள்ள மாநிலங்களுக்கு தற்காலிகமாக 2-4 நாட்கள் ஜம்ஷெட்பூரின் டாட்டா ஆலையிலிருந்து பிராணவாயுவை வழங்கவும் திட்டமிடப்பட்டது.

 

உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கானப் பாதையை வகுத்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்.- மு.க.ஸ்டாலின்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவதுபோல அவருக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குறுப்பு அவர்களின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

வியாழன், 27 மே, 2021

தமிழகத்தில் தினமும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களைப் பறி கொடுப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 வைரஸ் ஒன்று, சிகிச்சை இரண்டு, மூன்றா?

கரோனா இறப்பு விகிதங்களைத் தடுக்க முறையான சிகிச்சை வழிகாட்டுதல்  வேண்டும்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை தினமும் 36,000 என்றிருந்தது; உயிரிழப்புகள் 500-ஐ தொட்டிருந்தது. ஆனால், இந்த வாரத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்தும், கோவை உள்ளிட்ட பல புறநகர்களிலும், கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மிக மிகக் கவலை அளிக்கிறது.  அதுவும் பன்னெடுங்காலமாக வலுவான மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழகத்தில் தினமும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களைப் பறி கொடுப்பது என்பதை  எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.