திங்கள், 10 மே, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு சிபிஐ(எம்) வரவேற்பு!

 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு சிபிஐ(எம்) வரவேற்பு! 

ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் சிகிச்சை முறையையும் பயன்படுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும்,  வியாசர்பாடியை தொடர்ந்து இதே போல் மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

முந்தைய அலையில் கொரோனா சிகிச்சைக்கு கொரோனா நோயாளிகளுக்கு தமிழகத்தில் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவம் மற்றும் கபசுர குடிநீர் நல்ல பலனை தந்துள்ளது. அதுபோல ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் மருந்தும் உதவியாக அமைந்தது. இதனால் கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுபடுத்தப்பட்டதுடன் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டன. ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கு தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை முறையுடன், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் துறையில் உள்ள வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்து இந்த சிகிச்சை முறைகளையும் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக