வெள்ளி, 12 ஜூன், 2020

சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்


சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை இன்று திறந்து வைத்து மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவின் பெயரை சூட்டினார் தமிழக முதல்வர். எடப்பாடி கே.பழனிசாமி

புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 

மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 

பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமிட்டர் தூரம் கொண்டது.

அந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7-ம் தேதி திறந்துவைத்தார். குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலம் கட்டும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இன்று திறந்து வைக்கப்பட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக