நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 38.18 கோடிக்கும் அதிகமான (38,18,97,610) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், 23,80,080 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 36,48,77,756 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.70 கோடி (1,70,19,854) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
- நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
- நாளொன்றுக்கு புதிய பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 43,393 ஆக பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,58,727ஆகக் குறைந்துள்ளது.
- நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.49 சதவீதமாகும்.
- நம் நாட்டில் இதுவரை 2,98,88,284 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் 44,459 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.
- குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.36 சதவீதமாக உள்ளது.
- தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 18 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.42 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 42.70 கோடியாகப் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக