பணியாளர் நிர்வாகம் மற்றும் ஆளுகை சீர்திருத்தங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசின் பணியாளர், பொதுமக்கள் குறைத்தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு துறை மற்றும் காம்பியா குடியரசின் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் பொதுசேவை ஆணையம் ஆகியவை 2021 ஜூலை 8 அன்று கையெழுத்திட்டன.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் சார்பாக அதன் செயலாளர் திரு சஞ்சய் சிங் மற்றும் காம்பியா பொதுசேவை ஆணையத்தின் சார்பாக அதன் தலைவர் மேன்மைமிகு திரு லாமின் ஈ சிங்காட்டே ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
காம்பியா நாட்டின் பொது சேவை ஆணையம், வெளியுறவு அமைச்சகம், செனகலில் உள்ள இந்திய தூதரகத்தின் தூதர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
அரசின் செயல்திறன் மேலாண்மை அமைப்பை மேம்படுத்துதல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், மின்னணு மூலம் அரசுப் பணிகளுக்கு ஆட்தேர்வு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கில் கூட்டுப் பணி குழுவின் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக