இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 35 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 46,04,925 முகாம்களில் 35,12,21,306 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 7-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
- நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,85,350 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.59 சதவீதமாகும்.
- சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,183 சரிந்துள்ளது.
- தொடர்ந்து 52-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் குணமடைந்தனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 9,228 பேர் குணமடைந்தனர்.
- இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 18,38,490 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,82,54,953 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.44 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 27 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக